ஐரோப்பா

பிரித்தானியாவில் இயற்கை காப்பகம் ஒன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சம்!

  • April 6, 2024
  • 0 Comments

பிரித்தானிய இயற்கை காப்பகத்தில் பிளாஸ்டிக்கில் சுற்றப்பட்ட மனித மார்பு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் சால்ஃபோர்டு நகரில் உள்ள கெர்சல் டேல் இயற்கை காப்பகத்தில் பிளாஸ்டிக்கில் சுற்றப்பட்ட மனித மார்பு கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட பகுதியில் நடந்து சென்ற பாதசாரிகள், அடையாளம் தெரியாத பொருள் ஒன்றை கண்டு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.அதன் பேரில் விரைந்து வந்த அதிகாரிகள், அது பிளாஸ்டிக்கில் சுற்றப்பட்ட மனித மார்பு என்பதை […]

ஆசியா

சர்ச்சைக் குறிய கடற்பகுதியில் ராணுவ பயிற்சியை மேற்கொள்ளும் முக்கிய நாடுகள்!

  • April 6, 2024
  • 0 Comments

சர்ச்சைக்குரிய தென் சீனக் கடலில் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் ராணுவ ஒத்திகையை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் தங்கள் முதல் கூட்டு கடற்படை பயிற்சிகளை நடத்துகின்றன. இதில் நீர்மூழ்கி எதிர்ப்பு போர் பயிற்சி உட்பட,  தென் சீனக் கடலில் பெய்ஜிங்கின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் குறித்தும் அவதானம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது. 04 உடன்படிக்கை கூட்டாளிகள் மற்றும் பாதுகாப்பு பங்காளிகள் “அமைதியான மற்றும் […]

ஐரோப்பா

உக்ரைனில் மற்றுமொரு நகரத்தை கைப்பற்றிய ரஷ்யா

உக்ரைனின் கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள வோடியான் குடியேற்றத்தை ரஷ்யப் படைகள் கைப்பற்றியுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. பல மாத சண்டைகளுக்குப் பிறகு பிப்ரவரியில் அருகிலுள்ள அவ்திவ்காவை அவர்கள் கைப்பற்றியதில் இருந்து ரஷ்யப் படைகளால் கூறப்பட்ட பல முன்னேற்றங்களில் இது சமீபத்தியது. ரஷ்ய துருப்புக்கள் பாக்முட் அருகே மேலும் வடக்கே சாசிவ் யாரின் புறநகர்ப் பகுதிக்குள் நுழைந்ததாகக் கூறியது.ரஷ்யாவின் அரசு நடத்தும் RIA செய்தி நிறுவனம் ஒரு அதிகாரியை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

ஆசியா

3-வது முறையாகவும் ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம் – ரிக்டரில் 5.4 ஆக பதிவு

  • April 6, 2024
  • 0 Comments

தைவான் நாட்டின் தலைநகரான தைப்பேவில் கடந்த 3ம் ததிகதி காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகி இருந்தது. இதனை தைவான் நாட்டு மத்திய வானிலை ஆய்வு அமைப்பு தெரிவித்தது. நிலம் மற்றும் நீர் பரப்பை ஒட்டிய பகுதியில் உணரப்பட்ட இந்நிலநடுக்கம் 35 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. எனினும், அமெரிக்க புவி அறிவியல் ஆய்வு அமைப்பு வெளியிட்ட செய்தியில், நிலநடுக்கம் ரிக்டரில் 7.4 ஆக பதிவாகி உள்ளது என […]

தமிழ்நாடு

இறந்து 2 நாட்களான பசுமாட்டை இறைச்சிக்காக எடுத்துச் சென்ற அவலம்!- மடக்கி பிடித்த பொலிஸார்

  • April 6, 2024
  • 0 Comments

கும்பகோணத்தில் உயிரிழந்து 2 நாட்கள் ஆன பசுமாட்டை ஹோட்டல்களுக்கு கறிக்காக விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டது தெரியவந்ததை அடுத்து பசுமாட்டின் உடலை பொலிஸார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் அடுத்த நாச்சியார்கோவில் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பொலிஸார் இன்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். ஆகாச மாரியம்மன் கோயில் பகுதியில் சோதனை நடத்திக் கொண்டிருந்தபோது, அவ்வழியே வந்த மினி சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை இட்டனர். அப்போது இறந்து இரண்டு நாட்களான […]

இலங்கை

மட்டக்களப்பு – திருமலை பகுதியில் விபத்து!

  • April 6, 2024
  • 0 Comments

மட்டக்களப்பு வாகரை திருமலை வீதியில் நேற்று (5.4) இடம்பெற்ற வீதி விபத்தில் வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர். கண்டியைச் சேர்ந்த நாகபூசனி என்ற 74 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். திருகோணமலையில் இருந்து வாகரை வீதி ஊடாக கண்டியை நோக்கிச் சென்ற சிறிய ரக காரானது பாதையை விட்டு விலகி வாகரை இராணுவ முகாமிற்கு அருகிலுள்ள மின் கம்பத்தில் மோதியதால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர் சம்பவத்தில் ஏற்பட்ட அதிர்ச்சி காரணமாக […]

ஆசியா

காஸாவில் உடனடியாக போர் நிறுத்தம் வேண்டும்: அமெரிக்கா வலியுறுத்தல்

காஸாவில் உடனடியாக போர் நிறுத்தம் வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேல் பிரதமரை கட்டாயப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுமக்களையும் தொண்டு நிறுவன ஊழியர்களையும் பாதுகாக்க தவறினால் அமெரிக்காவின் ஆதரவையும் இழக்க நேரிடும் என்றும் ஜோ பைடன் எச்சரித்ததாக கூறப்படுகிறது. சர்வதேச உணவு தொண்டு நிறுவனமான வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சனின் ஏழு ஊழியர்கள் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டுள்ளனர். […]

இலங்கை

இலங்கையில் கையடக்க தொலைபேசியின் விலைகளில் மாற்றம்!

  • April 6, 2024
  • 0 Comments

டொலரின் பெறுமதி வீழ்ச்சி காரணமாக இலங்கையில் கையடக்க தொலைபேசிகளின் விலை 18% – 20% வரை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் சமித் செனரத் இதனை தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இந்த வியடங்களை சுட்டிக்காட்டியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், “தற்போது டொலர் 300 ரூபா வரை குறைந்துள்ளது. இதன் காரணமாக கையடக்க தொலைபேசிகளின் விலை குறைக்கப்பட்டுள்ளது. சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படும் ஐபோன் 15 […]

பொழுதுபோக்கு

தலைவர் 171 – முக்கிய பிரபலங்களை பக்காவாக தூண்டில் போட்டு தூக்கிய லோகேஷ்

  • April 6, 2024
  • 0 Comments

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தலைவர் 171 படம் லோகேஷ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாக உள்ளது. சமீபத்தில் தலைவர் 171 படத்தின் போஸ்டர் வெளியாகி இருந்தது. இதற்காக சல்லடை போட்டு தேடி லோகேஷ் பக்காவாக பிரபலங்களை தேர்ந்தெடுத்து வருகிறார். அந்த வகையில் இப்படத்தில் தற்போது ஏழு பேர் கமிட்டாகி இருக்கின்றனர். அதாவது லியோ படத்தில் தனது நடிப்பு திறமை மூலம் மிரள விட்ட சாண்டி மாஸ்டர் இந்தப் படத்தில் இடம்பெறுகிறார். இதை தொடர்ந்து சமீபத்தில் […]

இலங்கை

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு அதிகரிப்பு!

  • April 6, 2024
  • 0 Comments

2024 மார்ச் மாதத்தில் நாட்டில் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் அளவு 9.5% அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, 2024 பெப்ரவரி மாத இறுதியில் 4.52 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் அளவு, 2024 மார்ச் இறுதிக்குள் 4.95 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது. இந்த உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் முக்கிய அங்கமான அந்நிய செலாவணி கையிருப்பு மார்ச் மாதத்தில் 9.6% அதிகரித்துள்ளது. பிப்ரவரி 2024 இறுதியில், 2024 பிப்ரவரி இறுதியில் […]