மாலைத்தீவிலிருந்து வெளிநாட்டு ராணுவம் வெளியேற்றப்படும் – முகமது முயீஸ் அதிரடி
மாலைத்தீவில் முகாமிட்டுள்ள வெளிநாட்டு ராணுவம் உடனடியாக வெளியேற்றப்படும் என, அந்நாட்டின் புதிய அதிபராக பதவியேற்க உள்ள முகமது முயீஸ் தெரிவித்துள்ளார். தெற்காசிய நாடான மாலைத்தீவில் அண்மையில் அதிபர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த முகமது முயீஸ் வெற்றி பெற்று அந்நாட்டின் புதிய அதிபராக பொறுப்பேற்க உள்ளார். வெற்றிக்கு பிந்தைய முதல் பொதுக்கூட்டத்தில் அவர் பேசும்போது, ”மாலைத்தீவில் முகாமிட்டுள்ள வெளிநாட்டு ராணுவ படைகள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றப்படும்” என தெரிவித்தார். […]













