உலகம்

இஸ்ரேல் ஹமாஸ் தற்காலிக போர் நிறுத்தம் மேலும் நீடிப்பு

ஹமாசுடனான மோதல் இடைநிறுத்தம் மேலும் ஒருநாள் நீடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

பணயக்கைதிகளையும் இஸ்ரேலிய சிறையில் உள்ள பாலஸ்தீனியர்களையும் விடுதலை செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் தொடரும் நிலையிலேயே இஸ்ரேலிய இராணுவம் இதனை அறிவித்துள்ளது.

நீட்டிக்கப்பட்ட 2 நாள் போர் நிறுத்தத்தின் கடைசி நாளான நேற்றும் பணய கைதிகள் மற்றும் கைதிகளை விடுவிப்பதில் இருதரப்பும் மும்முரம் காட்டின.

அதன்படி விடுவிக்கப்படும் கைதிகளின் பெயர் பட்டியலை இருதரப்பும் பரிமாறிக்கொண்டன. 6-வது கட்டமாக ஹமாஸ் 10 பணய கைதிகளையும், இஸ்ரேல் 30 பாலஸ்தீன கைதிகளையும் விடுதலை செய்தன.

இந்த நிலையில் நீட்டிக்கப்பட்ட 2 நாள் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது. இதனால், போர் நிறுத்தத்தை நீட்டிக்க கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் இஸ்ரேல் மற்றும் ஹமாசுடன் பேச்சுவார்த்தை நடத்தின. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், மேலும் ஒரு நாள் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல்- ஹமாஸ் ஒப்புக்கொண்டுள்ளதாக கத்தார் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

TJenitha

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்