இலங்கை

தனியார் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து : இரு யுவதிகள் வைத்தியசாலையில் அனுமதி!

புதுக்குடியிருப்பு பகுதியில் பேருந்தும் ,மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இரு யுவதிகள் காயமடைந்த விபத்து சம்பவம் ஒன்று இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

இன்று (05.04) காலை இடம்பெற்ற விபத்து சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, விசுவமடுவில் இருந்து திருகோணமலை நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஒன்றும் முல்லைத்தீவில் இருந்து ஒட்டுசுட்டான் நோக்கி சென்ற இரு யுவதிகள் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் புதுக்குடியிருப்பு குழந்தையேசு ஆலயத்திற்கு முன்பாகவுள்ள முல்லைத்தீவு பிரதான வீதியில் நேருக்கு நேர் மோதுண்டு விபத்திற்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு யுவதிகளும் படுகாயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து சம்பவத்தில் 23,24 வயதுடைய ஒட்டுசுட்டானை சேர்ந்த யுவதிகளே காயமடைந்துள்ளனர்.

விபத்து சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணையில் யுவதிகளின் விபத்திற்கு தொலைபேசி பாவனையே காரணம் என தெரிய வந்துள்ளது. எனினும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்