இலங்கை

திருகோணமலைக்கு சமயச் சுற்றுலா சென்ற முதியவர்கள்

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள காரைதீவு பிரதேசத்தை சேர்ந்த 50ற்கும் மேற்பட்ட முதியவர்கள் இன்று (04) திருகோணமலை மாவட்டத்துக்கு சமயச் சுற்றுலா ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். வெருகல் சித்திர வேலாயுத சுவாமி கோவில் ,கங்குவேலி அகத்தியர் தாபனம் சிவன் கோவில், கோணேஸ்வரர் கோவில் ,இலட்சுமி நாராயணன் கோவில்,காளிகோவில் கன்னியா வெந்நீர் ஊற்று முதலிய இடங்களையும் பார்வையிட்டனர் . திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கப் பணிமனைக்கும் முதியோர்கள் வருகை தந்ததுடன் மாவட்டத்தில் காணப்படும் முக்கிய கோயில்கள் குறித்தும் புராண கால வரலாறுகள் […]

இலங்கை

மக்கள் மீண்டும் வீதிக்கு இறங்குவார்கள் : தயாசிறி ஜயசேகர!

  • November 4, 2023
  • 0 Comments

தற்போதைய அரசு முறையாக செயற்படவில்லை எனவும் அதனால் மக்கள் மறுபடியும் வீதிக்கு இறங்குவதை தடுக்க முடியாது என்பதுடன் நானும் நிச்சயம் வீதியில் இறங்குவேன் எனவும்  பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டை மீட்பதற்கு தற்போது பொது வேலைத்திட்டமொன்று அவசியம் எனவும் அதற்கு சிவில் அமைப்புக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஒன்றுபட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். தற்போதைய அரசு முறையாக செயற்படவில்லை என குற்றம்சாட்டிய தயாசிறி ஜெயசேகர எதிரணிகள் ஒன்றிணைந்து […]

விளையாட்டு

உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் பயிற்சிகள் இரத்து!

  • November 4, 2023
  • 0 Comments

2023 உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் பயிற்சி அமர்வுகளுக்கு ஒன்றாக வந்திருந்த பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகள் திடீரென பயிற்சி அமர்வுகளை ரத்து செய்துள்ளன. டெல்லியில் நிலவும் கடுமையான காற்று மாசுதான் இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. பங்களாதேஷ் கிரிக்கட் அணி முதலில் தமது பயிற்சியை இரத்து செய்ததாகவும், இலங்கை இன்றைய பயிற்சியை ரத்து செய்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் மேற்படி முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உலகம்

உள்ளூர் ஆயுத உற்பத்தியை அதிகரிக்க உக்ரைன் முயற்சி

உக்ரைனின் புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்புத் துறைத் தலைவர், உள்ளூர் ஆயுத உற்பத்தியை அதிகரிக்க அயராது உழைத்து வருவதாகவும், நாட்டை மேற்கின் ஆயுத உற்பத்தி மையமாக மாற்ற விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். உக்ரைனின் மூலோபாய தொழில்துறை மந்திரி, ரஷ்யா தனது நாட்டின் மீது படையெடுத்தல் மற்றும் மத்திய கிழக்கில் இஸ்ரேல்-ஹமாஸ் போர் ஆகியவை நாடுகள் தங்கள் பாதுகாப்பு அமைப்புகளுக்கு செலவழிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகின்றன என்று குறிப்பிட்டுள்ளார். “உக்ரைனை சுதந்திர உலகின் ஆயுதக் களஞ்சியமாக மாற்றுவதில் நாங்கள் உண்மையில் கவனம் […]

இலங்கை

இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் பதவி விலகினார்!

  • November 4, 2023
  • 0 Comments

இலங்கை கிரிக்கெட் (எஸ்எல்சி) சபையின் செயலாளர் மொஹான் டி சில்வா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவிடம் இலங்கை அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததை அடுத்து, இலங்கை அணியின் எதிர்காலம் குறித்து கவலை எழுந்தது. இதனையடுத்து  விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க, தற்போதைய SLC நிர்வாகத்தை இராஜினாமா செய்யுமாறு அழைப்பு விடுத்தார்.  இந்நிலையில் செயலாளர் மொஹான் டி சில்வா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அணியின் வியூகம் மற்றும் தயாரிப்பு, […]

இலங்கை

உணவின் விலையும் அதிகரிப்பு!

  • November 4, 2023
  • 0 Comments

இன்று (04.11) நள்ளிரவு முதல் பல வகையான உணவு வகைகளின் விலைகளை அதிகரிக்க அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. அகில இலங்கை உணவக மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்  ஹர்ஷன ருக்ஷான் இன்று (04.11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். சீனியின் விலை அதிகரிப்பு காரணமாக தேயிலையின் விலை 5 ரூபாவினாலும் பால் தேயிலையின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் […]

தமிழ்நாடு

அமைச்சர் எ.வ.வேலு:2வது நாளாகவும் தொடரும் வருமான வரித்துறையினரின் சோதனை

  • November 4, 2023
  • 0 Comments

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு வீடு மற்றும் கல்வி நிறுவனங்களில் வருமான துறையினர் நேற்று காலை 6.30 மணிக்கு தொடங்கிய சோதனை தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர் மேலும் எ.வ.வேலு – வின் மகனான எ.வ. கம்பன் இல்லத்திலும் இரவு முதல் தொடர்ந்து வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது…… தமிழகத்தில் தொடர்ந்து திமுக பிரமுகர்களான செந்தில் பாலாஜி, பொன்முடி, ஜெகத்ரட்சகன் ஆகியோர் கருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி த்துறையினர் […]

இலங்கை

பாக்கு நீரிணையில் இந்திய சீன பலப்பரீட்சையில் முதலில் அழிவது ஈழத்தமிழர்கள் தான் : ஜனநாயக போராளிகள் கட்சி

பாக்கு நீரிணையில் இந்திய சீன பலப்பரீட்சை களமாக மாறுமாயின் முதலில் அழிவது ஈழத்தமிழர்கள் தான் என ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப்பேச்சாளர் துளசி தெரிவித்துள்ளார். இன்று (04.11.2023) அவரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ”இந்து சமுத்திர அதிகார போட்டியில் மையப்புள்ளியாகும் பாக்கு நீரிணையும் தமிழர்களின் வாழ்வாதாரமும் 99 வருட ஒப்பந்த அடிப்படையில் அம்பாந்தோட்டையை கையகப்படுத்திய சீனா தமிழர்கள் நலன் சார்ந்து செயற்படும் என நினைப்பது சிறுபிள்ளைத்தனமானது. சீனா போன்ற ஒரு […]

விளையாட்டு

தொடர்ந்து 3 சதமடித்து சச்சினின் சாதனையை முறியடித்த ரச்சின் ரவீந்திரா

  • November 4, 2023
  • 0 Comments

நியூசிலாந்து அணியின் இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா உலக கோப்பை தொடரில் 3 சதத்தை அடித்து புதிய சாதனை படைத்துள்ளார். உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 35வது லீக் போட்டியில் நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி அபாரமாக விளையாடி 401 குவித்தது. அதிலும் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்திரா அதிரடி காட்டினார். அவர் 94 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 108 எடுத்தார். […]

பொழுதுபோக்கு

மெய் மறந்து முத்தம் கொடுத்த சிம்பு.. அமைதியாக நின்ற த்ரிஷா… VTV கிசு கிசு

  • November 4, 2023
  • 0 Comments

முத்த காட்சி ஒன்றில் இயக்குநர் கட் சொல்லியும் நடிகர் சிம்பு நடிகைக்கு மெய் மறந்து முத்தம் கொடுத்ததாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். நடிகரும், சினிமாவின் மூத்த பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் நடிகை, நடிகர்கள் பற்றி பல அந்தரங்கமானா விஷயத்தை யூடியூப் சேனலில் பேசி வருகிறார். அப்படி பல சர்ச்சைக்குரிய விஷயத்தை பேசி பல பிரச்சனையிலும் தானா சென்று மாட்டிக்கொண்டுள்ளார். இருந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து பேசி வருகிறார். அந்த வகையில் யூடியூப் சேனல் ஒன்றில், பயில்வான் ரங்கநாதன் […]