ஆசியா

சீனாவில் திருடச் சென்று குறட்டைவிட்டு தூங்கிய திருடனுக்கு நேர்ந்த கதி

  • November 25, 2023
  • 0 Comments

சீனாவில் வீடொன்றில் திருடச் சென்ற திருடன் அந்த வீட்டிலேயே குறட்டைவிட்டு தூங்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்து வீட்டுக்குள் இரவில் திருட சென்ற திருடன், வீட்டிலுள்ள அனைவரும் உறங்காமல் இருப்பதனை அவதானித்ததால் அவர்கள் உறங்கும் வரை காத்திருக்கலாம் என ஒரு அறையில் இரகசியமாக காத்திருந்துள்ளார். சிறிது நேரத்தின் பின்னர் குறித்த திருடனுக்கு தன்னை அறியாமலேயே தூக்கம் வந்துள்ளது. இதனால், அவர் அங்கு நித்திரை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், வீட்டில் இருந்த நபர்களும் உறங்குவதற்காக சென்றுள்ளனர்.சிறிது நேரத்தின் பின்னர் […]

பொழுதுபோக்கு

OTT: Netflix விஜய்யின் லியோவுக்காக ஒரு படி மேல் சென்றுள்ளது…

  • November 25, 2023
  • 0 Comments

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து சமீபத்தில் வெளியாகி பாக்ஸ் ஆபிஜை அடித்து நொருக்கிய லியோவின் OTT வெளியீடு குறித்து, Netflix ஒரு சுவாரஸ்யமான திருப்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்ட்ரீமிங் தளம், இந்திய மொழிகளுக்கு கூடுதலாக, படத்தின் ஆங்கில பதிப்பும் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. ஆங்கில பதிப்பிற்கான அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி இன்னும் வெளியிடப்படவில்லை. த்ரிஷா கிருஷ்ணன், சஞ்சய் தத், அர்ஜுன் சர்ஜா, கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், மிஷ்கின், மன்சூர் அலி கான் மற்றும் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

AI-ஆல் மாறப்போகும் உலகம்! காத்திருக்கும் ஆபத்து

  • November 25, 2023
  • 0 Comments

சமீபத்தில் பாட்காஸ் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பில்கேட்ஸ், எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு எப்படி மாறியிருக்கும் என்பது பற்றிய சுவாரசிய கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். தற்போது ஏஐ தொழில்நுட்பம் அசுர வளர்ச்சியடைந்து வரும் நிலையில், எதிர்காலத்தில் மனித குலத்திற்கு அச்சுறுத்தலாக இருக்குமா? என்ற கேள்விக்கு அவர் சுவாரஸ்யமான பதில் ஒன்றை அளித்துள்ளார். பில்கேட்ஸ் தன்னுடைய நேர்காணலில் எப்போதும் வணிகம் தொடர்பான விஷயங்கள் மட்டுமே பேசுவதில்லை. அதைத் தாண்டி பல கருத்துகளையும் அவர் பகிர்ந்து கொள்வார். AI தொழில்நுட்பம் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் அகதிகளுக்கு வெளியான தகவல் – அமுலாகும் கட்டுப்பாடு

  • November 25, 2023
  • 0 Comments

ஜெர்மனியின் அகதிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்கு பல நடைமுறைகளை அரசியல் வாதிகள் முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் அகதிகள் ஜெர்மன் நாட்டுக்குள் வருவதை கட்டுப்படுத்துவதற்காக பல நடவடிக்கைகளை ஈடுப்படுத்துவதற்காக மத்திய அரசாங்கத்திடம் பாரிய அழுத்தங்களை கொடுத்து வருகின்றது. பல மாநிலங்கள் தற்பொழுது இந்த அகதிகள் விடயத்தில் டுரிங்கன் மாநிலமானது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்து இருக்கின்றது. டிசம்பர் முதலாம் திகதியில் இருந்து டுரிங்கன் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டமான கிரைஃப் மாவட்டமானது அகதிகளுக்கு எதிர் வரும் காலங்களில் பெட்சால் காட் […]

ஆசியா

சிங்கப்பூரில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

  • November 25, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் கடுமையாக உழைக்கும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்குக் கூடுதல் நிதியுதவியை வழங்கப்படவுள்ளது. மேம்படுத்தப்பட்ட ComLink திட்டத்தின் மூலம் அது சாத்தியமாகுமாகும் என சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் சுல்கிஃப்லி தெரிவித்துள்ளார். வேலையைத் தக்கவைத்துக்கொள்ளவும் பிள்ளைகள் பாலர் பள்ளிகளுக்குத் தொடர்ந்து செல்வதை உறுதிசெய்யவும் கடுமையாக உழைக்கும் வசதி குறைந்த குடும்பத்தைச் சேர்ந்தோருக்குத் திட்டம் உதவியாக இருக்கும். அவற்றுடன் கடனைச் சரிவரத் திருப்பிச் செலுத்தவும் சொந்த வீடு வாங்கப் பணம் சேமிக்கவும் உதவித் திட்டம் கைகொடுக்கும். அடுத்த […]

ஐரோப்பா

பிரான்ஸில் குழு மோதலால் சிறுவனுக்கு நேர்ந்த கதி

  • November 25, 2023
  • 0 Comments

பிரான்ஸில் இடம்பெற்ற குழு மோதல் ஒன்றில் 16 வயதுடைய தோமஸ் (Thomas) எனும் சிறுவன் கொலை செய்யப்பட்டுள்ளார். இரு குழுக்களாக பிரிந்து மோதலில் ஈடுபடும் போது கத்திக்குத்துக்கு இலக்காகி அவர் உயிரிழந்துள்ளார். Drôme மாவட்டத்தில் உள்ள Crépol எனும் சிறிய கிராமம் ஒன்றில் இடம்பெற்றுள்ளது. 16 தொடக்கம் 20 வயதுக்குட்ட சிலர் குழு மோதலில் ஈடுபட்டுள்ளனர். ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். இதன் முடிவில் குறித்த 16 வயதுச் சிறுவன் மீது கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றது. இந்த தாக்குதலில் […]

இலங்கை

இலங்கையின் நெருக்கடிக்கு யார் காரணம்? ஜனாதிபதி ரணில் வெளியிட்ட தகவல்

  • November 25, 2023
  • 0 Comments

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுத்த தீர்மானங்களை மேற்கொண்ட பொறுப்பை முழுமையாக ராஜபக்ஸர்கள் மீது சுமத்த முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அந்த பொறுப்பின் ஒரு பகுதியே அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவின் Firstpost ஊடக வலையமைப்பிற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுன பிளவுபட்டுள்ளதாகவும் ஒரு பகுதியினர் தம்முடனும் மற்றொரு பகுதியினர் ஐக்கிய மக்கள் சக்தியுடனும் உள்ளதாக இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். அண்மையில் பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவின் […]

இலங்கை

ஹங்கேரிக்கு விஜயம் மேற்கொள்ளும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்

உக்ரைன் மீதான முக்கிய முடிவுகளை தடுப்பதாக ஹங்கேரி தலைவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து ஐரோப்பிய ஒன்றிய தலைவர் சார்லஸ் மைக்கேல், பிரதமர் விக்டர் ஓர்பனை திங்கள்கிழமை சந்திக்கவுள்ளார் என்று ஐரோப்பிய ஒன்றிய செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஹங்கேரிய பிரதம மந்திரி டிசம்பர் உச்சிமாநாட்டில் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அண்டை நாடான உக்ரைனுக்கு புதிய ஐரோப்பிய உதவியை தடுக்கத் தயாராகிறார் என்று குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.

உலகம்

நெதர்லாந்து பொதுத் தேர்தல் முடிவு: போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள்

மூத்த இஸ்லாமிய எதிர்ப்பு ஜனரஞ்சக தலைவர் கீர்ட் வைல்டர்ஸ் நெதர்லாந்து பொதுத் தேர்தலில் வியத்தகு வெற்றியைப் பெற்றுள்ளார் கீர்ட் வைல்டர்ஸ் தேர்தல் வெற்றிக்கு எதிராக எதிர்ப்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிலர் வானவில் கொடிகள் மற்றும் பாலஸ்தீனிய கொடிகளை பறக்கவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவரது வெற்றி டச்சு அரசியலை உலுக்கியது மட்டுமல்லாமல் ஐரோப்பா முழுவதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை

யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்தில் குவிக்கப்பட்ட பொலிசார்

யாழ்ப்பாண நீதிமன்ற வளாகம் முன்பாக வழமைக்கு மாறாக அதிகளவு பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். வட்டுக்கோட்டை பொலிஸாரின் சித்திரவதையால் உயிரிழந்த இளைஞனின் நீதிமன்ற விசாரணைகள் யாழ்ப்பாண நீதிமன்றில் இன்றைய தினம் இடம்பெறவுள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இளைஞன் உயிரிழந்தது , யாழ்.நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் என்பதனால் , கொலை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்று வருகிறது. கடந்த திங்கட்கிழமை இளைஞனின் உடற்கூற்று பரிசோத்னை யாழ்.போதனா […]