ஐரோப்பாவில் மில்லியன் கணக்கான மக்களின் உயிர்களைக் காப்பாற்றிய தடுப்பூசி
ஐரோப்பாவில் கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்புமருந்து குறைந்தது 1.4 மில்லியன் உயிர்களைக் காப்பாற்றியிருப்பதாக உலகச் சுகாதார நிறுவனம் கூறுகிறது. குளிர்காலத்தில் ஏற்படும் உடல்நலக் குறைவால் ஐரோப்பிய மக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் COVID-19, Influenza தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வது மிக முக்கியம் என்று நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. ஐரோப்பாவில் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்ட நோய்ப்பரவலால் 2 மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். சில ஐரோப்பிய நாடுகளில் COVID-19 பரவல் மீண்டும் தலைதூக்குகிறது. ஒரே நேரத்தில் மற்ற சுவாச நோய்களும் […]













