இலங்கை

இலங்கை – கொழும்பு ஆமர் வீதி வெள்ளத்தில் மூழ்கியது!

  • January 1, 2024
  • 0 Comments

தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையினால் கொழும்பு ஆர்மர் வீதி பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சாரதிகள் முடிந்தவரை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இலங்கை

சீன கப்பல்களை இலங்கையில் நிறுத்திவைக்க ஒருவருட காலத்திற்கு தடை!

  • January 1, 2024
  • 0 Comments

எந்தவொரு சீன ஆராய்ச்சிக் கப்பலையும் அதன் துறைமுகங்களில் நிறுத்திவைக்கவோ அல்லது அதன் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்குள் (EEZ) ஒரு வருட காலத்திற்கு செயல்படவோ அனுமதிக்க மாட்டோம் என்று இலங்கை இந்தியாவிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூலை 21, 2023 அன்று நடைபெற்ற  சந்திப்பின் போது, இந்திய மூலோபாய மற்றும் பாதுகாப்புக் கவலைகளுக்கு மதிப்பளிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியதை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஜனவரி 5, 2024 […]

இலங்கை

இலங்கை பொலிஸாரின் நீதி நடவடிக்கையின் கீழ் 1206 பேர் கைது!

  • January 1, 2024
  • 0 Comments

1,236 போதைப்பொருள் சோதனைகள் தொடர்பாக 1,206 சந்தேக நபர்களும் 23 பெண் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் அனைவரும் நேற்று (31.12) கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் 17ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் இந்த விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட 86 சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதுடன், 40 சந்தேகநபர்கள் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்தில் நடத்தப்பட்ட […]

இலங்கை

லிட்ரோ சமையல் எரிவாயுவின் புதிய விலை விபரம் வெளியானது!

  • January 1, 2024
  • 0 Comments

லிட்ரோ எரிவாயு விலையை அதிகரிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். இதன்படி, 12.5 கிலோகிராம் கொண்ட வீட்டு எரிவாயு சிலிண்டர் 685 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 4,250 ரூபாவாகும். 5 கிலோ எடை கொண்ட காஸ் சிலிண்டரின் விலை ரூ.276 உயர்த்தப்பட்டு, புதிய விலை  1,707 ரூபாயாக பதிவாகியுள்ளது. 2.3 கிலோ எடையுள்ள காஸ் சிலிண்டர் 127 உயர்த்தப்பட்டு அதன் புதிய விலை 795 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு […]

ஆசியா

ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை!

  • January 1, 2024
  • 0 Comments

ஜப்பானின் இஷிகாவா பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த நிலநடுக்கமானனது  ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளது.

இலங்கை

இலங்கையில் காவலுக்கு சென்ற வயோதிபருக்கு நேர்ந்த கதி

  • January 1, 2024
  • 0 Comments

திருகோணமலை – மொரவெவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சுவர்ன ஜெயந்திபுர பகுதியில் கட்டுத் துவக்கு வெடித்ததில் வயோதிபரொருவர் படுகாயம் அடைந்த நிலையில் இன்று (01) திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சேனைக்கு காவலுக்கு சென்று வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த போது பன்றிக்கு வைக்கப்பட்டிருந்த கட்டு துவக்கு வெடித்ததாகவும் காலில் பலதத காயம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவ்வாறு படுகாயமடைந்தவர் மஹதிவுல்வெவ-சுவர்ன ஜெயந்திபுர பகுதியைச் சேர்ந்த டீ.எம்.சோமசிறி (57வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர். தற்போது சேனை […]

பொழுதுபோக்கு

பழம்பெரும் நடிகர் லியோ பிரபு காலமானார்

  • January 1, 2024
  • 0 Comments

பழம்பெரும் நடிகர் லியோ பிரபு, வயது மூப்பு காரணமாக தன்னுடைய 90 வயதில் உயிரிழந்திருந்தார். கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் திகதி மாலை 4 மணிக்கு இவர் காலமானார். இந்த தகவல் திரையுலகை சேர்ந்த பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நான் மகான் அல்ல, பருவ காலம், புதிர், பேர் சொல்லும் பிள்ளை, இரண்டும் இரண்டும் அஞ்சு, இது எங்க நாடு, அண்ணே அண்ணே போன்ற பல தமிழ் திரைப்படங்களிலும் நடித்து பிரபலமானார். வயது மூப்பு காரணமாக தன்னுடைய […]

கருத்து & பகுப்பாய்வு

எவரெஸ்ட் மலையை விட மூன்று மடங்கு பெரிய வால் நட்சத்திரம் பூமி அருகே வெடித்து சிதறும் அபாயம்

  • January 1, 2024
  • 0 Comments

எவரெஸ்ட் மலையை காட்டிலும் மூன்று மடங்கு பெரிய வால் நட்சத்திரம் ஒன்று விரைவில் பூமி அருகே வெடித்து சிதறும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வானியல் அற்புதங்களில் ஒன்றாக வானியலாளர்கள் கணிக்கும் மிக முக்கிய பொருட்களில் ஒன்று வால் நட்சத்திரங்கள். ஹைட்ரஜன், ஐஸ் உள்ளிட்ட பொருட்களால் ஆன இந்த வால் நட்சத்திரங்கள், வான்வெளியில் சுற்றி வரும்போது, அவ்வப்போது அதில் உள்ள பொருட்கள் உராய்வு காரணமாக எரிந்து வால் போன்று காட்சியளிக்கும். பூமியை சுற்றிலும் ஏராளமான வால் […]

செய்தி

2024ஆம் ஆண்டின் இலக்கு குறித்து வடகொரிய ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு

  • January 1, 2024
  • 0 Comments

3 உளவு செயற்கை கோள்களை ஏவ திட்டமிட்டுள்ளதாக 2024ஆம் ஆண்டின் இலக்கு குறித்து வடகொரிய ஜனாதிபதி கிம் தெரிவித்துள்ளார். வடகொரியாவில் ஆளும் தொழிலாளர்கள் கட்சியின் அடுத்த ஆண்டுக்கான இலக்குகணை நிர்ணயிக்கும் 5 நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் உரையாற்றிய அதிபர் கிம் ஜாங் உன், “அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு நாடுகளின் வடகொரியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு அதிகரித்துள்ளதால் வடகொரியாவை அணுஆயுத போருக்கு தள்ளியுள்ளது. கடுமையான போர் சூழலில் பதிலடி தரும் […]

பொழுதுபோக்கு

தளபதி விஜய்யின் இலங்கை விஜயம் குறித்து கசித்த செய்தி

  • January 1, 2024
  • 0 Comments

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா, பிரபுதேவா, பிரசாந்த், மோகன், பிரேம்ஜி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி வரும் விஜய் 68வது படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட சில பகுதிகளில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அடுத்தபடியாக விஜய் 68வது படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் நடைபெறுவதாக ஒரு செய்தி வெளியாகி வந்த நிலையில் தற்போது அது உறுதியாக இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பே இலங்கை சென்றுவிட்ட இயக்குனர் வெங்கட் பிரபு […]