இலங்கையில் நீக்கப்படும் வரம்புகள் – அமைச்சரவை அனுமதி
இலங்கையில் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றங்களுக்காக ரூபாயை அந்நியச் செலாவணியாக மாற்றுவதற்கான சில வரம்புகளை படிப்படியாக நீக்கப்படவுள்ளது. அதற்கு இலங்கை ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். புதிய வழிமுறைகள் பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என நேற்று தெரிவித்துள்ளார். 2020 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து சில நிபந்தனைகளின் கீழ் இலங்கை மக்கள் வெளிநாட்டு முதலீடுகளுக்கான நிதியை அனுப்புவதற்கான அனுமதியை மத்திய வங்கி இடைநிறுத்தியுள்ளது. அதன் மூலம் இலங்கையின் கையிருப்பு படிப்படியாக மேம்பட்டுள்ளது. மத்திய வங்கியின் வழிகாட்டுதலின் […]













