ஹோர்முஸ் ஜலசந்தியில் எரிபொருள் ஏற்றிச் சென்ற கப்பல் மீது தாக்குதல்
ஹோர்முஸ் ஜலசந்தியில் எரிபொருள் ஏற்றிச் சென்ற டேங்கர் கப்பல் ஒன்றை ஈரான் தாக்கியுள்ளது.
குறித்த கப்பல் சட்டவிரோதமாக பயணம் செய்ததாக குற்றம் சாட்டியே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்திய ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை, டோகோ நாட்டுக் கொடியை ஏந்திய கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறியுள்ளது.
இந்தத் தாக்குதலால் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், அதன் பயணம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டதாகவும் ஈரானிய அரசு ஊடகங்கள் அறிவித்துள்ளன.




