ஆசியா

சீனாவில் தன்னை கடித்த எலியை பழிக்குப்பழி வாங்கிய கல்லூரி மாணவி !

  • January 3, 2024
  • 0 Comments

சீனாவில் தன் கையைக் கடித்து காயப்படுத்திய எலியை துரத்திப் பிடித்த மாணவி ஒருவர் பழிக்கு பழியாக செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஜியாங்ஷூ மாகாணத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருபவர் 18 வயது மாணவி. அவர், கல்லூரியில் உள்ள ஹாஸ்டலில் தங்கி படித்து வருகிறார். இந்நிலையில், அந்த ஹாஸ்டலில் எலித்தொல்லை அதிகம் என கூறப்படுகிறது. இந்த சுழலில் கடந்த டிசம்பர் 21ம் திகதி, இரவு அந்த மாணவி தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, எலி ஒன்று […]

செய்தி

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – அச்சத்தில் மக்கள்

  • January 3, 2024
  • 0 Comments

ஆப்கானிஸ்தானில் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. அரை மணி நேரத்தில் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. முதல் நிலநடுக்கம் பைசாபாத்தில் இருந்து 126 கி.மீ. தொலைவில் நள்ளிரவு 12.28 மணிக்கு 4.4 ரிக்டர் அளவிலும், இரண்டாவது நிலநடுக்கம் பைசாபாத்தில் இருந்து 100 கி.மீ. தொலைவில் நள்ளிரவு 12.55-க்கு 4.8 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலநடுக்கத்தால் இதுவரை, உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் ஏதும் வெளியாகவில்லை. முன்னதாக, […]

ஆசியா

 ஜப்பானை உலுக்கிய விமான விபத்து – விசாரணைகள் ஆரம்பம்

  • January 3, 2024
  • 0 Comments

தோக்கியோவில் ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானத்துடன் ஜப்பானியக் கடலோரக் காவற்படை விமானம் மோதியுள்ளது. இது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடலோரக் காவற்படை விமானத்தில் இருந்த 6 ஊழியர்களில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானத்திலிருந்த 379 பயணிகளும் சிப்பந்திகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். 14 பயணிகளுக்குச் சிறுகாயங்கள் ஏற்பட்டதாக ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்தது. புத்தாண்டு முதல் நாளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண உதவியை வழங்கக் கடலோரக் காவற்படை விமானம் சென்றுகொண்டிருந்தது. பயணிகளை வெளியேற்ற எடுத்துக்கொண்ட […]

இலங்கை

இலங்கையில் வரி அடையாள எண் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

  • January 3, 2024
  • 0 Comments

இலங்கையில் வரி அடையாள எண் அல்லது டின் இலக்கத்தை பெறுவதனால் மாத்திரம் எவரும் தன்னிச்சையாக வருவான வரி விதிப்பிற்கு உள்ளாக மாட்டார்கள் என நிதியமைச்சு அறிவித்துள்ளது. வருடாந்த வரி விலக்கு வரம்பான 1.2 மில்லியன் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டும் 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு மட்டுமே வரி செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் நடைமுறை கணக்கொன்றை ஆரம்பிக்கும்போதும், கட்டடத் திட்டங்களுக்கு அனுமதி பெறும்போதும், வாகன பதிவின் போதும், […]

செய்தி

இலங்கையில் உயர்தர பரீட்சை தொடர்பில் பரீட்சை திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

  • January 3, 2024
  • 0 Comments

இலங்கையில் 2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நாளை ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் 31ஆம் திகதி வரை உயர்தரப் பரீட்சை இடம்பெறவுள்ளது. நாடளாவிய ரீதியில் 2,258 பரீட்சை மத்திய நிலையங்களில் 346,976 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். இவர்களில் 281,445 பேர் பாடசாலை மாணவர்கள் என்பதுடன், 65531 பேர் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், பரீட்சை அனுமதி அட்டைகள் இதுவரை கிடைக்கப்பெறாத பரீட்சார்த்திகள், பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினூடாக அதனை தரவிறக்கம் செய்ய […]

பொழுதுபோக்கு

சீமானின் மகளாக நயன்தாரா… காத்திருக்கும் புது சப்ரைஸ்…

  • January 3, 2024
  • 0 Comments

நடிகை நயன்தாரா, அடுத்ததாக நடிக்க உள்ள படத்தில் அவருக்கு தந்தையாக சீமான் நடிக்க உள்ளாராம். லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்கு 2023-ம் ஆண்டு சினிமாவில் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த ஆண்டாகவே இருந்தது. கடந்த ஆண்டு ஜவான் என்கிற ஆயிரம் கோடி வசூல் திரைப்படத்தை கொடுத்து பாலிவுட்டில் அவர் மாஸ் எண்ட்ரி தந்தாலும், கோலிவுட்டில் அவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த இறைவன், அன்னபூரணி ஆகிய இரண்டு படங்களுமே சொதப்பலாக அமைந்தன. நடிகை நயன்தாரா நடிப்பில் தற்போது மண்ணாங்கட்டி என்கிற […]

வாழ்வியல்

சோறு வடித்த தண்ணீரில் கிடைக்கும் நன்மைகள்

  • January 3, 2024
  • 0 Comments

நாம் நவீன காலத்திற்கு மாறி உள்ளதால் சமையலில் நிறையமாற்றம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் நோய்களிலும் நிறைய மாற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக குக்கர் பயன்பாட்டிற்கு வந்த பிறகு அரிசி வேக வைப்பதில் அதிகம் மாற்றம் வந்துவிட்டது. அந்த வகையில் நாம் இன்று சாப்பாடு வடித்து சாப்பிடும் போது எவ்வளவு நன்மைகள் உள்ளது என இந்த பதிவில் வாசிப்போம். நிறைந்துள்ள சத்துக்கள்: ஸ்டார்ச் கார்போஹைட்ரேட் தயமின் மற்றும் ரிபோபிலாவின் போன்ற சத்துக்கள் நிறந்துள்ளது. பயன்கள் : தொடர்ச்சியான வறட்டு இருமல் உள்ளவர்கள் […]

மத்திய கிழக்கு

பரபரப்பாகும் போர் – இஸ்ரேலின் தாக்குதலில் ஹமாஸ் துணைத் தலைவர் பலி

  • January 3, 2024
  • 0 Comments

ஹமாஸ் அமைப்பின் துணைத் தலைவர் சலே அல்-அரூரி (Saleh al-Arouri) இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்துள்ளார். பெய்ரூட்டில் (Beirut) ஹமாஸ் தலைவரின் படுகொலை லெபனான் மீதான தாக்குதல் அல்ல என்று இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது, ஏனெனில் அவரது மரணத்திற்கு “தண்டனை” என்று அதன் எதிரிகள் எச்சரித்துள்ளனர். ஹமாஸ் தலைமைக்கு எதிரான சர்ஜிக்கல் ஸ்டிரைக்கில் சலே அல்-அரூரி உயிரிழந்ததாக இஸ்ரேலிய செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். ஹமாஸின் துணை அரசியல் தலைவரான அரூரி, தெற்கு பெய்ரூட்டில் ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டதாக லெபனான் ஊடகங்கள் […]

விளையாட்டு

தென்னாப்பிரிக்காவால் அவமானப்படுத்தப்பட்ட நியூசிலாந்து

  • January 3, 2024
  • 0 Comments

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் கோரிக்கை விடுத்துள்ளார். தென்னாப்பிரிக்கா தற்போது இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதற்கிடையில் கடந்த மாதம் 30-ஆம் தேதி நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கான அணியை தென்னாப்பிரிக்கா அறிவித்தது. நியூசிலாந்துக்கு எதிரான தொடருக்கான புதிய அணியை தென் ஆப்பிரிக்கா தேர்வு செய்துள்ளது. தொலைந்து போன முக்கிய பொருள்.. வார்னருக்கு நடந்த சோகம்..! தென் ஆப்பிரிக்கா தேர்வு செய்த 14 பேரில் […]

பொழுதுபோக்கு

எனக்கு 8822 வயசு… ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் கிலிம்ஸி வீடியோ

  • January 3, 2024
  • 0 Comments

தனக்கென தனி பாணியில் படம் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் ராம். தற்போது இவர் மலையாள நடிகர் நிவின் பாலியை ஹீரோவாக வைத்து இயக்கியுள்ள திரைப்படம் ‘ஏழு கடல் ஏழு மலை’. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், தற்போது இப்படத்தின் கிலிம்ஸி வீடியோ வெளியாகி… படம் மீதான எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. இதில் சூரியிடம் தனக்கு 8822 வயது என கூறுவது, மற்றும் காதல் பற்றி கூறிய வசனங்கள் ரசிகர்களை ரசிக்க […]