இலங்கை செய்தி

கொழும்பில் கொல்லப்பட்ட பிரபல வர்த்தகர் – அறுவருக்கு மரண தண்டனை உறுதி

  • August 8, 2024
  • 0 Comments

கொழும்பு பம்பலப்பிட்டி பிரதேசத்தில் வசித்து வந்த கோடீஸ்வர வர்த்தகரான மொஹமட் ஷியாம் என்பவரை 2013 ஆம் ஆண்டு கடத்திச் சென்று கொலை செய்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன மற்றும் அவரது மகன் ரவிந்து குணவர்தன உள்ளிட்ட அறுவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வால் வழங்கப்பட்ட மரண தண்டனையை உயர் நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது. வாஸ் குணவர்தன மற்றும் ஏனைய பிரதிவாதிகள் தம்மை […]

இலங்கை

தரமற்ற மருந்து இறக்குமதி: கெஹலிய ரம்புக்வெல்ல மீண்டும் விளக்கமறியலில்

தரமற்ற இம்யூன் குளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் தொடர்புடைய முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வழக்கில் தொடர்புடைய மூன்று (03) சந்தேகநபர்களுடன் ரம்புக்வெல்ல ஆகஸ்ட் 22 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதேவேளை, சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்த மற்றும் அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் டொக்டர் சமன் ரத்நாயக்க ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. பிரதிவாதிகள் இன்று (ஆகஸ்ட் 08) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த […]

இலங்கை செய்தி

நல்லூர் வீதித்தடை – மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

  • August 8, 2024
  • 0 Comments

நல்லூர் கந்தசுவாமி ஆலய சூழலில் அமைக்கப்பட்டுள்ள வீதி தடைகள் தொடர்பில் கலந்துடையாடுவதற்கு யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளர் மற்றும் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோருக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் த கனகராஜ் அழைப்பு விடுத்துள்ளார். யாழ்ப்பாண மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட பருத்தித்துறை வீதியில் யாழ்ப்பாண மாநகர சபையினால் பொதுமக்களுக்கு உபிராபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பாதை தடை தொடர்பில் பல தரப்பினராலும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய காரியபாலயத்தின் […]

இலங்கை செய்தி

கொடிச்சீலை கையளிப்பு – நல்லூரில் நாளை கொடியேற்றம்

  • August 8, 2024
  • 0 Comments

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும்நிகழ்வு இன்று இடம்பெற்றது. செங்குந்தர் பரம்பரையினரால் நல்லூர் ஆலயக் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை சம்பிரதாயப் பூர்வமாக ஆலயத்தில் ஒப்படைக்கப்படுவது பாரம்பரிய வழக்கமாகும். அந்தவகையில் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள கொடிச்சீலை உபகாரரின் வீட்டில் இருந்து கொடிச்சீலை யாழ் சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு அருகில் உள்ள வேல்மடம் முருகன் ஆலயத்திற்கு எடுத்துவரப்பட்டு அங்கு விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது. […]

இலங்கை செய்தி

ஜனாதிபதி தேர்தல் – தமிழ் தரப்பின் பொது வேட்பாளர் அறிவிப்பு

  • August 8, 2024
  • 0 Comments

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி ந.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார். அத்தோடு பா.அரியநேத்திரன் சுயேட்சை வேட்பாளராகவே ஜனாதிபதி தேர்தலில் களம் இறங்கவுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை […]

ஐரோப்பா

போர்ச்சுகலில் வீடு இன்றி தவிக்கும் புலம்பெயர்ந்தோர்

போர்ச்சுகலில் புலம்பெயர்ந்தோர் குறிப்பாக வீட்டு நெருக்கடியால் பாதிக்கப்படுகின்றனர் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத குடியேறியவர்களில் ஏறக்குறைய 20% பேர் நெரிசலான தங்குமிடங்களில் வாழ்கின்றனர் இடம்பெயர்வு கொள்கையில் ஏற்படும் மாற்றங்கள் அவர்களை மேலும் பாதிப்படையச் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், போர்ச்சுகல் மேற்கு ஐரோப்பாவின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக உள்ளது,

ஆசியா

பங்களாதேஷில் ஆட்சி கலைப்புக்குப் பின்னும் நீடித்த வன்முறைகளில் 232 பேர் பலி!

  • August 8, 2024
  • 0 Comments

பங்களாதேஷில் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு திங்களன்று (ஆக.5) கவிழ்ந்ததில் இருந்து நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களில் மட்டும் 232 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இதுவரையிலான போராட்டம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 560 ஆக அதிகரித்துள்ளது. பங்களாதேஷில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம், ஒரு நாட்டையே நிலைகுலையச் செய்தது. இந்தப் போராட்டம் மிகப் பெரிய வன்முறையாக வெடித்தது. இந்தப் போராட்டம் ஜூலை மத்தியில் தொடங்கியது. பின்னர் அமைதி நிலையான சூழல் திரும்பியது. அதன்பின்னர் […]

இலங்கை

இலங்கை ஜனாதிபதி வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: கவலைகளை எழுப்பும் தேர்தல் ஆணையம்

இலங்கையின் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க, ஜனாதிபதி வேட்பாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், நீண்ட வாக்குச் சீட்டுகளில் சாத்தியமான சிக்கல்கள் குறித்து கவலைகளை எழுப்பியுள்ளார். வாக்குச் சீட்டுகளை அச்சிடப் பயன்படுத்தப்படும் இயந்திரங்களுக்கு நீளத்தின் அடிப்படையில் வரம்பு இருப்பதாக ரத்நாயக்க விளக்கமளித்துள்ளார். இந்த வரம்பை மீறினால், வாக்குச் சீட்டின் வடிவம் மாற்றப்பட வேண்டும், இது தேர்தல் செயல்பாட்டின் போது குறிப்பிடத்தக்க நடைமுறைச் சவால்களுக்கு வழிவகுக்கும். “வாக்குச்சீட்டு நீண்டதாக இருந்தால், அது பல நடைமுறை சிக்கல்களுக்கு வழிவகுக்கும். […]

இலங்கை

இலங்கை ஜனாதிபதி தேர்தல் : 24 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தினர்!

  • August 8, 2024
  • 0 Comments

இந்த ஆண்டு இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. இதன்படி, ஜனாதிபதித் தேர்தலுக்கு 11 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான பிணைப் பணத்தை வைப்பிலிடுவதற்கான காலம் எதிர்வரும் 14ஆம் திகதி நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையவுள்ளது. இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பது தொடர்பில் மக்களை தெளிவுபடுத்த தேர்தல்கள் ஆணைக்குழு செயற்பட வேண்டுமென வணக்கத்திற்குரிய […]

புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

கலர் ஒரு மேட்டரே இல்ல… சுந்தரி சீரியல் கேப்ரில்லாவின் ஸ்டைலிஷ் போட்டோஸ்

  • August 8, 2024
  • 0 Comments

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சுந்தரி தொடரில் நடிகை கேப்ரில்லா செல்லஸ் நடித்துவருகிறார். நடிகை கேப்ரில்லா செல்லஸ் சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆக இருப்பவர் ஆவார். இவர் சமீபத்தில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். சன் டிவியில் கிராமத்து கதாபாத்திரங்களில் நடித்துவரும் கேப்பிரில்லா, மாடல் ஆக சின்னத்திரை நடிகை வாழ்க்கையை தொடங்கியவர் ஆவார். நடிகை கேப்ரில்லா செல்லஸ் சமூக ஊடகத்தில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர். இவர் சினிமா தாண்டி ஸ்கிரிப்ட் ரைட்டர் ஆகவும் உள்ளார். நடிகை கேப்ரில்லா […]