கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியின் இரண்டாம் கட்டம் நிறுத்தம்!
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்ட பணிகள் கடந்த 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே முதலாம் கட்டத்தில் 17 உடற்பாகங்கள் மீட்கப்பட்ட நிலையில் இரண்டாம் கட்டம் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு நேற்று (28) வரை 39 மனித உடற்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில் முல்லைதீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி எவ்வளவு தூரம் விஸ்தரிக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசேட ஸ்கான் பரிசோதனை ஊடாக கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியானது […]













