ஈரான் ஜனாதிபதி பயணித்த ஹெலிகாப்டரின் சிதைவுகள் என சந்தேகிக்கப்படும் பகுதி கண்டுபிடிப்பு?
ஈரான் ஜனாதிபதி ரைசி பயணித்த ஹெலிகாப்டரின் சிதைவுகள் என சந்தேகிக்கப்படும் வெப்ப மூலமொன்று துருக்கிய ட்ரோன் நடவடிக்கை மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், இந்த விடயத்தை உறுதிப்படுத்தும் வகையில் மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி அண்டை நாடான அஜர்பைஜானில் இரண்டு அணைகள் திறப்பு விழாவில் பங்கேற்றுவிட்டு ஹெலிகாப்டர் வாகனத்தில் நேற்று ஈரான் திரும்பியுள்ளார். அங்கு, குறித்த பகுதியில் காலநிலை மிகவும் மோசமாக காணப்பட்டதுடன், […]













