திருச்சியில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு தற்கொலை செய்து கொண்ட வாலிபர்
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அடுத்துள்ள தழுதாளப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வடிவேலு.கூலி தொழிலாளி இவரது மகன் நவீன்குமார் (17). திருச்சி மாவட்டம் முசிறியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து வந்தார். குடும்ப பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு நவீன்குமார், விடுமுறை நாட்களில் கூலி வேலைக்கு சென்று வருவது வழக்கம். அப்படி லால்குடி பகுதியில் வேலைக்கு சென்றபோது அந்த பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம், ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. […]













