துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாய்! பின்னணியில் வெளியான காரணம்
பளை இயக்கச்சி இராணுவ முகாம் ஒன்றிலிருந்து T-56 ரக துப்பாக்கி மற்றும் நான்கு மகசீன்களுடன் குருநாகல் பிரதேசத்தில் உள்ள தனது வீட்டுக்குச் செல்ல முற்பட்ட இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இராணுவ சிப்பாய் மாங்குளம் புகையிரத நிலையத்தில் வைத்து இன்று (04) கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாதாவது, இயக்கச்சி முகாம் ஒன்றில் பணியாற்றும் இராணுவ சிப்பாய் ஒருவர் விடுமுறையில் வீட்டுக்குச் செல்லும் வேளையில் தனது T-56 ரக துப்பாக்கியையும் எடுத்துச் சென்றுள்ளார். […]













