ஐரோப்பா

ரஷ்ய அதிபர் மற்றும் இந்தியப் பிரதமர் இடையே தொலைபேசி உரையாடல்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். உக்ரைன் மற்றும் வரவிருக்கும் தேர்தல் தொடர்பில் உரையாடப்பட்டதாக கிரெம்ளின் தெரிவித்துள்ளது. மேலும், இந்தியாவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் ரஷ்யாவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலிலும் இருவரும் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். மாஸ்கோவின் இராணுவப் பிரச்சாரத்தை அவ்வப்போது விமர்சிக்கும் அதே வேளையில், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுடன் நெருக்கமாக இருந்தும், உக்ரைனில் போர் வெடித்ததில் இருந்து ரஷ்யாவுடன் இந்தியா பாரம்பரியமாக நட்புறவைப் […]

இலங்கை

யாழில் கைக்குண்டுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் – இளவாலையில் நபரொருவர் கைக்குண்டுடன் கைது செய்யப்பட்0டுள்ளார். குறித்த சந்தேகநபரிடம் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் மேலும் ஒரு சந்தேகநபர் சான்று பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது நேற்று (14) திருட்டு வழக்குகளில் தலைமறைவாகியிருந்த இளவாலை நாதவோலை பகுதியினை சேர்ந்த 37 வயதான நபரை கைது செய்ய சென்ற போது சந்தேக நபரிடம் இருந்து கைக்குண்டு மற்றும் கத்தி என்பன கைப்பற்றப்பட்டது. குறித்த சந்தேநபரை கைது செய்த பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். சந்தேகநபர்கள் […]

இந்தியா

சூரத்தில் ராமர் பெயருடன் கூடிய தொப்பிகள் தயாரிப்பு

அயோத்தியில் கட்டப்பட்டுவரும் பிரமாண்ட ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா எதிர்வரும் 22ம் திகதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ஜவுளி உற்பத்தியாளர்கள், ராமர் பெயருடன் கூடிய தொப்பிகளை தயாரிக்கத் தொடங்கியுள்ளனர். சுமார் 2 லட்சம் வரையிலான தொப்பிகள் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் வினியோகிக்கப்பட உள்ளது. ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா விழாவுக்கான ஏற்பாடுகளை மாநில அரசு செய்து வருகிறது.

இலங்கை

முக்கிய மூன்று மாவட்டங்களுக்கு சுகாதாரத்துறை விடுத்துள்ள எச்சரிக்கை

  • January 15, 2024
  • 0 Comments

கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் அஜித் வீரசுந்தர தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை மற்றும் கொழும்பு கோட்டை பகுதிகளில் காற்று மாசு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் முகக்கவசம் அணியுமாறு சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

இந்தியா பொழுதுபோக்கு

கோடிக்கணக்கில் பணத்தை கொட்டி அயோத்தியில் வீட்டுமனை வாங்கிய பாலிவுட் சூப்பர் ஸ்டார்!

  • January 15, 2024
  • 0 Comments

அயோதி ராமர் கோவிலுக்கான குடமுழுக்கு நெருங்கிவரக்கூடிய வேளையில் அங்கு பாலிவுட் நடிகர் அமிதாபச்சன் பிரமாண்ட வீட்டுமனை வாங்கியுள்ளார். அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் குடமுழுக்கு விழா ஜனவரி 22 அன்று பிரம்மாண்டமாக நடக்க உள்ளது. இதற்காக பாலிவுட் நடிகர்கள் அமிதாப்பச்சன், அலியா பட், ரன்பீர், ரஜினிகாந்த், துர்கா ஸ்டாலின் என பல திரை பிரபலங்களுக்கும், முக்கிய அரசியல் தலைவர்களுக்கும் நாடு முழுவதும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற ஒரு சூழ்நிலையில் தான் நடிகர் அமிதாபச்சன் அயோத்தி […]

ஐரோப்பா

சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மேம்படுத்த திட்டமிடும் சுவிஸ் மற்றும் சீனா!

  • January 15, 2024
  • 0 Comments

சீனாவும் சுவிட்சர்லாந்தும் தங்களது சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மேம்படுத்தவும், இரு நாடுகளுக்கு இடையேயான பயணத்திற்கான விசா நடைமுறைகளை எளிதாக்கவும் பேச்சுவார்த்தையை விரைவுபடுத்த ஒப்புக்கொண்டுள்ளதாக சீனாவின் அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. பெர்னும் பெய்ஜிங்கும் 2013 முதல் ஒரு தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை விரிவுபடுத்துவதற்கான முறையான பேச்சுவார்த்தைகளை முன்கூட்டியே தொடங்க ஒப்புக்கொண்டதாக மாநில செய்தி நிறுவனம் சின்ஹுவா தெரிவித்துள்ளது. சுவிஸ் குடிமக்கள்  விசா இல்லாமல் நுழைவதற்கு சீனாவும் ஒப்புக்கொண்டது. கோவிட் -19 தொற்றுநோய்க்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான […]

இந்தியா

பஞ்சாபில் காதலி போல் வேடமணிந்து போட்டித்தேர்வு எழுத சென்ற காதலன்!!

  • January 15, 2024
  • 0 Comments

பஞ்சாபில் காதலி போல் வேடம் அணிந்து போலி ஆவணங்களை உருவாக்கி போட்டித்தேர்வு எழுத சென்ற காதலனை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து பொலிஸில் ஒப்படைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் பகுதியில் சுகாதாரத் துறை பணியாளர்களுக்கான போட்டித் தேர்வு கடந்த ஜனவரி 7ம் திகதி நடைபெற்றது. பாபா பரித் பல்கலைகழகம் சார்பில் டிஏவி பப்ளிக் பள்ளியில் இந்த தேர்வுகள் நடைபெற்றது. இதில் பரம்ஜித் கவுர் என்ற பெண் ஒருவர் தேர்வு எழுதுவதற்காக வருகை தந்திருந்தார். சிவப்பு […]

இலங்கை

உணவு டெலிவரி பையை சோதனையிட்ட அதிரடிப்படையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

  • January 15, 2024
  • 0 Comments

உணவு டெலிவரி என கூறி போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த நபரொருவர் விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். யுக்திய சோதனை நடவடிக்கையின் கீழ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் படி, அதன் அதிகாரிகள் குழுவொன்று நேற்று பிற்பகல் எடேரமுல்ல பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபரை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட போது சந்தேகநபரிடம் இருந்து 25 கிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது […]

உலகம்

செயற்கை நுண்ணறிவால் பறிபோகும் தொழில்வாய்ப்புகள் : காத்திருக்கும் ஆபத்து!

  • January 15, 2024
  • 0 Comments

உலகில் 60 சதவீத வேலைகள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதால் பாதிக்கப்படும் என சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் நடைபெற்ற பேட்டியில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  வளரும் நாடுகளில் பாதிப்பு 40 சதவீதம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அதிகமான மக்களுக்கு நன்மைகளை உருவாக்க உதவும் என்றும்  கூறியுள்ளார்.

பொழுதுபோக்கு

ரஜினியைப் பார்க்க கடலென திரணடட மக்கள்… பொங்கியெழுந்த பக்கத்து வீட்டுக்காரர்…

  • January 15, 2024
  • 0 Comments

பொங்கல் திருநாளான இன்று போயஸ் கார்டனில் உள்ள தனது வீடு முன்பு கூடியிருந்த ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்த நிலையில், அங்கு கூடிய ரசிகர்களால் பக்கத்து வீட்டாருக்கு இடையூறு ஏற்பட்டதாக கூறிய பெண்மணியின் வீடியோ வெளியாகி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தனது வீட்டு முன் திரளும் ரசிகர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பார். அந்த வகையில், தைத்திங்கள் முதல் நாளான பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னை போயஸ் கார்டன் பகுதியில் இருக்கக்கூடிய நடிகர் ரஜினிகாந்த் வீட்டின் […]