மத்திய கிழக்கு

இஸ்ரேலிய பிரதமர் பொய்களை பரப்பி வருவதாக பாலஸ்தீன் குற்றச்சாட்டு!

  • October 18, 2023
  • 0 Comments

காசா நகரில் உள்ள மருத்துவமனையில் நடந்த குண்டுவெடிப்பு குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பொய்களைப் பரப்பி வருவதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான பாலஸ்தீன தூதர் ரியாட் மன்சூர் குற்றம் சாட்டியுள்ளார். குறித்த தாக்குதலில் 500 பேர் வரையில் உயிரிழந்துள்ள நிலையில், பலர் காயமுற்றுள்ளனர். அத்துடன் உலக நாடுகள் பல கண்டனம் வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில், குண்டுவெடிப்பு இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலின் விளைவு என்று ஹமாஸ் கூறியது. இஸ்ரேலின் இராணுவம் குற்றச்சாட்டுகளை மறுத்தது.  மற்றும் பாலஸ்தீனிய போராளிகளின் […]

இலங்கை

கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு!

  • October 18, 2023
  • 0 Comments

திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (17.10) இரவு 8.45 மணியளவில் கந்தளாய்  கல்மதியா பகுதியில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த நபரின்  சடலம் அதே புகையிரதத்தில் கந்தளாய் புகையிரத நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. இறந்தவர் பலருடன் சேர்ந்து வயல்களில் வேலை செய்ததாகவும், வேலையை முடித்துவிட்டு ரயில் பாதையில் அமர்ந்து மது அருந்தியபோது குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 34 வயதுடைய இரண்டு […]

இலங்கை

ஜனாதிபதி செயலாளரின் கையொப்பத்துடன் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!

  • October 18, 2023
  • 0 Comments

மின்சாரம் தொடர்பான அனைத்து சேவைகள்,  பெட்ரோலிய பொருட்கள் மற்றும் எரிபொருளின் வழங்கல் அல்லது விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகள் உள்ளிட்ட இன்னும் பிற சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக அறிவித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தல்  ஜனாதிபதியின் செயலாளரின் கையொப்பத்துடன்  வெளியிடப்பட்டுள்ளது. வர்த்தமானி அறிவித்தலின்படி, மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள் மற்றும் பிற பொது நிறுவனங்களில் நோயாளிகளின் பராமரிப்பு மற்றும் வரவேற்பு,  உணவு மற்றும் சிகிச்சை தொடர்பாக தேவைப்படும்  அனைத்து சேவைகள், வேலை […]

பொழுதுபோக்கு

லியோ பட சீக்ரெட்டை போட்டுடைத்த உதயநிதி… மகிழ்ச்சியில் ரசிகர்கள்

  • October 18, 2023
  • 0 Comments

தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான லியோ நாளை உலகமெங்கும் ரிலீஸ் ஆக உள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார் படம் நாளை தமிழ்நாட்டில் மட்டும் 850க்கும் மேற்பட்ட திரைகளில் ரிலீஸ் ஆக உள்ளது. லியோ படம் அறிவிக்கப்பட்டதில் இருந்து தற்போது வரை ரசிகர்கள் முன்வைக்கும் ஒரே கேள்வி இது எல்சியு-வில் வருமா வராதா என்பது தான். படக்குழுவும் இதை சீக்ரெட்டாகவே வைத்துள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் […]

உலகம்

ட்விட்டர் பயனர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ள எலான்… இனி ட்வீட் செய்யவும் கட்டணம்…!

  • October 18, 2023
  • 0 Comments

ட்விட்டர் சமூக வலைதளத்தில் ட்வீட், ரீட்வீட் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளவும் அதன் பயனர்கள் இனி கட்டணம் செலுத்த வேண்டும் என்ற புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. ட்விட்டர் சமூக வலைதளத்தை உலக கோடீஸ்வரரும் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களின் அதிபருமான எலான் மஸ்க் வாங்கியது முதலே, அங்கே அதிரடி மாற்றங்கள் அமலாகி வருகின்றன. நிர்வாக சீரமைப்பு, சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் பாதிக்கும் மேலான பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பியதோடு, பலவிதமான கட்டண நடைமுறைகளையும் அமல்படுத்தி […]

இலங்கை

எதிர்வரும் 20ம் திகதி ஹர்த்தாலை எதிர்த்து துண்டுப் பிரசுரம் விநியோகம்

  • October 18, 2023
  • 0 Comments

எதிர்வரும் 20 ஆம் திகதி அரசியல் கட்சிகளால் வடக்கு கிழக்கு மாகாணங்களை முடக்கி ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் குறித்த ஹர்த்தாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தென்மராட்சி பகுதிகளில் புதன்கிழமை (18)துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்படுகின்றன. இந்த துண்டு பிரசுரங்களானது தென்மராட்சி மக்கள் உரிமை பாதுகாப்பு அமைப்பினால் வழங்கப்பட்டு வருகிறது. அந்த துண்டு பிரசுரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கையில் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் வடக்கு கிழக்கை முடக்கி ஹர்த்தால் போடுவதன் மூலம் பாதிக்கப்படுவது யார்? இந்த ஹர்த்தால் மூலம் தமிழ் […]

பொழுதுபோக்கு

JUSTIN ; ரோகிணி திரையரங்கில் ‘லியோ’ திரைப்படம் இல்லை – ரசிகர்கள் அதிர்ச்சி

  • October 18, 2023
  • 0 Comments

‘லியோ’ திரைப்படம் இங்கு திரையிடப்படவில்லை என சென்னை ரோகிணி திரையரங்கில் போர்டு வைக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி. திரையரங்கு உரிமையாளர்களுக்கு படத்தின் தயாரிப்பாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினையை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும், படத்தின் வருமானத்தில் 75 வீதத்தை தருமாறு திரைப்பட தயாரிப்பாளர்கள் கோரியிருந்தனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள லியோ திபை்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியிலும், பல தடைகளைக்கடந்தும் நாளை லெளியாகவுள்ள குறிப்பிடத்தக்கது. https://twitter.com/ThanthiTV/status/1714527753008296171  

இலங்கை

இலங்கையில் பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் பொதுமக்கள் முறையிடலாம்

  • October 18, 2023
  • 0 Comments

இலங்கை பொலிஸ் உத்தியோகத்தர்களின் முறைகேடுகள் மற்றும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் பொதுமக்கள் முறைப்பாடு செய்ய சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, முறையீடு செய்வதற்கு தொலைபேசி இலக்கமொன்றை இலங்கை பொலிஸ் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இவ்வாறான முறைப்பாடுகளை “118” என்ற தொலைபேசி இலக்கத்திற்கு பொதுமக்கள் தகவல்களை வழங்க முடியும். குறித்த தொலைபேசி இலக்கம் 24 மணிநேரமும் இயங்கும் எனவும் முறைப்பாடுகளிலிருந்து பெறப்படும் தகவல்களின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை

இலங்கையில் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்திய போர்!

  • October 18, 2023
  • 0 Comments

வெளிநாட்டு சந்தையில் இந்த நாட்களில் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை இதனை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் காஸாவில் நிலவும் நெருக்கடி நிலை வெளிநாட்டு சந்தைகளில் தங்கத்தின் விலை உயர்வை நேரடியாக பாதித்துள்ளது. விலைமதிப்பற்ற உலோக பகுப்பாய்வு பணியகத்தின் உதவிப் பணிப்பாளர் இந்திக்க பண்டார இதனை தெரிவித்துள்ளார். உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்புடன் ஒப்பிடுகையில், கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் உள்நாட்டு சந்தையிலும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக […]

இலங்கை பொழுதுபோக்கு

லியோ படத்தை இலங்கையில் நிறுத்துங்கள்… தமிழ் அரசியல்வாதிகள் விஜய்க்கு கடிதம்??

  • October 18, 2023
  • 0 Comments

லியோ திரைப்படத்தை இலங்கையில் எதிர்வரும் 20ம் திகதி திரையிடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின. எனினும் குறித்த கடிதம் போலியானது என இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைகலநாதன் இலங்கை ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்தார். இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர்களான சி.வி.விக்னேஷ்வரன் மற்றும் செல்வம் அடைகலநாதன் ஆகியோரினால், நடிகர் விஜயிடம் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதை போன்ற கடிதமொன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. “இது போலியான கடிதம். […]