மத்திய கிழக்கு

காஸாவில் மிதக்கும் பாலம் – வேகமாக கட்டி முடித்த அமெரிக்கா

  • May 18, 2024
  • 0 Comments

காஸா கடலில் மிதக்கும் பாலம் ஒன்றை அமெரிக்கா கட்டி முடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடல் மார்க்கமாக நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்ல, இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. அமெரிக்க ராணுவ வீரர்களை நேரடியாக ஈடுபடுத்தாமல், இஸ்ரேல் ராணுவ பொறியாளர்களுக்கு பயிற்சி அளித்து அவர்கள் மூலம் மிதக்கும் பாலத்தை கட்டி முடித்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. பாலஸ்தீனர்களுக்கு உணவு பொருட்களை எடுத்து செல்லும் லொரிகளை இஸ்ரேலியர்கள் தடுத்து நிறுத்திவிடுவதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டது. இரண்டாயிரத்து 600 கோடி ரூபாய் செலவில் இந்த மிதக்கும் […]

ஆசியா

எதிர்பாராத வருமானம் – ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியிட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

  • May 18, 2024
  • 0 Comments

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கடந்த நிதியாண்டில் அடைந்த சாதனை இலாபத்திற்குப் பிறகு ஊழியர்களுக்கு மிகப்பெரிய போனஸ் வழங்க முடிவு செய்துள்ளது. ஊழியர்களுக்கு ஏறக்குறைய எட்டு மாதங்களுக்கு சம்பளத்திற்கு இணையான போனஸ் வழங்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அதிகாரிகள் 5.1 பில்லியன் டொலர்களை தாண்டி சாதனை லாபத்தை விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 2023-2024 நிதியாண்டில் 2.67 பில்லியன் சிங்கப்பூர் டொலர் என்ற சாதனை ஆண்டு லாபத்தைப் பதிவு செய்துள்ளது, இது முந்தைய […]

ஐரோப்பா செய்தி

பேஸ்புக் – இன்ஸ்டாகிராம் குறித்து விசாரணை நடத்திய ஐரோப்பிய ஆணையம்

  • May 18, 2024
  • 0 Comments

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளின் குழந்தை பாதுகாப்பு குறித்து ஐரோப்பிய ஆணையம் விசாரணை நடத்தியது. இது தொடர்பான கணக்குகள் குழந்தைகளின் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறது மற்றும் தேவையற்ற போதைக்கு வழிவகுக்கும் என்று சங்கம் சுட்டிக்காட்டுகிறது. மேலும், மெட்டா நிறுவனம் டிஜிட்டல் சேவைகள் தொடர்பான சட்டத்தை மீறியுள்ளதாகவும், இது குழந்தைகளைப் பாதுகாப்பதற்கும், ஆன்லைனில் அவர்களின் தனியுரிமையைப் பாதுகாப்பதற்குமான நிலையான சட்டமாகும் என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தொடர்புடைய பகுப்பாய்வில், மெட்டா நிறுவனத்தால் மோசடி மற்றும் தவறான தகவல்கள் மற்றும் […]

இலங்கை செய்தி

இலங்கையில் தங்கத்தின் விலையில் மாற்றம்!

  • May 18, 2024
  • 0 Comments

இலங்கையில் நேற்றைய தினம் 24 கரட் தங்கத்தின் விலை 193,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. கொழும்பு செட்டியார் தெரு தங்க விற்பனையாளர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர். 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 24,125 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கம் 178,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,312 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை செய்தி

யாழ்ப்பாணத்தில் நாய் இறைச்சிக் கொத்து?

  • May 17, 2024
  • 0 Comments

தெல்லிப்பழை பகுதியியிலுள்ள உணவு விடுதி ஒன்றில் தரமற்ற இறைச்சி கொத்தினை வழங்கியமை தொடர்பில் குறித்த ஹோட்டலுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மாலை ஊடகவியலாளர் ஒருவர் குறித்த கடையில் மாட்டு இறைச்சி கொத்தினை வாங்கி உண்ட வேளை குறித்த உணவில் நாய் இறைச்சி என சந்தேகிக்கும் வகையில் தோற்றமளிக்கும் அதிக ரோமங்களை கொண்ட இறைச்சி துண்டொன்று தென்பட்டுள்ளது. அதனை அடுத்து குறித்த பகுதியிலுள்ள பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவருடன் கடையினுள் இருந்தவாறு குறித்த ஊடகவியலாளர் தொடர்பு கொண்டார். […]

இலங்கை செய்தி

போலி வைத்தியர்கள் குறித்து புகார் அளிக்க Hotline இலக்கம்

  • May 17, 2024
  • 0 Comments

போலி வைத்தியர்கள் குறித்து தகவல் தெரிவிக்க Hotline இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் சுமார் 40,000 போலி வைத்தியர்கள் இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறான சிலர் பொதுமக்களுக்கு பல்வேறு வகையான போதைப் பொருட்களையும் விற்பனை செய்வதாக சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். அவ்வாறான நபர்கள் தொடர்பில் 1907 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்குமாறும் அவர் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். 40,000 போலி வைத்தியர்களில் மருத்துவம் பற்றிய அறிவு […]

செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் விற்பனைக்கு வரும் நகரம்

  • May 17, 2024
  • 0 Comments

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமான கேம்போ விற்பனைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது அதன் மதிப்பு 6.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்றும் Top Gun CRE அறிவித்துள்ளது. இரண்டாம் உலகப் போரின் போது கேம்போ ஒரு இராணுவ நகரமாக இருந்ததாகவும், இப்போது அந்த நகரத்தில் சுமார் 100 பேர் வசிக்கின்றனர் என்றும் நிறுவனம் கூறியது. நகரத்தை வாங்குபவர் சுமார் 20 கட்டிடங்களை சொந்தமாக வைத்திருப்பார் என்றும் அந்த கட்டிடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ஒற்றை வீடுகள் […]

இலங்கை செய்தி

அமெரிக்காவின் நலனுக்காக ஆய்வுக் கப்பல்கள் இலங்கை வர தடை – கம்மன்பில

  • May 17, 2024
  • 0 Comments

இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதுவராக பெயரிடப்பட்டுள்ள எலிசபெத் ஹோஸ்ட்டின் நியமனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். வெளிவிவகார செனட் குழு உறுப்பினர்கள் முன்னிலையில் எலிசபெத் ஹோஸ்ட் வழங்கிய பதில்கள் நாட்டுக்கு பாதகமான சூழ்நிலையை உருவாக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார். கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கம்மன்பில இதனைக் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் விருப்பத்தினாலேயே இலங்கைக்கான ஆய்வுக் கப்பல்களின் வருகை ஒரு வருடத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளதாக உதய கம்மன்பில […]

இந்தியா செய்தி

அமெரிக்காவின் மிரட்டலுக்கு இந்தியா தக்க பதிலடி

  • May 17, 2024
  • 0 Comments

ஈரானுடன் பொருளாதார உறவில் ஈடுபடும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்ற அமெரிக்காவின் எச்சரிக்கைக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையே நல்லுறவு உள்ளது, ஈரானின் சர் துறைமுகத்தை பராமரிப்பது தொடர்பாக ஈரானுடன் 10 ஆண்டு கால ஒப்பந்தத்தில் இந்திய அரசு சமீபத்தில் கையெழுத்திட்டது இது அமெரிக்காவின் அதிருப்திக்கு காரணமாக இருந்ததால், ஈரானுடன் உறவில் ஈடுபடும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது. அமெரிக்காவின் அச்சுறுத்தல் குறித்து கருத்து […]

இலங்கை செய்தி

பரீட்சைக்காக தாயின் மரணத்தை மகனிடம் மறைந்த தந்தை

  • May 17, 2024
  • 0 Comments

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை நிறைவடையும் வரை, தனது தாயின் மரணத்தை மகனுக்கு கூறாமல் மறைத்த தந்தை ஒருவர் தொடர்பான செய்தி காலி பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. இந்த பெண் கடந்த 12ம் திகதி தனது குடும்ப உறுப்பினர்களுடன் மதிய உணவை உட்கொண்டு, பின்னர் அனைவரும் ஐஸ் கிரீம் உட்கொண்டுள்ளனர். இதன்போது, குறித்த பெண்ணுக்கு திடீர் இருமல் ஏற்பட்ட நிலையில், அவர் சுயநினைவை இழந்து கீழே வீழ்ந்துள்ளார். அதனைத் தொடர்ந்து கராபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண், […]