இந்தியா

விரைவு ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணித்த BJP-யின் முன்னாள் தலைவர்

  • October 16, 2023
  • 0 Comments

விரைவு ரயிலின் குளிர்சாதன பெட்டியில் பாஜக முன்னாள் தலைவர் ஒருவர் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய தலைநகர் டெல்லியிலுள்ள ராஜேந்திர நகர் முனையத்திலிருந்து ராஜஸ்தான் மாநிலத்தின் அஜ்மேர் சந்திப்பு வரை லியாரத் விரைவு ரயில் செல்கிறது. இந்த ரயிலில், பீகார் மாநிலத்தின் பாக்ஸார் மாவட்ட பாஜக முன்னாள் தலைவர் ராணா பிரதாப் சிங் பயணம் செய்துள்ளார். இவர், தனது நண்பர்களுடன் இந்த விரைவு ரயிலில் உள்ள முதல் வகுப்பு […]

பொழுதுபோக்கு

லியோவில் இலங்கைப் பிரபலம் ஜனனி… இணையத்தில் வைரலாகும் கிளிக்ஸ்…

  • October 16, 2023
  • 0 Comments

விஜயின் லியோ படத்தில் பிக் பாஸ் பிரபலம் ஜனனி நடித்திருக்கும் தகவல் தற்போது மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது. மேலும், இந்த லியோ படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இன்னும் படம் ரிலீசாக சில தினங்கள் இருக்கும் நிலையில் ரசிகர்கள் சில எதிர்பார்ப்பும், ஆரவாரமும் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் படத்திற்கான ப்ரீ புக்கிங் மும்முரமாக நடைபெற்று வருகிறது. […]

உலகம்

அமெரிக்காவில் 06 வயது குழந்தை மீது கத்திக்குத்து தாக்குதல்!

  • October 16, 2023
  • 0 Comments

ஹமாஸ் போராளிகளுக்கும் இஸ்ரேலியப் படைகளுக்கும் இடையிலான மோதல்களின் விளைவாக வெறுப்பைத் தூண்டும் வகையில் பிற நாடுகளில் இருந்து பல்வேறு தாக்குதல்கள் மற்றும் கொலைகள் பதிவாகியுள்ளன. இதன்படி கடந்த சனிக்கிழமை, அமெரிக்காவில் பாலஸ்தீன குழந்தை ஒன்று கத்திகுத்து தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. 71 வயதான முதியவர் ஒருவர் 06 வயது பாலஸ்தீன குழந்தையை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். குழந்தையின் உடலில் 26 கத்திக் குத்து காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. குழந்தையின் தாய் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஐரோப்பா

பிரித்தானியாவில் புலம்பெயர்ந்த ஒருவரால் இரட்டைக் கத்திக்குத்து தாக்குதல் : ஒருவர் பலி

பிரித்தானியாவில் புலம்பெயர்ந்த ஒருவரால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இரட்டைக் கத்திக்குத்து சமபவம் குறித்து பயங்கரவாத தடுப்பு பொலிசார் விசாரணை முன்னெடுத்துள்ளனர். கைதான சந்தேகநபர் மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்தவர் என்றே கூறப்படுகிறது. இந்த இரட்டை கத்திக் குத்து சம்பவத்தை பயங்கரவாத செயலாக தற்போது கருதவில்லை என்றே அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், டீஸ் ஸ்ட்ரீட் பகுதியில் ஒருவரின் மரணம் மற்றும் மற்றொருவர் தாக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தி வருவதாக கிளீவ்லேண்ட் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பா

இந்த நாடுகளுக்குச் செல்லவேண்டாம்: ஜேர்மன் வெளியியுறவு அமைச்சகம் விடுத்துள்ள பயண எச்சரிக்கை

  • October 16, 2023
  • 0 Comments

நேற்று ஞாயிற்றுக்கிழமை, ஜேர்மன் வெளியுறவு அமைச்சகம், இஸ்ரேல் ஹமாஸ் மோதலில் தொடர்புடைய நாடுகள் தொடர்பில் பயண எச்சரிக்கையை வெளியிட்டது.இஸ்ரேல், பாலஸ்தீனம், லெபனான் ஆகிய நாடுகளுக்குச் செல்வது தொடர்பில் ஜேர்மனி பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. காசா பகுதியில் இஸ்ரேல் தரைவழித் தாக்குதலில் ஈடுபடலாம் என எதிர்பார்க்கப்படுவதைத் தொடர்ந்து, ஜேர்மனியின் வெளியுறவு அலுவலகம், இஸ்ரேல், பாலஸ்தீனிய பிரதேசங்கள் மற்றும் லெபனானுக்கான பயண எச்சரிக்கையை நேற்று வெளியிட்டுள்ளது. காசா பகுதி தொடர்பில் ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முந்தைய வார இறுதியில் ஹமாஸ் […]

பொழுதுபோக்கு

இலங்கையிலும் முன்பதிவு செய்வதில் சாதனை படைத்து வரும் லியோ

  • October 16, 2023
  • 0 Comments

நடிகர் விஜய்யின் லியோ படம் வெளியாக இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், அப்படத்திற்கான முன்பதிவு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. லியோ படத்துக்கான முன்பதிவு வெளிநாட்டில் கடந்த மாதமே தொடங்கிவிட்டாலும் இந்தியாவில் சில தினங்களுக்கு முன்னர் தான் தொடங்கியது. முன்பதிவு ஆரம்பமானதும் டிக்கெட்டுகள் சரசரவென விற்றுத்தீர்ந்து வருகின்றன. இதனால் லியோ படத்திற்கான காட்சிகள் அனைத்தும் ஹவுஸ்புல் ஆகிய வண்ணம் உள்ளன. நடிகர் விஜய்க்கு தமிழ்நாட்டில் மட்டுமல்லாது இலங்கையிலும் ரசிகர் கூட்டமே இருக்கின்றனர். முன்பதிவு மூலமே தற்போது மாஸான […]

இலங்கை

அரசியலில் பாலியல் இலஞ்சம் கோருபவர்களே அதிகம் : கணபதி பிள்ளையை சூரியகுமாரி

அரசியலில் பாலியல் இலஞ்சம் கோருபவர்களே அதிகம் காணப்படுவதாக காணப்படுவதாக கணபதி பிள்ளையை சூரியகுமாரி தெரிவித்துள்ளார். அரசியலுக்கு கிராமப்புறங்களில் இருந்து வரும் பெண்கள் பாதிக்கப்படுகின்றார்கள் பெண்களை எவ்வாறு பார்க்கின்றார்கள் என்பது பற்றி நாங்கள் நன்று அறிந்து உள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பெண்களின் அரசியலுக்கான தடைகளை கலைந்தறிவோம் என்ற தொல்பொருளில் தேசிய ஒற்றுமைக்கான அபிவிருத்தி மன்றத்தினால் வெகுஜன ஊடக ஒத்துழைப்பு செயல் திட்டம் மற்றும் ஊடக கலந்துரையாடல் திருகோணமலையில் உள்ள மல்லிகா ஹோட்டலில் இடம் பெற்ற ஊடக சந்திப்பிலேயே […]

ஆசியா

தென்மேற்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

  • October 16, 2023
  • 0 Comments

தென்மேற்கு ஜப்பானில் உள்ள மியாகோ தீவில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. குறித்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சேதம் அல்லது உயிர்சேதம் குறித்து உடனடி தகவல் ஏதும் இல்லை.

இலங்கை

மைத்திரியின் வழக்கில் இருந்து நீதிபதி ஒருவர் விலகல்!

  • October 16, 2023
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை விசாரணை செய்வதிலிருந்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நிஷங்க பந்துல கருணாரத்ன இன்று (16.10) விலகியுள்ளார். உயிர்த்த ஞாயிறு அன்று நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காததற்காக தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாடு செல்லுபடியாகாத வகையில் ஆணை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதியினால் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்று ஐவர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட […]

உலகம்

ஹமாஸ்-இஸ்ரேல் மோதல்: ஐரோப்பாவில் பரவும் யூத எதிர்ப்பு சம்பவங்கள்

ஹமாஸ்-இஸ்ரேல் மோதல் ஐரோப்பாவில் பரவியுள்ள நிலையில், யூத எதிர்ப்பு சம்பவங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து யூத சமூகத்திற்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் ஐரோப்பாவின் மிகப்பெரிய யூத சமூகத்தின் தாயகமாகும், சனிக்கிழமை முதல் நாடு சுமார் 50 யூத-விரோத செயல்களை பதிவு செய்துள்ளது. இந்நிலையில் பிரான்சில் 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பிரித்தானிய பிரதம மந்திரி ரிஷி சுனக் யூத பள்ளிகள் மற்றும் ஜெப ஆலயங்களைப் பாதுகாப்பதற்காக மூன்று மில்லியன் பவுண்டுகள் (€3,471,316) வழங்க உறுதியளித்துள்ளார்.