இந்தியாவின் புதிய தலைமுறை ஏவுகணை அக்னி பிரைம் சோதனை வெற்றி!
ஒடிசா கடற்கரையில் உள்ள ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தீவில் இருந்து, அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் புதிய தலைமுறை ஏவுகணையான அக்னி பிரைமை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்தது. நாட்டின் பாதுகாப்புக்கு அக்னி ரக ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு, ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இதுவரை பல்வேறு நிலைகளில் திறன் மேம்படுத்தப்பட்ட அக்னி ஏவுகணைகள் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஒடிசா கடற்கரையில் உள்ள ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தீவில் இருந்து அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் புதிய தலைமுறை ஏவுகணையான […]













