வட அமெரிக்கா

அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகரை பதவி நீக்க நடவடிக்கை

  • October 3, 2023
  • 0 Comments

அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியை பதவி நீக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அவர் சமீபத்தில் அமெரிக்க அரசு நிறுவனங்களுக்கு நிதி வழங்குவதற்கான சட்டத்தினை நிறைவேற்ற குடியரசுக் கட்சியின் ஆதரவை வழங்க நடவடிக்கை எடுத்திருந்தார். இதன் காரணமாக அமெரிக்க அரசை முடக்கும் முடிவு தடுக்கப்பட்டது. இதற்கு முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பை ஆதரிக்கும் குடியரசு கட்சியின் மற்றொரு குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சபாநாயகர் அமெரிக்க துணை ஜனாதிபதிக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் […]

இலங்கை

எதிர்க்கட்சிக்கு சவால் விடுத்த நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச

  • October 3, 2023
  • 0 Comments

முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவிற்கு யாராவது அழுத்தம் கொடுத்திருந்தால் அரசாங்கத்தை குறைகூறுவதை விடுத்து அது தொடர்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடருமாறு நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச, எதிர்க்கட்சிக்கு சவால் விடுத்துள்ளார். நீதித்துறையைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசாங்கத்திற்கு இல்லை. வசதிகளை வழங்குதல் மற்றும் சட்டங்களை இயற்றும் வேலையைத் தான் அரசாங்கம் செய்கிறது என அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். முல்லைத்தீவு நீதிபதியின் தீர்ப்பை மாற்றுமாறு அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷமன் கிரியெல்ல கூறிய போதே நீதியமைச்சர் இவ்வாறு […]

இலங்கை

மன்னாரில் அம்புலன்ஸ் சாரதியின் மோசமான செயல் – உடனடியாக பதவி நீக்கம்

  • October 3, 2023
  • 0 Comments

மன்னாரில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட தாக கூறப்படும் முருங்கன் வைத்தியசாலை அம்புலன்ஸ் சாரதி உடனடியாக பதவி நீக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்… முருங்கன் ஆதார வைத்தியசாலையில் பணியாற்றும் வங்காலை யை சேர்ந்த சாரதி ஒருவரும் வவுனியா வைத்தியசாலையில் பணியாற்றும் நபர் ஒருவரும் ஐஸ் போதை பொருள் விற்பனைக்கு என 179 கிராம் எடை கொண்ட ஐஸ் போதைப்பொருள் பொதி ஒன்றை கடந்த […]

இலங்கை

சரவணராஜா விலகல் – 2வது நாளாக முல்லைத்தீவு சட்டத்தரணிகளின் பணிப்பகிஸ்கரிப்பு

  • October 3, 2023
  • 0 Comments

முல்லைத்தீவு நீதிபதி ரீ.சரவணராஜா அவர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் நேற்று (02) ஆரம்பித்த காலவரையறையின்றிய தொடர் நீதிமன்ற புறக்கணிப்பு நடவடிக்கைகள் இன்று(03) இரண்டாவது நாளாக தொடர்கிறது நீதி துறைக்கான சுதந்திரமும், சுயாதீன தன்மைகளும் உறுதி செய்யப்படும் வரை பணிபுறக்கணிப்பில் ஈடுபடுவோம் என முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானம் மேற்கொண்டதாக முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் த. பரஞ்சோதி ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார் அதற்கமைய நேற்று (02) ஆரம்பித்த காலவரையறையின்றிய தொடர் நீதிமன்றப் […]

இலங்கை

மட்டக்களப்பில் மரத்தின் கிளைகளை வெட்டிய இளைஞனுக்கு நேர்ந்த துயரம்

  • October 3, 2023
  • 0 Comments

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிமுன்மாரி கிராமத்தில் மரத்தின் கிளைகளை வெட்டிக்கொண்டிருந்த இளைஞன் மரக்கிளையுடன் கீழே விழுந்த நிலையில் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இன்று தனது சகோதரனுடன் தமக்கு சொந்தமான காணியை விவசாய நடவடிக்கைக்காக துப்பரவு செய்ய சென்ற வேளை புளிய மரத்தின் கிளைகளை வெட்டி அகற்றிக்கொண்டிருந்தபோது குறித்த கிளையுடன் கீழே விழுந்த இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 28 வயதுடைய இளைஞனே இவ்வாற உயிரிழந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளார். கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுகோளிற்கு […]

இலங்கை

முல்லைத்தீவில் பொலிஸ் உத்தியோகத்தர் மரணம்

  • October 3, 2023
  • 0 Comments

முல்லைத்தீவில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இன்றைய தினம் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு தலைமை பொலிஸ் நிலையத்தில் நிர்வாக பிரிவில் சாஜனாக கடமை புரியும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் முல்லைத்தீவு விளையாட்டு மைதானத்திற்கு பின்பாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கென புதிதாக கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் கட்டட வளாகத்திலுள்ள குளியல் அறையில் தூக்கில் தாெங்கிய நிலையில் இன்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவத்தில் அம்பாறையை சேர்ந்த இராமநாதன் சத்தியநாதன் எனும் 35 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு […]

இலங்கை

சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதி – வீதிக்கு இறங்கிய சட்டத்தரணிகள்

  • October 3, 2023
  • 0 Comments

முல்லைதீவு நீதிபதி சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக திருகோணமலை நீதிமன்றத்துக்கு முன்னால் இன்று (03) சட்டத்தரணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருகோணமலையில் சட்டத்தரணிகள் சங்கத்தினால் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நீதித்துறைக்கு ஏற்பட்ட இந்த அச்சுறுத்தலை கண்டித்து சட்டத்தரணிகள் பதாதைகளை ஏந்தியவாறு சட்ட ஆட்சியை நிறுத்து நீதித்துறையில் தலையிடாதே! போன்ற பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கை

திருகோணமலையில் மரவள்ளி தோட்டத்தில் சிக்கிய மர்மம் – கைது செய்யப்பட்ட இளைஞன்

  • October 3, 2023
  • 0 Comments

திருகோணமலை- நிலாவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சிறுபிட்டிகுளம் பகுதியில் மரவள்ளி தோட்டத்தில் கஞ்சா செடிகளை வளர்த்து இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்றிரவு (02) இடம்பெற்றுள்ளது. சிறுபிட்டிகுளம் பகுதியில் மரவள்ளித் தோட்டத்திற்குள் கஞ்சா செடிகளை மறைத்து வளர்த்து வருவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக குறித்த தோட்டத்தை சோதனையிட்டபோது எட்டு கஞ்சா செடிகளை கண்டுபிடித்துள்ளதாகவும் சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் நிலாவெளி […]

வட அமெரிக்கா

காசநோய் மருந்து – Johnson & Johnson வெளியிட்ட அறிவிப்பு

  • October 3, 2023
  • 0 Comments

காசநோய் மருந்துக்கான தன்னுடைய காப்புரிமையை நடைமுறைப்படுத்தப் போவதில்லை என அமெரிக்க மருந்தாக்க நிறுவனமான Johnson & Johnson அறிவித்துள்ளது. குறைந்த, நடுத்தர வருமானமுள்ள 134 நாடுகளில் Bedaquiline என்னும் அந்த மருந்து பயன்படுகிறது. காப்புரிமையைச் செயல்படுத்த வேண்டாம் என்று உலக அளவில் நெருக்குதல் ஏற்பட்டது. Sirturo என்னும் வணிகப் பெயரில் Johnson & Johnson நிறுவனம் மருந்தை விற்பனை செய்கிறது. கடந்த 40 ஆண்டுகளில் காசநோய் சிகிச்சைக்காக அங்கீகரிக்கப்பட்ட முதல் மருந்து அது. மற்ற மருந்துகளைவிட அதிகப் […]

இலங்கை

இலங்கையில் 4000 ஆசிரியர் வெற்றிடங்கள்!

  • October 3, 2023
  • 0 Comments

4000 ஆசிரியர்களை இணைத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக மேல் மாகாண ஆளுநர் ரொஷான் குணதிலக்க தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் நேர்முகத் தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது மேல் மாகாணத்தில் 4000 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளை கற்பிப்பதற்கான ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதாக மேல்மாகாண ஆளுநர் மேலும் சுட்டிக்காட்டினார்.