இலங்கை செய்தி

கேரட்டால் ஒன்றரை வயது குழந்தையின் உயிர் பறிபோனது

  • May 12, 2024
  • 0 Comments

கேரட் துண்டு தொண்டையில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்ததாக செய்தி ஒன்று தெரிவிக்கிறது. அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரேத பரிசோதனையின் போது இது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சாலியவெவ யாய ஹத்தாவில் வசித்து வந்த சவின் துல்சந்த உபாத்யாய் என்ற ஒரு வயது மற்றும் ஏழு மாத குழந்தையே உயிரிழந்துள்ளது. நேற்று (11) பிற்பகல் வீட்டில் இருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், உடனடியாக நடவடிக்கை எடுத்த பெற்றோர், அம்புலன்ஸ் சேவையின் ஊடாக குழந்தையை நொச்சியாகம […]

ஐரோப்பா

கனடாவில் வேலை தேடுபவரா நீங்கள்! வெளியான அறிக்கை

கனடாவின் வேலைவாய்ப்பு ஏப்ரல் மாதத்தில் 90,000 அல்லது முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 0.4% அதிகரித்துள்ளது என்று புள்ளிவிவர கனடாவால் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், வேலையின்மை விகிதம் 6.1% ஆக மாறாமல் இருந்தது. ஏப்ரலில் வேலைவாய்ப்பு ஆதாயங்கள் பல தொழில்களில் பரவியது, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சேவைகள் மூலம் 26,000 ஆதாயத்துடன், தங்குமிடம் மற்றும் உணவு சேவைகள் 24,000 ஆகவும், பின்னர் சுகாதார பராமரிப்பு மற்றும் சமூக உதவி 17,000 ஆகவும் இருந்தது என்று […]

இலங்கை

இலங்கையில் சட்டவிரோதமாக பெறப்பட்ட தொல்பொருட்களுடன் ஒருவர் கைது

  • May 12, 2024
  • 0 Comments

கற்பிட்டி – ஆலங்குடா பகுதியில் வீடொன்றிலிருந்து , சட்டவிரோதமான முறையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் , தங்கத்தலானது என சந்தேகிக்கப்படும் தொல்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் சனிக்கிழமை (11) கைது செய்யப்பட்டுள்ளார். கற்பிட்டி, ஏத்தாளை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இலங்கை கடற்படைக்கு சொந்தமான விஜய கடற்படையினரும், புத்தளம் பிரிவு குற்ற விசாரணை பிரிவின் அதிகாரிகளும் இணைந்து குறித்த பகுதியில் விஷேட சோதனை நடவடிக்கையொன்றை மேற்கொண்ட நிலையில் வீடொன்றினை சோதனை செய்த […]

வட அமெரிக்கா

மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகம் பொறுத்தப்பட்ட அமெரிக்கர் உயிரிழப்பு !

  • May 12, 2024
  • 0 Comments

கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவின் மசாச்சுசெட்ஸ் பொது மருத்துவமனையில், 62 வயதான ரிக் ஸ்லேமேன் என்பவருக்கு சிறுநீரகம் மிக மோசமாக பாதிப்படைந்ந்தால், உலகிலேயே முதல் முறையாக மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகம் அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது. ஒரு உயிரினத்தின் இறுப்புகள் அல்லது திசுக்களை வேறொறு உயிரினத்திற்கு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொறுத்தும் வேறு இன உறுப்பு முறையில் இந்த சாதனை ஒரு மைக்கல்லாக பார்க்கப்பட்டது. தற்போது சிகிச்சை முடிந்து 2 மாதங்களில் ஸ்லேமேன் உயிரிழந்துள்ளார். […]

இந்தியா

இந்தியா: விமான நிலையம் உட்பட இரண்டு டெல்லி மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இந்தியாவில் பள்ளிகள், மருத்துவமனைகள் தொடர்ந்து விமான நிலையத்துக்கும் மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. டெல்லி-என்சிஆர் பகுதியில் உள்ள 200 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த சில நாட்களுக்குப் பிறகு, தேசிய தலைநகரில் உள்ள இரண்டு பெரிய மருத்துவமனைகளுக்கும் ஞாயிற்றுக்கிழமை மாலை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கபப்ட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை தில்லியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள், மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக புகாரளித்துள்ளன. வெடிகுண்டு மிரட்டல் குறித்து முதன்முதலில் புராரி மருத்துவமனை பிற்பகல் 3.15 […]

இலங்கை

இலங்கை மக்கள் மத்தியில் அமைதியின்மை – மஹிந்த கூறும் காரணம்!

  • May 12, 2024
  • 0 Comments

அரசாங்கத்திற்குச் சொந்தமான சில சொத்துக்கள் மற்றும் வர்த்தகங்களை விற்பனை செய்யும் நடவடிக்கைகளால், தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களின் செலவீனங்களைக் குறைத்தல் மற்றும் அது தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்வதன் அடிப்படையில் அமைந்துள்ளது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான நிலையில் அரச சொத்துக்களை அவசர அவசரமாக விற்பதன் […]

மத்திய கிழக்கு

காஸாவில் தங்கள் ராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வரும் இஸ்ரேல்

  • May 12, 2024
  • 0 Comments

காஸாவில் இஸ்ரேல் தனது ராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்திவரும் வேளையில் மக்கள் வெளியேற்றப்படுகின்றனர்.உதவிப் பொருள்களை வழங்கும் குழுக்கள், பங்காளி நாடுகள் ஆகியவை விடுத்த எச்சரிக்கைகளையும் தாண்டி இஸ்ரேல் ராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துகிறது. இஸ்ரேல்-ஹமாஸ் போரால் காஸாவில் நூறாயிரக்கணக்கானோர் வீடுகளிலிருந்து வெளியேறவேண்டிய நிலை ஏற்பட்டது. அவர்களில் பலர் தஞ்சம் புகுந்துகொள்ள ராஃபாதான் எஞ்சியிருந்தது. ஆனால் இப்போது அங்கிருந்தும் வெளியேறவேண்டிய சூழல் நிலவுகிறது. சனிக்கிழமை (மே 11) மாலை வட காஸாவின் சில பகுதிகளில் பீரங்கித் தாக்குதல்கள் இடம்பெற்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் […]

இலங்கை

சூடுப்பிடிக்கும் தென்னிலங்கை அரசியல்: ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிய தலைவர் நியமனம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தலைவராக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை நியமிப்பதற்கு செயற்குழு ஏகமனதாக வாக்களித்துள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது தலைவர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். இன்று காலை கோட்டேயில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்த நியமனம் செல்லுபடியாகாது என கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தலைமையிலான அணியினர் வலியுறுத்தியுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட பிரதிச் செயலாளரான சரத் ஏக்கநாயக்கவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், திஸாநாயக்க, இந்தச் சந்திப்புக்கு […]

உலகம்

மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!

  • May 12, 2024
  • 0 Comments

மெக்சிகோவில் உள்ள சியாபாஸ் கடற்கரைக்கு அருகில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவி அறிவியல்களுக்கான ஜெர்மன் ஆராய்ச்சி மையம் (GFZ) தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் 10 கிமீ (6.21 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. அதேநேரம் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.

உலகம்

அமெரிக்காவில் ரோந்து நடவடிக்கைக்கு சொகுசு காரை பயன்படுத்தும் பொலிஸார்!

  • May 12, 2024
  • 0 Comments

அமெரிக்காவின் பொலிஸ் அதிகாரிகள் பிரபலமான ரோல்ஸ் ரோய்ஸ் காரை ரோந்து நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. $250,000 டொலர் மதிப்புள்ள இந்த கார் சொகுசு வியாபாரி பிரமன் மோட்டார்ஸிடம் இருந்து சட்ட அமலாக்க அதிகாரிகள் கொள்வனவு செய்துள்ளனர். MBPD ஆட்சேர்ப்புக் குழுவிற்கு இந்த அற்புதமான சேர்ப்பை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என மியாமி காவல்துறை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. ரோந்து காரின் அசாதாரண தேர்வு இணைய பயனர்களிடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அதாவது கடந்த 2012 ஆம் […]

error: Content is protected !!