இந்தியா

இந்தியா- 2500 பயணிகளை தவிக்க விட்டு நடுவழியில் இறங்கி சென்ற ரயில் ஓட்டுநர்கள் !

  • November 30, 2023
  • 0 Comments

உத்தரபிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டத்தில் இரண்டு விரைவு ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால், 2500 பயணிகள் கடும் அவதிக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சஹர்சா-படெல்லி இடையே புதன்கிழமை அன்று சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இதேபோல் பரோனி-லக்னோ இடையே சிறப்பு விரைவு ரயில் இயக்கப்பட்டது. சாத் பூஜையை முன்னிட்டு இந்த இரண்டு சிறப்பு ரயில்களையும் வடகிழக்கு ரயில்வே இயக்கியிருந்தது. இதில் சுமார் 2500 க்கும் மேற்பட்டவர்கள் பயணித்தனர். புர்வால் சந்திப்பு அருகே வந்தபோது, மதியம் 1:15 மணியளவில் சஹர்சா […]

வட அமெரிக்கா

கனடிய அரசாங்கத்திற்கு 100 மில்லியன் டொலர் வழங்க இணக்கம் தெரிவித்துள்ள கூகுள்

  • November 30, 2023
  • 0 Comments

கனடிய அரசாங்கத்திற்கு வருடாந்தம் 100 மில்லியன் டொலர் வழங்குவதற்கு கூகுள் நிறுவனம் இணக்கம் வெளியிட்டுள்ளது.ஆண்லைன் செய்திப் பிரசூரம் குறித்த கனடிய சட்டத்திற்கு அமைய இவ்வாறு இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனத்தின் இணைய சேவைகள் ஊடாக செய்தி உள்ளடக்கங்களை பார்வையிடுதற்கு இவ்வாறு 100 மில்லியன் டொலர்கள் வருடாந்தம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கனடிய மரபுரிமைகள் அமைச்சர் இது பற்றி அறிவித்துள்ளார். கனடிய உள்ளடக்கங்களுக்காக அதன் பிரசூரிப்பாளர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது.செய்தி உள்ளிட்ட இணைய வழி செய்தி ஊடகங்களை பாதுகாக்கும் […]

பொழுதுபோக்கு

இயக்குனராக அவதாரம் எடுத்தார் ஊர்வசியின் இரண்டாவது கணவர்

  • November 30, 2023
  • 0 Comments

எண்பதுகளில் கதாநாயகியாக நடிக்க துவங்கி, அதன்பிறகு காமெடி கலந்த கதாபாத்திரங்களையும், பின்னர் குணசத்திர நடிகையாகவும் தனது திரையுலக பயணத்தில் இப்போது வரை தொடர்ந்து பயணித்து வருபவர் நடிகை ஊர்வசி. மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயனை திருமணம் செய்து கொண்ட ஊர்வசி பின்னர் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தார். அதன் பிறகு சில வருடங்கள் கழித்து சிவபிரசாத் என்கிற கட்டட கான்ட்ராக்டர் ஒருவரை இரண்டாவதாக மறுமணம் செய்து கொண்டார் ஊர்வசி. இந்த நிலையில் ஊர்வசியின் […]

இலங்கை

இலங்கை – இந்தியா படகு சேவைகள் மீளவும் ஆரம்பம்!

  • November 30, 2023
  • 0 Comments

இந்தியா மற்றும் இலங்கை இடையே படகு சேவைகள் மீண்டும் தொடங்கும் சூழலில் இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே உள்ளிட்ட அதிகாரிகள் காங்கேசன்துறை மற்றும் தலைமன்னாருக்கு விஜயம் செய்து பார்வையிட்டனர். வடக்கு மாகாணத்திற்கு வருகை தந்த இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பால்கே நேற்று (29.11) துறைமுகப் பகுதிகளை பார்வையிட்டார். இரண்டு நாடுகளுக்கும் இடையே இணைப்பை வலுப்படுத்த இரு நாட்டு மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இலங்கைக்கான இந்திய தூதரகம் தனது எக்ஸ் […]

உலகம்

இஸ்ரேல் ஹமாஸ் தற்காலிக போர் நிறுத்தம் மேலும் நீடிப்பு

ஹமாசுடனான மோதல் இடைநிறுத்தம் மேலும் ஒருநாள் நீடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. பணயக்கைதிகளையும் இஸ்ரேலிய சிறையில் உள்ள பாலஸ்தீனியர்களையும் விடுதலை செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் தொடரும் நிலையிலேயே இஸ்ரேலிய இராணுவம் இதனை அறிவித்துள்ளது. நீட்டிக்கப்பட்ட 2 நாள் போர் நிறுத்தத்தின் கடைசி நாளான நேற்றும் பணய கைதிகள் மற்றும் கைதிகளை விடுவிப்பதில் இருதரப்பும் மும்முரம் காட்டின. அதன்படி விடுவிக்கப்படும் கைதிகளின் பெயர் பட்டியலை இருதரப்பும் பரிமாறிக்கொண்டன. 6-வது கட்டமாக ஹமாஸ் 10 பணய கைதிகளையும், இஸ்ரேல் 30 பாலஸ்தீன கைதிகளையும் […]

இலங்கை

வாழைச்சேனையில் 2,500 போதை மாத்திரைகளுடன் பொலிஸாரிடம் சிக்கிய வியாபாரி ஒருவர்!

  • November 30, 2023
  • 0 Comments

கிழக்கு மாகாணத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்கு வைத்து பாரியளவிலான போதைப்பொருள் வியாபாரி ஒருவரை வாழச்சேனை பிரண்டாரச்சேனை பிரதேசத்தில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். சந்தேகநபரை கைது செய்யும் போது, ​​பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் அவரிடம் 2,500 போதைப்பொருட்களை கண்டுபிடித்துள்ளனர். காரில் பயணித்த போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்டவர் மட்டக்களப்பு அரசடி பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவராவார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக வாழைச்சேனை பொலிஸ் […]

இந்தியா

ஏர் இந்தியா விமானத்திற்குள் ஒழுகிய மழை நீர் – அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்!(வீடியோ)

  • November 30, 2023
  • 0 Comments

டெல்லியில் இருந்து லண்டன் நோக்கி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் மழை தண்ணீர் ஒழுகியதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். டெல்லி விமான நிலையத்தில் இருந்து லண்டனில் உள்ள கேட்விக் விமான நிலையம் நோக்கி பறந்து கொண்டு இருந்த ஏர் இந்தியா விமானத்தில் மழைத் தண்ணீர் ஒழுகியதால் பயணிகள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். ஏர் இந்தியா போயிங் B787 ட்ரீம்லைனர் விமானத்தின் மேல்நிலை சேமிப்புப் பகுதியில் இருந்து கேபினுள் மழைத்தண்ணீர் கசிந்துள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. […]

பொழுதுபோக்கு

இறுதிக்கட்டம் ‘துருவ நட்சத்திரம்’ வெளிவரும்: கவுதம் மேனன் அறிக்கை

  • November 30, 2023
  • 0 Comments

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘துருவ நட்சத்திரம்’ படம் 5 வருடங்களுக்கு பிறகு கடந்த 24ம் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் படம் தொடர்பாக நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கு முடியாததாலும், கவுதம் மேனனுக்கு ஏற்பட்ட நிதி பிரச்னையாலும் படம் வெளிவரவில்லை. தற்போது வருகிற 8ம் தேதி வெளியாகலாம் என்ற தகவல் வெளியாகி இருக்கும் நிலையில் இயக்குனர் கவுதம் மேனன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ஒரு பார்வை. நிறைய கனவு. உறுதியான அர்ப்பணிப்பு ஆகியவையே பேப்பரில் […]

இலங்கை

மட்டக்களப்பு – விவேகாந்தபுரம் மாதிரி கிராம வேலைத்திட்டத்தின் கீழ் உதவித்திட்டங்கள் வழங்கும் நிகழ்வு

  • November 30, 2023
  • 0 Comments

2019மே 19ஆம் திகதிக்கு முன்னர் மற்றவர்களுக்கு வழிகாட்டியாகவும் ஒழுக்கத்தினை கற்றுக்கொடுக்கும் பகுதியாக படுவான்கரையிருந்தது.ஆனால் இன்று அதற்கு மாறான நிலையே காணப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.இன்று வடகிழக்கில் போதைவஸ்து போன்ற பல்வேறு விடயங்கள் சமூகத்தினை சீரழிவு நிலைக்கு கொண்டுவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விவேகாந்தபுரம் பகுதியினை மாதிரி கிராமம் வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டது. போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் மிகவும் பின்தங்கிய பகுதியாக […]

இலங்கை

யாழ்ப்பாண போதனா வைத்திய சாலையில்  தொலைபேசி திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் கைது!

  • November 30, 2023
  • 0 Comments

யாழ்ப்பாண போதனா வைத்திய சாலையில் கடந்த சில நாட்களாக வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் மற்றும் நோயாளர்களை பார்வையிட வருபவர்களின் தொலைபேசிகளை திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர், யாழ்ப்பாண பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் உதவி பொலிஸ் பரிசோதகர் மதுரபெரும தலைமையிலான அணியினரால் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் நெல்லியடி பகுதியைச் சேர்ந்த ஒருவரும் திருட்டு தொலைபேசியினை வாங்கிய குற்றச்சாட்டில் ஊர்காவற்துறைபகுதியைச் சேர்ந்த ஒருவரையுமே யாழ் குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலையில் கடந்த மூன்று […]

error: Content is protected !!