செய்தி வாழ்வியல்

உயர் இரத்த அழுத்தம் குறைய இலகுவான வழிமுறைகள்

  • June 2, 2024
  • 0 Comments

உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க நாம் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றி இப்பதிவில் காணலாம். மாறிவரும் உணவு பழக்க வழக்கம், வேகமான வாழ்க்கை முறை இவற்றின் விளைவாக பலரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று ரத்த அழுத்தம். ரத்த அழுத்தம் என்பது இதயம் சுருங்கி விரிவடையும் போது ஏற்படக்கூடிய அழுத்தமாகும். காரணங்கள் : இது உடல் எடை அதிகமாக இருப்பவர்கள், எப்போதுமே கோபம், எரிச்சல் ,மன அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், துரித உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்பவர்களுக்கு ஏற்படலாம் […]

ஐரோப்பா

பின்லாந்தில் 84 ஆண்டுகளுக்குப் பின் நூலத்திற்கு திரும்ப கிடைத்த புத்தகம் – ஆச்சரியத்தில் அதிகாரிகள்

  • June 2, 2024
  • 0 Comments

பின்லாந்தில் 1939ஆம் ஆண்டு திரும்பக் கொடுக்கப்பட வேண்டிய புத்தகம் ஒன்று 84 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மாதமே திரும்ப கிடைத்ததாக நூலகம் தெரிவித்துள்ளது. பின்லந்து மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட Refugees எனும் ஆங்கில நூல் திரும்பக் கிடைத்துள்ளதாக (Helsinki) நகரின் Oodi எனும் நூலகம் தெரிவித்துள்ளத. ஆர்தர் கோனன் டோயில் (Arthur Conan Doyle) அந்த நூலை 1893இல் எழுதினார். அது 1939ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியே திரும்ப கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த ஆண்டு நவம்பர் பின்லாந்து […]

இலங்கை

கட்டுநாயக்க விமானத்தில் சிக்கிய நபர் – சோதனையில் சிக்கிய பொருட்கள்

  • June 2, 2024
  • 0 Comments

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு மதுபான போத்தல்கள் மற்றும் ஏலக்காய்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சந்தேக நபர் நேற்று காலை இந்தியாவில் இருந்து நாட்டிற்கு வந்த போது குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விமான நிலைய பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் 61 வெளிநாட்டு மதுபான போத்தல்கள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். அவரிடம் 21 கிலோ கிராம் ஏலக்காய் இருந்ததாகவும், ஒரு கிலோகிராம் ஒன்றின் பெறுமதி 12,000 ரூபா […]

ஐரோப்பா

பறவைக் காய்ச்சல் நோய் தொற்றிலிருந்து முற்றாக விடுபட்ட பிரித்தானியா!

  • June 2, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் காற்றில் எளிதாக தொற்றக்கூடிய பறவைக் காய்ச்சல் நோய்க்கிருமியிலிருந்து முழுவதுமாக விடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சுற்றுச்சூழல், உணவு மற்றும் ஊர்ப்புற விவகார துறை அமைச்சகத்தின் அறிவிப்பை உலக விலங்குகள் சுகாதார அமைப்பு சரிபார்த்து புதுப்பித்துள்ளது. 2021ஆம் ஆண்டு முதல் 360 க்கும் அதிகமான உறுதிப்படுத்தப்பட்ட பறவைக் காய்ச்சல் தொற்றை பிரித்தானியாவை சந்தித்தது. பறவைகளிடமிருந்து பரவும் நோய்க்கிருமிகளால் உருவாகும் இந்த தொற்றால் தற்போதைக்கு யாரும் பாதிக்கப்படவில்லை. 2024ஆம் ஆண்டு பெப்வரி மாதம் 14ஆம் திகதி கடைசியாக ஒருவர் பாதிக்கப்பட்டதாகவும் அமைச்சகம் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் பரபரப்பை ஏற்படுத்திய வெடிவிபத்து – பலர் காயம்

  • June 2, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் சிட்னியின் மேற்குப் பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் காயமடைந்த பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கட்டிடம் இடிந்து விழுந்ததை அடுத்து, இடிபாடுகளில் சிக்கியிருந்த இருவர் மீட்கப்பட்டதாக மீட்புக் குழுவினர் தெரிவித்தனர். நேற்று மதியம் சுமார் 12.50 மணியளவில் வாலானில் உள்ள வைகண்டா கிரசண்டில் உள்ள ஒரு வீட்டில் வெடிப்பு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து அவசர சேவைகள் அங்கு சென்றன. கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து இரண்டு பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர், மேலும் பலர் சிக்கியுள்ளார்களா என்பதைக் கண்டறியும் […]

செய்தி

இலங்கையில் சீரற்ற வானிலை – வெள்ளப்பெருக்கு தொடர்பில் அவசர எச்சரிக்கை

  • June 2, 2024
  • 0 Comments

இலங்கையின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக களனி, களு, கிங் மற்றும் நில்வலா கங்கைகளின் சூழவுள்ள தாழ் நிலப்பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி களுகங்கையின் மேல்பகுதியில் கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. அத்துடன், இதன் காரணமாக அடுத்த 48 மணித்தியாலங்களில் இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மடுல்ல, நிவித்திகல, குருவிட்ட, அயகம, எலபாத்த, இரத்தினபுரி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளின் தாழ்நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கும் சாத்தியம் காணப்படுகின்றது. அத்துடன், களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய, ஹொரணை, […]

அறிவியல் & தொழில்நுட்பம்

கூகுள் செயற்கை நுண்ணறிவால் குழப்பமா.? விளக்கம் அளித்த முக்கிய அதிகாரி.!

  • June 2, 2024
  • 0 Comments

கூகுள் செயற்கை நுண்ணறிவில் குழப்பமில்லை என்றும், பயனர்களின் சில வினாக்களுக்கு மட்டும் நையாண்டி கட்டுரைகளின் அடிப்படையில் பதில் அளிக்கப்பட்டுள்ளது என கூகுள் அதிகாரி தெரிவித்துள்ளார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உலகில் முன்னணியில் செல்ல கூகுள் நிறுவனமும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. தற்போது பயனர்கள் மத்தியில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் கூகுள் AI ஓவர்வியூ (Google AI Overview), அதன் செயல்பாட்டில் சில விமர்சனங்ளை எதிர்கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக, நேற்று ஓர் பயனர், கூகுள் ஏஐ-யிடம் உணவுபொருளான […]

வட அமெரிக்கா

விண்வெளியில் இருந்து தெரியும் அமெரிக்காவின் பச்சை நதி – பொது மக்களுக்கு எச்சரிக்கை

  • June 2, 2024
  • 0 Comments

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள நதி பச்சை நிறத்துக்கு மாறியுள்ளதனை விண்வெளியிலிருந்து கண்டதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. Clear Lake என்று அழைக்கப்படும் கலிபோர்னியாவின் மிகப்பெரிய நதி பாசியால் நிரம்பியுள்ளது. அங்கு வழக்கத்தைவிட அதிகளவில் cyanobacteria இருப்பதால் நதி நிறம் மாறியிருப்பதாக ஆய்வு நிலையம் குறிப்பிட்டுள்ளது. அக்கம்பக்கத்தில் உள்ள பண்ணைகள், சுரங்கங்கள் போன்றவற்றின் கழிவுகள் நதியில் கலக்கப்படுவதால் தண்ணீரின் தரம் குறைந்து வருகின்றது. அத்தகைய நீரில் உருவாகும் பாசியால் மனிதர்களும் விலங்கினங்களும் பாதிக்கப்படலாம் என்று […]

ஐரோப்பா

ஜெர்மனியில் நாடு கடத்தல் நடவடிக்கைகள் தீவிரம் – விண்ணப்பித்தவர்களுக்கு நெருக்கடி

  • June 2, 2024
  • 0 Comments

ஜெர்மனியில் அகதி விண்ணப்பம் மேற்கொண்டு முற்றாக நிராகரிக்கப்பட்டவர்களை நாடு கடத்துகின்ற நடவடிக்கையானது துரிதப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களில் ஜெர்மனியில் இவ்வாறு நிராகரிக்கப்பட்ட அகதிகளில் 4800 க்கு மேற்பட்டவர்களை கட்டாயத்தின் பெயரில் அவர்களது சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக புள்ளி விபரம் வெளியாகியுள்ளது. குறித்த நடவடிக்கையானது கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும் பொழுது 3 இல் 1 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக துருக்கி நாட்டில் இருந்து வந்தவர்களில் 449 பேர் இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டதாகவும், […]

செய்தி

பிரான்ஸில் சிறைச்சாலைகளில் நிரம்பி வழியும் கைதிகள் – நெருக்கடியில் அதிகாரிகள்

  • June 2, 2024
  • 0 Comments

பிரான்ஸில் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ள நிலையில் கைதிகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. சிறைச்சாலைகளில் சிறைவைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பில் வெளியான புள்ளிவிபரங்களுக்கமைய, இந்த விடயம் தெரியவந்துள்ளது. மே மாதம் முதலாம் திகதி மேற்கொள்ளப்பட்ட இறுதி கணக்கெடுப்பின் படி பிரான்ஸில் தற்போது 77,647 பேர் சிறைவைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 6.1% சதவீதம் அதிகமாகும். அதேவேளை, ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி நிலவரப்படி 77,450 கைதிகள் சிறைவைக்கப்பட்டிருந்தனர். பிரான்ஸில் தற்போது 3,405 கைதிகள் […]