மைத்திரியின் வழக்கில் இருந்து நீதிபதி ஒருவர் விலகல்!
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை விசாரணை செய்வதிலிருந்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நிஷங்க பந்துல கருணாரத்ன இன்று (16.10) விலகியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு அன்று நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காததற்காக தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாடு செல்லுபடியாகாத வகையில் ஆணை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதியினால் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று ஐவர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் நீதிபதி மேற்படி அறிவித்துள்ளார்.
(Visited 3 times, 1 visits today)