இலங்கையில் கடும் நெருக்கடி நிலை – மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையின் வடக்கு, கிழக்கு, வட மத்திய மாகாணங்களுக்கும் மொனராகலை மாவட்டத்திற்கும் வெப்பம் தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியளவு வெப்பம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ஆகவே அந்தப் பகுதிகளில் வாழும் மக்கள் வெப்பம் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய, அதிகளவு நீரைப் பருகுமாறும் நிழலான இடங்களில் ஓய்வெடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை, வறட்சி காரணமாக 132,000-இற்கும் அதிகமான குடும்பங்களுக்கு குடிநீரை விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. […]













