இலங்கை

இலங்கை- அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

2024 இற்கான வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்ட அரச ஊழியர்களுக்கான பத்தாயிரம் ரூபா சம்பள அதிகரிப்பில் 5000 ரூபாவை ஜனவரி மாதம் முதல் வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அண்மையில் இடம்பெற்ற அரச வருமானப் பிரிவின் கூட்டத்தின் போது இது தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து 2023 ஆம் ஆண்டு மாநில வருவாய் பிரிவின் எதிர்பார்க்கப்படும் நிதிநிலை அறிக்கையில் முன்வைக்கப்பட்ட புள்ளிவிபரங்களின் […]

இலங்கை

இலங்கையில் சந்தை வட்டி விகிதங்கள் மேலும் குறையும் என அறிவிப்பு!

  • November 25, 2023
  • 0 Comments

இலங்கையில் எதிர்காலத்தில் சந்தை வட்டி வீதங்கள் மேலும் குறையும் என  நந்தலால் வீரசிங்க குறிப்பிடுகின்றார். வர்த்தகங்கள், சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்கள் மற்றும் ஏனைய வர்த்தகங்களுக்கு வழங்கப்படும் வட்டி வீதங்கள் மேலும் குறைய வேண்டும் எனவும் மத்திய வங்கி இதனை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். எவ்வாறாயினும், பத்து வங்கிகள் இன்னமும் மத்திய வங்கி எதிர்பார்த்த அளவை எட்டவில்லை என்றும், டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் வட்டி விகிதத்தை அந்த நிலைக்கு கொண்டு வருமாறு தெரிவித்துள்ளதாகவும் […]

இலங்கை

வவுனியா இரட்டை கொலை விவகாரம் : தலைமறைவாகியிருந்த நபர் கைது!

  • November 25, 2023
  • 0 Comments

வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்களில் ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று  (24.11) மாலை கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த ஜீலை மாதம் 23 ஆம் திகதி அதிகாலை வீடு புகுந்து தாக்குதல் நடத்தி பெற்றோல் ஊற்றி எரியூட்டப்பட்ட சப்பவத்தில் இருவர் மரணமடைந்திருந்தனர். குறித்த இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் ஆறு பேர் கைது செய்யப்பட்டிருந்ததுடன், அவர்களிடம் குற்றப் புலனாய்வு […]

இலங்கை

யாழ் பல்கலையில் சிரேஷ்ட விரிவுரையாளர்களுக்கு பதவி உயர்வு!

  • November 25, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தாவரவியல் துறைத் தலைவர் உட்பட சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூவர் பேராசிரியர்களாகப்  பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். விஞ்ஞான பீடத்தின் தாவரவியல் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஈ.சி. ஜெயசீலன், கணிதவியலும், புள்ளிவிபரவியலும் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கே.கண்ணன் மற்றும் கலைப் பீடத்தின் கல்வியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி (திருமதி) ஜே.இராசநாயகம் ஆகியோரைப் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை இன்று (25.11) ஒப்புதல் வழங்கியது. பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் இன்று […]

பொழுதுபோக்கு

29க்குள் தருகின்றேன்… உறுதியளித்தார் கெளதம் வாசுதேவ் மேனன்

  • November 25, 2023
  • 0 Comments

துருவ நட்சத்திரம் திரைப்பட வெளியீடு தொடர்பான வழக்கில், ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் பெற்ற ரூ.2.40 கோடியை வரும் புதன்கிழமைக்குள்(நவ.29) கொடுக்கப்படும் என்று கெளதம் வாசுதேவ் மேனன் உறுதியளித்துள்ளார். துருவ நட்சத்திரம் திரைப்படத்தை வெளியிட தடைக் கோரிய வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கெளதம் உறுதியளித்துள்ளார். மேலும், பணம் செலுத்திய பின்னரே துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார். கெளதம் வாசுதேவ் மேனன் பதில் குறித்த விசாரணை வரும் நவ.27 ஆம் தேதிக்கு சென்னை உயர் […]

இலங்கை

வட்டுக்கோட்டை சம்பவம் தொடர்பில் நான்கு பொலிஸார் கைது!

  • November 25, 2023
  • 0 Comments

பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த சித்தங்கேணி இளைஞன் விவகாரத்துடன் தொடர்புடைய நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கு யாழ்ப்பாண நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இளைஞனின் உயிரிழப்பு மனித உயிர் போக்கல் அல்லது ஆட்கொலை என்ற நிலைப்பாட்டுக்கு நீதிமன்றம் வந்திருந்தது.இதனையடுத்து குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு நீதவான் உத்தரவிட்ட நிலையில் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் கடந்த 11 ஆம் திகதி […]

விளையாட்டு

உலகக்கோப்பை மீது கால்வைத்து போஸ் கொடுத்த ஆஸ்திரேலிய வீரருக்கு எதிராக வழக்கு பதிவு

  • November 25, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ், உலகக் கோப்பை மீது கால் வைத்து போஸ் கொடுத்ததற்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் கிரிக்கெட் விளையாட தடை அவருக்கு விதிக்கப்படவும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவில் நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டி கடந்த 19ம் திகதியுடன் முடிவடைந்தது. இதில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 240 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா டிராவிஸ் ஹெட் மற்றும் மார்னஷ் லபுஷேன் […]

ஆசியா

பாகிஸ்தானில் உள்ள வணிக வளாகத்தில் தீ விபத்து : 09 பேர் பலி!

  • November 25, 2023
  • 0 Comments

பாகிஸ்தானின் தெற்கு நகரமான கராச்சியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இன்று (25.11) ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானின் அதிக மக்கள்தொகை கொண்ட நகரத்தில் உள்ள பல மாடி RJ ஷாப்பிங் மாலில் அதிகாலையில் தீப்பிடித்ததாகவும், தீயணைப்புப் படையினர் சுமார் 50 பேரைக் காப்பாற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இன்னும் அதிகமானோர் கட்டிடத்திற்குள் இருந்ததாக உள்ளூர் ஒளிபரப்பு ஜியோ நியூஸ் தெரிவித்துள்ளது. குறித்த பகுதியில் மீட்பு பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு […]

பொழுதுபோக்கு

நல்ல படத்தைக் கொடுக்க இன்னும் நிறையவே மெனக்கெட வேண்டும்; 80′ பில்டப் விமர்சனம்

  • November 25, 2023
  • 0 Comments

நடிகர்கள் சந்தானம், ராதிகா ப்ரீத்தி ஆகியோர் நடிப்பில் முழுநீள காமெடி திரைப்படமாக வெளிவந்திருக்கிறது 80’ பில்டப். இயக்குநர் கல்யாண் இயக்கியுள்ள இந்தத் திரைப்படம் 80களில் நடக்கும் காமெடி கலந்த கதையாக உருவாகியிருக்கிறது. சந்தானத்தின் தொடர் காமெடி படங்களின் வரிசையில் இணைந்திருக்கிறது 80′ பில்டப். சிறுவயது முதலே ஒருவருக்கொருவர் மோதலில் இருக்கின்றனர் சந்தானமும் அவரது தங்கையும். இந்த சண்டை அவர்கள் பெரியவர்களாக மாறிய பின்னும் தொடர்கிறது. இதற்கு மத்தியில் சந்தானத்தின் தாத்தா மரணித்துவிட துக்க வீட்டில் நுழைகிறார் கதாநாயகி […]

இலங்கை

இலங்கையில் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தலை நடத்த திட்டம்!

  • November 25, 2023
  • 0 Comments

இலங்கையில் அடுத்த வருடம் தேர்தல் ஆண்டாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு ஆளும் கட்சி தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசியலமைப்பின் பிரகாரம் அடுத்த ஆண்டு நவம்பர் மாத இறுதிக்குள் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும். பொதுத் தேர்தல் ஆகஸ்ட் 2025 க்கு முன் நடத்தப்பட வேண்டும். அதன்படி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஜனாதிபதி தேர்தலை அறிவிப்பதில் ஆளும் கட்சி கவனம் செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஜனாதிபதித் தேர்தலின் […]