வாழ்வியல்

மன உளைச்சலைப் போக்கும் வழிகள்!

மன அழுத்தம் என்பது நம்மை எந்த நேரத்திலும் தாக்கலாம். நம்மைச் சுற்றி நிலவும் சூழல்கள் மற்றும் சமூக அமைப்புகள் அடிக்கடி நமக்குத் தருவதுதான் மன அழுத்தப் பரிசுகள். மன அழுத்தம் என்பது ஒரு பெரிய பிரச்னை. மன உளைச்சல் என்பது மனது அளவில் மட்டுமல்லாமல், உடல் அளவிலும் பல பாதிப்பினை நமக்கு ஏற்படுத்துகிறது. மன உளைச்சலைப் போக்கும் சில எளிய வழிகள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

Managing Pressure and Stress | SIP Law Firm Pressure and Stress

1. நடைப்பயிற்சி: அலுவலகங்களில் அல்லது பணியிடங்களில் ஏற்படும் மன உலைச்சல்களைக் குறைக்க ஒரு எளிய வழி நடைப்பயிற்சிதான். ஆன்ம சுதந்திரத்தைப் பாழாக்கும் மன அழுத்தத்தினை ஒரு தனிமையான நடைப்பயிற்சி போக்கிவிடும். அதேவேலையில், நெருங்கிய நண்பர் துணையுடன் செல்லும் நடைப்பயிற்சியும் புத்துணர்ச்சியை அளிக்கும் என்பதை மறுத்துவிட முடியாது.

2. அழுத்தம் உண்டாக்கும் தின்பண்டங்களை கைவிடுங்கள்: நாம் உண்ணும் உணவு கூட நமக்கு மன அழுத்தத்தினை உண்டாக்கும் என்றால் நம்ப முடிகிறதா? 60 கலோரிக்குக் குறைவாக இருக்கும் உணவுப் பொருட்களை உண்டால் அது மன அழுத்தத்தை உண்டாக்கலாம். அதாவது, நீங்கள் உண்ணும் நொறுக்கு தீனிகள் இனிமையாக இருந்தால் அது மன அழுத்தத்தினை உண்டாகும். அதேபோல், உப்புத்தன்மை அதிகமாக இருக்கும் பொருட்களை உண்டால் அது மன அழுத்தத்தினைக் குறைக்கும் எனத் தெரிவிக்கிறது ஒரு ஆய்வு.

How Chronic Work Stress Damages Your Brain And 10 Things You Can Do

3. உடற்பயிற்சி: மனநிலை சோர்வாக இருந்தால், மனம் மட்டுமல்ல, உடலும் சோர்ந்துவிடும். அதற்காக படுக்கையிலேயே ஓய்ந்து விடாதீர்கள். வெளியே வந்து தூய்மையான காற்றில் உங்களை ஆசுவாசப்படுங்கள். குறிப்பாக, புத்துணர்ச்சி தரும் உடற்பயிற்சியினை தொடர்ந்து செய்து வந்தால் புத்துணர்வின் அளவு 360 டிகிரியினையும் தாண்டிச் செல்லும் என்பதை மறந்து விடாதீர்கள். உடற்பயிற்சி என்பது உங்கள் உடலுக்கான ரீசார்ஜ்!

4. யோகா ஒரு சிறந்த நண்பன்: மனத்தொய்வில் இருந்து விடுபட, அற்புதமான வழி யோகா ஆகும். மன ஊக்கத்திற்கு மட்டுமல்லாமல், உடல் ஊக்கத்திற்கும் யோகா வழிவகுக்கிறது. ஒரே நேரத்தில் உங்கள் மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை பார்த்துக்கொள்வதோடு, ஒரு அமர்வுக்குப் பிறகு நிம்மதி அளிக்கும் பெருமை யோகாவிற்கு உண்டு.

5. சிறு இடைவெளி: தொடர்ந்து ஓடிக்கொண்டு இருக்கும் இயந்திர வாழ்க்கைக்கு ஒரு இடைவெளி கொடுங்கள். இது வரவிருக்கும் மன அழுத்தத்தினைக் குறைக்கும்.

மேற்கூறிய காரணங்களால் மன அழுத்தம் ஏற்படலாம். அதனை புரிந்துக்கொண்டு நடந்துகொள்வது எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு முன்னெச்சரிக்கையாக செயல்படுவதும் முக்கியம். எனவே, பிரச்னை வருவதற்கு முன்னதாகவே அதில் இருந்து விடுப்படலாமே. ஏனெனில், ‘வருமுன் காப்பது’தானே சிறந்தது!

 

(Visited 5 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

woman exercising
வாழ்வியல்

ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

ஸ்கிப்பிங் செய்வதால் பாரிய அளவு நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றது. ஸ்கிப்பிங் என்பது ஆரோக்கியமான உடற்பயிற்சி போன்றது. இது நீங்கள் தொடர்ந்து சுவாசிக்க உதவுகிறது மற்றும் இதயத்தை பலப்படுத்துகிறது.
vegetable and meat
வாழ்வியல்

ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறதா : இந்த உணவுகளை எடுத்துகொள்ளுங்கள்!

ஒருவருக்கு ஹீமோகுளோபின் தேவையான அளவிற்கு இருப்பதை விட குறைவாக இருந்தால் அவர் எப்போதும் சோர்வாக காணப்படுவார். இதைத் தவிர உடல் வலிமையின்மைஇ சருமம் மஞ்சள் நிறமாதல்,  அசாதாரமான

You cannot copy content of this page

Skip to content