இலங்கை : நுவரெலியாவின் தபால் நிலைய கட்டிடத்தை தனியாருக்கு வழங்குவது குறித்து வெளியான அறிவிப்பு!
வரலாற்றுப் பெறுமதி மிக்க நுவரெலியா தபால் நிலைய கட்டிடத்தை தனியாருக்கு வழங்குவதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என சட்டமா அதிபர் இன்று (07.02) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். கட்டிடத்தை தனியாருக்கு மாற்றுவதை தடுக்க உத்தரவிடுமாறு கோரிய மனு இன்று தாக்கல் செய்யப்பட்ட போது மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விகம் டி ஆப்ரூ இந்த அறிவித்தலை விடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த தபால் நிலைய கட்டிடத்தை தனியாருக்கு மாற்றுவது தொடர்பில் மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலகத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக மனுதாரர் சார்பில் ஆஜரான […]













