விளையாட்டு

IPL Match 30 – பெங்களூரு அணிக்கு சாதனை இலக்கை நிர்ணயித்த ஐதராபாத்

  • April 15, 2024
  • 0 Comments

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 30வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – சன்ரைசர்ஸ் ஐதரபாத் மோதி வருகின்றன. பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து, ஐதராபாத் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக ஆடினர். அபிஷேக் சர்மா 34 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஹெண்ட்ரிச் கிளாசனுடன் ஜோடி சேர்ந்த டிராவிஸ் ஹெட் […]

இலங்கை

புத்தளம் – மீ ஓயா ஆற்றில் மூழ்கி குடும்பஸ்தர் ஒருவர் பலி!

  • April 15, 2024
  • 0 Comments

புத்தளம் – மீ ஓயா ஆற்றில் தனது நண்பர்களுடன் குளிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (14) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.​ புத்தளம், எருக்கலம்பிட்டி (நாகவில்லு) பகுதியைச் சேர்ந்த அபுல் ஹூதா முஹம்மது அப்சிர் (38) எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். சுற்றுலா நிமித்தம் தனது நண்பர்களுடன் மீ ஓயா ஆற்றில் குளிக்கச் சென்ற போது, நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.இதனையடுத்து […]

பொழுதுபோக்கு

அஜித் இல்லாம குடும்ப புகைப்படமா? ஷாலினியின் செயலால் அதிர்ச்சி

  • April 15, 2024
  • 0 Comments

ஷாலினி தனது தாய், சகோதரி மற்றும் சகோதரி மற்றும் தனது பிள்ளைகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியிருக்கிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் எங்கப்பா அஜித்தை காணம் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். அதாவது அஜித்தின் குடும்பம் சமூக வலைத்தளங்களில் இருந்து ஒதுங்கி இருந்தனர். ஆனால் கடந்த 2022 ஆம் ஆண்டில் அவரது மனைவி ஷாலினி அஜித்குமார் இன்ஸ்டாவில் கணக்கு தொடங்கினார். அதில் அஜித்தின் லேட்டஸ்ட் மற்றும் பார்ட்டி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இந்த நிலையில், இன்று தனது […]

இந்தியா

கச்சத்தீவு விவகாரத்தின் ரகசிய செயல்கள் : திரைமறைவில் நடந்தது என்ன பிரதமர் மோடி விளக்கம்

கச்சத்தீவை மற்றோரு நாட்டிற்கு தாரைவார்த்தது யார்? கச்சத்தீவை திரைமறைவில் வேறு நாட்டுக்கு திமுக – காங்கிரஸ் கொடுத்ததை மறக்க முடியாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்திரம் அருகேயுள்ள அகஸ்தியா்பட்டியில் இன்று நடைபெற்ற பாஜக தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி கலந்துகொண்டு பாஜக வேட்பாளா்களை ஆதரித்துப் பேசினார். இதன்போது . கச்சத்தீவு விவகாரத்தின் ரகசிய செயல்களை பாஜகதான் வெளிக்கொண்டு வந்தது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியா

ஹைதராபாத்தில் மளிகைக்கடை ஒன்றில் இருந்து 6,400 கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல்…!

  • April 15, 2024
  • 0 Comments

ஹைதராபாத்தில் கஞ்சா கலந்த சாக்லேட் விற்ற கொல்கத்தாவை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 160 பாக்கெட் கஞ்சா சாக்லேட்டுக்களை சைபராபாத் சிறப்பு நடவடிக்கைக்குழு பறிமுதல் செய்துள்ளது. தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் கஞ்சா கலந்த சாக்லேட் விற்பனை செய்யப்படுவதாக சைபராபாத் சிறப்பு நடவடிக்கைக்குழு(எஸ்ஓடி) அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது ஜகத்கிரிகுட்டாவில் உள்ள மளிகைக் கடையை அவர்கள் இன்று சோதனையிட்டனர். அந்த கடையில் 160 பாக்கெட் கஞ்சா கலந்த சாக்லேட் இருந்தது தெரிய வந்தது. ஒவ்வொரு சாக்லேட் பாக்கெட்டிலும் 40 சாக்லேட்டுகள் […]

இந்தியா

கேரளா- கட்டையால் அடித்து கணவர் கொலை… குடிபோதையில் மனைவி வெறிச்செயல்!

  • April 15, 2024
  • 0 Comments

குடிபோதையில் கணவரை கட்டையால் மனைவி அடித்துக் கொலை செய்த சம்பவம் பத்தனம்திட்டாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம், பத்தனம்திட்டாவில் மேற்கு ஆதிவாசி காலனி அட்டாடோ பகுதியைச் சேர்நதவர் ரத்னாகரன்(58). இவரது மனைவி சாந்தா. இவர்கள் இருவருக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வருகிறது. நேற்று நள்ளிரவு 11 மணியளவில் இவர்கள் இருவரும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சாந்தா, தனது கணவர் ரத்னாகரனை கட்டையால் தலையில் தாக்கினார். இதில் […]

உலகம்

காங்கோவில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் : 11 பேர் உயிரிழப்பு!

  • April 15, 2024
  • 0 Comments

கிழக்கு காங்கோவில் கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.  வாகனங்களை எரித்து உடைமைகளை கைப்பற்றியுள்ளனர். உகாண்டாவிற்கு அருகிலுள்ள எல்லைப் பகுதியில் இஸ்லாமிய அரசுக் குழுவுடன் தொடர்பு கொண்ட நேச நாட்டு ஜனநாயகப் படைகளின் கிளர்ச்சியாளர்கள் நீண்ட காலமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு கிட்டத்தட்ட 200 பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை இந்த மாத தொடக்கத்தில் கூறியது. வெவ்வேறு இடங்களில் இருந்து 11 உடல்கள் மீட்கப்பட்டதாக நகர மேயர் Ngongo Mayanga தெரிவித்தார். கிழக்கு […]

இலங்கை

கம்பளை – புத்தாண்டு தினத்தில் 9 வயது சிறுவனின் உயிரை பறித்த கிணறு!

  • April 15, 2024
  • 0 Comments

கம்பளை நகரின் அம்பகமுவ வீதியில் உள்ள பழைய பாதுகாப்பற்ற கிணறு ஒன்றில் விழுந்து சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பு ஜாவத்த பிரதேசத்தில் வசிக்கும் 9 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சிறுவனின் பெற்றோர் விடுமுறைக்கு கம்பளை பிரதேசத்தில் அமைந்துள்ள அவர்களின் வீட்டிற்கு வந்திருந்த போது இந்த விபத்துக்கு முகங்கொடுத்துள்ளனர். சிறுவன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது தாய் கடைக்கு சென்றுள்ளார்.தாய் வீடு திரும்பி வந்து பார்த்தபோது சிறுவன் வீட்டில் இல்லாததால், அப்பகுதி மக்களுடன் சேர்ந்து சிறுவனை தேடியுள்ளனர். […]

இலங்கை

இலங்கையில் பண்டிகைக் காலங்களில் விபத்துகள் தொடர்பில் வெளியான தகவல்

பண்டிகைக் காலங்களில் விபத்துக்கள், குறிப்பாக பட்டாசு தொடர்பான சம்பவங்கள் குறிப்பிடத்தக்க அளவில் குறைவதை சுகாதார அதிகாரிகள் கவனித்துள்ளனர். கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லான கருத்துப்படி, குறித்த காலப்பகுதியில் பட்டாசு தொடர்பான விபத்துக்கள் காரணமாக எவரும் அனுமதிக்கப்படவில்லை. எவ்வாறாயினும், மூன்று நோயாளர்கள் தேசிய வைத்தியசாலையில் சிறு காயங்களுக்கு வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தனர். மேலும், வாகன விபத்துகள், வீட்டு விபத்துகள், தவறி விழுதல் உள்ளிட்ட சில சம்பவங்கள் மட்டுமே நடந்துள்ளன. இருப்பினும், […]

இலங்கை

யாழில் கொரோனா தொற்றினால் ஒருவர் உயிரிழப்பு!

  • April 15, 2024
  • 0 Comments

நீண்ட காலத்துக்குப் பின்னர் கொரோனோ தொற்று காரணமாக யாழ் மாவட்டத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸ் நாட்டில் இருந்து தனக்கான ஆயுர்வேத சிகிச்சைக்காக இலங்கை வந்த 62 வயதான பெண்ணே இவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த பெண் வட்டுக்கோட்டை அராலியில் தங்கியிருந்த நிலையில் காய்ச்சல் காரணமாக இரண்டு நாட்களாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனையடுத்து சிகிச்சை பலனின்றி கடந்த வெள்ளிக்கிழமை (12) உயிரிழந்துள்ளார். உயிரிழப்பின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அந்த […]