ஆசியா

பாகிஸ்தானில் உள்ள வணிக வளாகத்தில் தீ விபத்து : 09 பேர் பலி!

பாகிஸ்தானின் தெற்கு நகரமான கராச்சியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இன்று (25.11) ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானின் அதிக மக்கள்தொகை கொண்ட நகரத்தில் உள்ள பல மாடி RJ ஷாப்பிங் மாலில் அதிகாலையில் தீப்பிடித்ததாகவும், தீயணைப்புப் படையினர் சுமார் 50 பேரைக் காப்பாற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இன்னும் அதிகமானோர் கட்டிடத்திற்குள் இருந்ததாக உள்ளூர் ஒளிபரப்பு ஜியோ நியூஸ் தெரிவித்துள்ளது.

குறித்த பகுதியில் மீட்பு பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தீ விபத்திற்கான காரணம் தெரியவராத நிலையில், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்