யாழிற்கு விஜயம் செய்யவுள்ள சர்வதேச நாணய நிதிய குழுவினர்
இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) குழுவினர் இன்று(14) யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளனர். இதன்போது வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் உள்ளிட்ட பல தரப்பினருடனும் நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் சந்திப்பில் ஈடுபடவுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது. அந்தக் குழு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் சந்திப்பில் ஈடுபட்டது. அடுத்தகட்ட கடன் பெறுகைகள் தொடர்பில் தற்போது முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையிலேயே இலங்கைக்கான பயணத்தின் ஒரு பகுதியாக நாணய […]













