ஆசியா

சிங்கப்பூரில் இளைஞர்களுக்கு கட்டுப்பாட்டு விதிமுறைகள் அறிமுகம்!

  • February 5, 2024
  • 0 Comments

சிங்கப்பூரில் இளைஞர்களுக்கு கட்டுப்பாட்டு விதிமுறைகள் அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய இளைஞர்களை அனுமதிப்பதில் கட்டுப்பாட்டு விதிமுறைகளை அறிமுகம் செய்யவிருக்கிறது. தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் தியோ (Josephine Teo) அதனைத் தெரிவித்தார். அதன்படி இளையர்கள் Apple App Store அல்லது Google Play Store போன்ற செயலி விநியோகத் தளங்களில் செயலிகளைப் பதிவிறக்கம் செய்யும்போது சரிபார்ப்பதற்குச் சில விவரங்கள் தேவைப்படலாம். அந்தத் தளங்களை நிர்வகிப்பது முக்கியம் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஏனெனில் […]

ஐரோப்பா

பிரான்ஸில் குடியேற்ற சட்டத்தால் சர்ச்சை – வீதிக்கு இறங்கிய மக்கள்

  • February 5, 2024
  • 0 Comments

பிரான்ஸில் குடியேற்ற சட்ட சீர்திருத்தத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. சனிக்கிழமை இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆவணங்கள் அற்ற வெளிநாட்டவர்கள் இதில் பங்கேற்று, இந்த சீர்திருத்தத்துக்கு எதிராக குரல் எழுப்பினர். Elisabeth Borne பிரதமராக இருந்த போது நிறைவேற்றப்பட்ட குடியேற்ற சீர்திருத்தத்தினை பிரெஞ்சு அரசமைப்புச் சபை கடந்த ஜனவரி மாத இறுதியில் சில தணிக்கைகளுடன் ஏற்றுக்கொண்டிருந்தது. குடியேற்றவாதிகள் மீது பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கும் இந்த சட்டத்தினால் குடியேற்றவாதிகள் மிகவும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். […]

இலங்கை

இலங்கை வந்தவுடன் முக்கிய தீர்மானம் எடுக்கவுள்ள பசில் ராஜபக்ஷ!

  • February 5, 2024
  • 0 Comments

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ நாடு திரும்பியதும் முக்கிய தீர்மானம் எடுக்கப்படும் என அந்த கட்சி தெரிவித்துள்ளது. எதிர்வரும் 18ஆம் திகதியளவில் பஷில் ராஜபக்ஷ நாடு திரும்புவதாகவும் குறிப்பிட்டது. உத்தேச ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதா? இல்லையா? என்ற தீர்மானமும் இதன் போடு எடுக்கப்படவுள்ளத. மேலும் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வியாழக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன […]

இந்தியா செய்தி

மும்பையில் சட்டவிரேதமாக தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் கைது

  • February 4, 2024
  • 0 Comments

மும்பை போலீசார் சட்டவிரோதமாக தங்கியிருந்த 506 வெளிநாட்டவர்களை கண்டுபிடித்துள்ளனர். 411 நைஜீரியர்கள் உட்பட 506 வெளிநாட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். கண்டுபிடிக்கப்பட்டவர்கள் முறையான ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைந்தவர்கள் அல்லது விசா காலாவதியானவர்கள் அல்ல என்று பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். மும்பையில் போதைப்பொருள் விற்பனையைத் தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட சோதனைகளின் போது சட்டவிரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டதாக மும்பை காவல்துறைத் தலைவர் மிலிந்த் பரம்பே தெரிவித்தார். நைஜீரியர்கள் பலர் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர்.

உலகம் செய்தி

ஆணுறைகள் மற்றும் கைவிடப்பட்ட உள்ளாடைகள்; விமானத்தில் நடந்த அருவருப்பான சம்பவங்கள்

  • February 4, 2024
  • 0 Comments

விமானப் பணிப்பெண்கள் பலரால் மிகுந்த மரியாதையுடனும் ஆர்வத்துடனும் பார்க்கப்படுகிறார்கள். ஆனால் விமானப் பணிப்பெண்கள் என்ன செய்கிறார்கள் என்பது வெளியில் பலருக்குத் தெரியாது. விமானத்தில் பயணித்தபோது தான் அனுபவித்த மிகவும் கேவலமான விஷயத்தை ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஒரு பெரிய அமெரிக்க விமான நிறுவனத்தில் கால் நூற்றாண்டு காலமாக விமானப் பணிப்பெண்ணாக இருந்த பெயர் குறிப்பிடாத ஊழியர் ஒருவர் Reddit இல் ஆஸ்க் மீ எனிதிங் அமர்வில் இதைச் சொன்னார். பயன்படுத்திய ஆணுறைகள் மற்றும் தூக்கி எறியப்பட்ட உள்ளாடைகளைப் […]

இலங்கை செய்தி

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் மீண்டும் மோதல்!! பலர் காயம்

  • February 4, 2024
  • 0 Comments

பொலன்னறுவை கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இன்று இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் பத்து கைதிகளும் இராணுவ சிப்பாய் ஒருவரும் காயமடைந்து வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த மோதலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும், கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தின் சமையல் அறைகள் மற்றும் பல இடங்களில் கைதிகள் சேதம் விளைவித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட இரும்பு கம்பிகள் மற்றும் கம்பங்கள், மோதலை ஏற்படுத்த பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் […]

உலகம் செய்தி

பேஸ்புக்கிற்கு 20 வயதாகிறது

  • February 4, 2024
  • 0 Comments

உலகமே தழுவிய சமூக வலைதளமான ஃபேஸ்புக் இன்றுடன் 20 ஆண்டுகள் ஆகிறது. 2004ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4-ம் திகதி, குறுகிய காலத்தில் உலகைக் கைப்பற்றிய முகநூல்  அறிமுகமானது. மனித நலன் என்ற நோக்கத்துடன் தான் உருவாக்கிய ஃபேஸ்புக் உலகில் இவ்வளவு பிரபலம் அடையும் என்று ஜூக்கர்பெர்க் நினைத்திருக்க மாட்டார். எவ்வாறாயினும், அண்மையில் அதன் நிறுவனர் அமெரிக்க செனட் சபையில் மன்னிப்புக் கேட்ட சம்பவம் தொடர்பாக உலகம் முழுவதும் இது தொடர்பில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. சில […]

அறிந்திருக்க வேண்டியவை செய்தி

அமெரிக்காவில் வேகமாக பரவும் ஆபத்தான் பூஞ்சை

  • February 4, 2024
  • 0 Comments

அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் ஆபத்தான பூஞ்சை தொற்று குறித்த தகவல்களை வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கேண்டிடா ஆரிஸ் பூஞ்சை தொற்று குறித்து வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த பூஞ்சை தொற்று பல ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டாலும், ஒரு மாதத்திற்குள் வாஷிங்டனில் நான்கு பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதன் மூலம் உலகத்தின் கவனம் இதில் குவிந்துள்ளது. மிக விரைவில் தொற்று ஏற்படக்கூடிய கேண்டிடா ஆரிஸை மருந்துகளின் மூலம் குணப்படுத்துவது கடினம் என்று கூறப்படுகிறது. கேண்டிடா ஆரிஸ் […]

அறிவியல் & தொழில்நுட்பம் இலங்கை

உயிர்கள் வாழக் கூடிய புதிய கிரகம் குறித்து வெளியான முக்கிய தகவல்

  • February 4, 2024
  • 0 Comments

உயிர்கள் வாழ்வதற்கு சாதகமான சூழலுடன் கூடிய புதிய கிரகமான “சூப்பர் எர்த்” பற்றிய ஆய்வு அறிக்கைகளை அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ளது. இந்த புதிய கிரகத்திற்கு “TOI-715 b” என்று பெயரிடப்பட்டுள்ளது, மேலும் இது பூமியில் இருந்து 137 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது என்று நாசா தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது ஒரு சிறிய சிவப்பு நட்சத்திரத்தை சுற்றி வருவதாகவும், இது சுமார் 19 நாட்கள் எடுக்கும் என்றும் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. பூமியை விட […]

இலங்கை செய்தி

ஆவா குழுவின் முக்கிய தலைவர் கொழும்பில் கைது

  • February 4, 2024
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் கப்பம் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் ‘ஆவா’ குழு எனப்படும் பிரபல குற்றக் கும்பலின் தலைவன் என சந்தேகிக்கப்படும் நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 72 வயதுடைய பெண் ஒருவருக்குச் சொந்தமானது என நம்பப்படும் கல்கிசை பிரதேசத்தில் உள்ள இல்லத்தில் வைத்து வலனா எதிர்ப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர் மாதாந்த வாடகையாக ரூ.25000 செலுத்தி கடந்த ஒக்டோபர் மாதம் முதல் குறித்த வீட்டில் தங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. […]