இலங்கை

காணி சுவீகரிப்பு நடவடிக்கை; திருடர்களைப் போல் வந்த நில அளவை திணைக்களம்!

  • April 5, 2024
  • 0 Comments

கீரிமலைப் பகுதியில் திருடர்கள் திருட வருவதைப் போல் நில அளவை திணைக்களம் காணியை சுவீகரிப்பதற்கு வருகை தந்ததாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட சட்டத்தரணிமான கனகரத்தினம் சுகாஸ் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.குறித்த பகுதியில் நில அளவை திணைக்களத்திற்கு எதிர்ப்பு வெளியிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், மக்களுக்கும் அறிவித்தல்கள் எவையும் வழங்கப்படாமல், திருடர்கள் திருட வருவது போல திடீரென்று இன்று (05) […]

இந்தியா

தமிழகத்தில் 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை

தமிழகத்தில் 19ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்பட உள்ளது. இதனை முன்னிட்டு வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் வகையில், கடந்த சில நாட்களாக வருமான வரித்துறையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அரசியல் கட்சி பிரமுகர்களின் வீடுகள், அலுவலகங்களிலும் சோதனை மேற்கொள்கிறார்கள். இந்த நிலையில், தமிழகத்தில் 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக புகார்கள் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் இந்த […]

உலகம்

இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்படும் இருவர் கைது!

  • April 5, 2024
  • 0 Comments

இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்படும் மேலும் இருவரை துருக்கி கைது செய்துள்ளது. இஸ்ரேலிய உளவு நிறுவனத்திற்கு தகவல் வழங்கியதாக சந்தேகிக்கப்படும் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். “மோல்-3″ என்ற குறியீட்டுப் பெயருடன் செயல்பாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மற்ற ஆறு பேரும் விசாரணையைத் தொடர்ந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். நமது நாட்டின் எல்லைக்குள் நமது தேசிய  ஒற்றுமையை குறிவைக்கும் உளவு நடவடிக்கைகளை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” என்று யெர்லிகாயா கூறினார். சந்தேகநபர்கள் தொடர்பில் அமைச்சர் மேலதிக தகவல்களை வழங்கவில்லை. தனியார் […]

இலங்கை

கல்வி அமைச்சின் இணையதளம் மீது சைபர் தாக்குதல் : கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

இலங்கை கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை அடையாளந்தெரியாத ஹேக்கர் ஒருவர் சைபர் தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலங்கை கணினி அவசரநிலை தயார்நிலை குழு (SLCERT) மற்றும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு (TRCSL) உட்பட பல தரப்பினரால் இந்த விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இணையத்தள பாவனையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவித்த கல்வி அமைச்சு, உத்தியோகபூர்வ இணையத்தளத்தை கூடிய விரைவில் மீளமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மேலும் தெரிவித்துள்ளது. […]

இலங்கை

தனியார் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து : இரு யுவதிகள் வைத்தியசாலையில் அனுமதி!

  • April 5, 2024
  • 0 Comments

புதுக்குடியிருப்பு பகுதியில் பேருந்தும் ,மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இரு யுவதிகள் காயமடைந்த விபத்து சம்பவம் ஒன்று இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது. இன்று (05.04) காலை இடம்பெற்ற விபத்து சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, விசுவமடுவில் இருந்து திருகோணமலை நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஒன்றும் முல்லைத்தீவில் இருந்து ஒட்டுசுட்டான் நோக்கி சென்ற இரு யுவதிகள் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் புதுக்குடியிருப்பு குழந்தையேசு ஆலயத்திற்கு முன்பாகவுள்ள முல்லைத்தீவு பிரதான வீதியில் நேருக்கு நேர் மோதுண்டு […]

பொழுதுபோக்கு

மீரா ஜாஸ்மின் வீட்டில் திடீர் மரணம்…

  • April 5, 2024
  • 0 Comments

பிரபல தென்னிந்திய நடிகை மீரா ஜாஸ்மின் தந்தை வயது மூப்பு காரணமாக, உயிரிழந்துள்ள நிலையில் இவருக்கு ரசிகர்கள் தங்களின் ஆறுதலை கூறி வருகிறார்கள். மீரா ஜாஸ்மினின் தந்தை ஜோசப் பிலிப் அவருக்கு வயது 83. கடந்த சில வருடங்களாகவே முதுமையால் ஏற்பட கூடிய நோய்களுக்கு ஆளாகி, தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த இவர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் மரணம் அடைந்தார். இவரது மனைவி பெயர் எலியம்மா ஜோசப். இவருக்கு பேர் ஜிபி சாரா ஜோசப், ஜெனி சாரா […]

பொழுதுபோக்கு

ரூ.1000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ‘ராமாயணம்’… கைக்கோக்கும் ஆஸ்கர் இசையமைப்பாளர்கள்

  • April 5, 2024
  • 0 Comments

ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் ‘ராமாயணம்’ படத்தில் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான், ஆஸ்கர் வென்ற ஜெர்மானிய இசையமைப்பாளர் ஹன்ஸ் ஜிம்மருடன் கைக்கோத்திருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டிருக்கும் இதன் படப்பிடிப்பு வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. ராமாயணம் கதையை தழுவி ‘ஆதிபுருஷ்’ என்ற பெயரில் நடிகர்கள் பிரபாஸ், கீர்த்தி சனோன் நடித்த படம் படுதோல்வியைத் தழுவியது. இதனையடுத்து, இதே ராமாயணம் மீண்டும் படமாகிறது. ராமனாக ரன்பீர் நடிக்க, சீதையாக சாய்பல்லவி நடிக்கிறார். ஹனுமனாக […]

உலகம்

சுமார் 2,500 புளூடிக் பயனாளர்களுக்கு இலவச சலுகை அளித்துள்ள எலான் மஸ்க்!

  • April 5, 2024
  • 0 Comments

எக்ஸ் வலை தள பக்கத்தில் பிரபல அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள், திரை உலகினர் என பலரும் கணக்குகள் தொடங்கி தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். போலி கணக்குகளை கண்டுபிடிக்கும் வகையில் பிரபலங்களுக்கு புளூடிக் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு தனியாக சந்தா செலுத்த வேண்டும். இந்த நிலையில் எக்ஸ் வலைதளத்தில் பிரபலமாக திகழும் புளூடிக் பயனாளர்கள் சிலருக்கு எலான் மஸ்க் இலவச சலுகை அறிவித்து உள்ளார். பணம் கட்டாத சிலருக்கு புளூடிக் குறியீடு வந்ததை பார்த்து அவர்கள் […]

இலங்கை

இலங்கை தமிழரசு கட்சியின் நிர்வாகத் தெரிவு தொடர்பான வழக்கு விசாரணை இன்று!

  • April 5, 2024
  • 0 Comments

இலங்கை தமிழரசு கட்சியின் வழக்கு இன்றைய தினம் (05.01) எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் எம் ஏ சுமந்திரன் திருகோணமலை திருக்கோணேஸ்வர ஆலயத்தில் விசேட பூசை வழிபாட்டில் ஈடுபட்டார். இலங்கை தமிழரசு கட்சியின் நிர்வாகத் தெருவில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் அவ்வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. குறித்த வழக்கில் வாதப்பிரதிவாதங்கள் இடம் பெற்றதுடன் குறித்த வழக்கு முடிவடைந்ததையடுத்து எம் ஏ சுமந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உடனடியாக விரைந்து சென்று […]

இலங்கை

இலங்கையில் பல இலட்சம் பெறுமதியான மரக்குற்றிகளை மறைத்து வைத்திருந்த இளைஞர் கைது

சுதந்திரபுரம் மத்தி பகுதியில் பல இலட்சம் பெறுமதியான மரக்குற்றிகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுதந்திரபுரம் மத்தி பகுதியில் அனுமதிபத்திரம் இல்லாமல் இருபத்தைந்து இலட்சத்திற்கு மேற்பட்ட பாலை, முதிரை, வாகை மரக்குற்றிகளை பலகையாக்கி தனது வீட்டில் மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, சந்தேக நபரின் சுதந்திரபுரம் மத்தியிலுள்ள பத்து ஏக்கர் காணியினை சுற்றிவளைத்து புதுக்குடியிருப்பு பொலிஸ் […]