ஒரேஒரு கருத்து, தலைகீழாக மாறிய வாழ்க்கை : அனோஜனுக்கு மரண தண்டனை
சமூக வலைத்தளங்களில் நபிகள் நாயகம் குறித்துப் பிழையான கருத்தைப் பதிவு செய்ததாகக் கூறி சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்ட அனோஜன் என்ற இளைஞருக்கு, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
அனோஜன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் (Social Media) நபிகள் நாயகம் தொடர்பாகப் பிழையான மற்றும் ஆட்சேபனைக்குரிய கருத்தைப் பதிவு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுச் சவுதி அரேபியக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் முதலில் விசாரணை நடத்திய கீழ் நீதிமன்றம், அனோஜனுக்கு 5 வருடக் கடுங்காவல் சிறைத்தண்டனையும், அத்துடன் 3 மில்லியன் சவுதி ரியால்கள் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
ஐந்து வருடச் சிறை மற்றும் அபராதத் தீர்ப்பை எதிர்த்துத் தண்டனையைக் குறைக்கக் கோரி அனோஜன் தரப்பில் மேன்முறையீடு (Appeal) செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.
வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் தண்டனையை குறைப்பதற்கு பதிலாக மரண தண்டனை வதித்து தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




