சட்டவிரோத துப்பாக்கிகளை ஒரு வாரத்துக்குள் ஒப்படைக்க வேண்டும்: பங்களாதேஷ் அரசு
ஓரு வாரத்துக்குள் அனைத்து சட்டவிரோத துப்பாக்கிகளை அருகில் உள்ள காவல்நிலையத்தில் ஒப்படைக்குமாறு போராட்டக்காரர்களை வங்கதேச அரசு வலியுறுத்தியுள்ளது. வங்கதேச இடைக்கால அரசின் உள்துறை ஆலோசகர் பிரிகேடியர் ஜெனரல் எம். சகாவத் ஹுசைன் இன்று (திங்கள்கிழமை), மாணவர் போராட்டத்தின்போது காயமடைந்த ராணுவ வீரர்களை மருத்துவமனைக்குச் சென்று பார்த்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “போராட்டத்தின்போது போராட்டக்கார்கள் காவல்நிலையங்களில் இருந்து துப்பாக்கிகளை எடுத்துச் சென்றுள்ளனர். அந்த அனைத்து ஆயுதங்களையும் அவர்கள் ஒரு வாரத்துக்குள் அருகில் உள்ள காவல்நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். […]













