இலங்கை

கம்பளை – புத்தாண்டு தினத்தில் 9 வயது சிறுவனின் உயிரை பறித்த கிணறு!

கம்பளை நகரின் அம்பகமுவ வீதியில் உள்ள பழைய பாதுகாப்பற்ற கிணறு ஒன்றில் விழுந்து சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு ஜாவத்த பிரதேசத்தில் வசிக்கும் 9 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சிறுவனின் பெற்றோர் விடுமுறைக்கு கம்பளை பிரதேசத்தில் அமைந்துள்ள அவர்களின் வீட்டிற்கு வந்திருந்த போது இந்த விபத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.

சிறுவன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது தாய் கடைக்கு சென்றுள்ளார்.தாய் வீடு திரும்பி வந்து பார்த்தபோது சிறுவன் வீட்டில் இல்லாததால், அப்பகுதி மக்களுடன் சேர்ந்து சிறுவனை தேடியுள்ளனர்.

பிரதேசவாசிகள் வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றில் இறங்கி தேடிய போது கிணற்றில் தவறி விழுந்து மூழ்கியிருந்த சிறுவனை மீட்டுள்ளனர்.

இதனையடுத்து, சிறுவனை உடனடியாக கம்பளை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து பெண் ஒருவரும் குழந்தை ஒன்றும் இதற்கு முன்னரும் உயிரிழந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்