நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; டெல்லிவரை அதிர்வு!
நேபாளத்தை மையமாகக் கொண்டு 6.2 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்ட நிலையில் டெல்லி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்தனர். இது தொடர்பாக நில அதிர்வுக்கான தேசிய மையம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”நேபாளத்தில் இன்று மதியம் 2.51 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானது. நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. […]













