இலங்கை

இலங்கையில் பல இலட்சம் பெறுமதியான மரக்குற்றிகளை மறைத்து வைத்திருந்த இளைஞர் கைது

சுதந்திரபுரம் மத்தி பகுதியில் பல இலட்சம் பெறுமதியான மரக்குற்றிகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுதந்திரபுரம் மத்தி பகுதியில் அனுமதிபத்திரம் இல்லாமல் இருபத்தைந்து இலட்சத்திற்கு மேற்பட்ட பாலை, முதிரை, வாகை மரக்குற்றிகளை பலகையாக்கி தனது வீட்டில் மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, சந்தேக நபரின் சுதந்திரபுரம் மத்தியிலுள்ள பத்து ஏக்கர் காணியினை சுற்றிவளைத்து புதுக்குடியிருப்பு பொலிஸ் ஹெரத் தலைமையிலான குழுவினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டட போது குறித்த காணியில் தென்னோலையால் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மர குற்றிகள் மீட்கப்பட்டுள்ளதுடன், மரம் அறுக்க பாவித்த இயந்திரம் (செஞ்சோர்) மூன்றும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் 29 வயது மதிக்கத்தக்க உடையார்கட்டு மூங்கிலாற்றை சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கைது சந்தேக நபரையும், மீட்கப்பட்ட மரக்குற்றிகளையும் பொலிஸார் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளனர்

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்