இந்தியாவில் சிகிச்சைக்காக வந்த 18 பேர் உயிரிழப்பு!
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில், கல்வா பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த 18 நோயாளிகள் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது. சத்ரபதி சிவாஜி மகராஜ் மருத்துவமனை அதிகாரிகள் நேற்று (13.08) இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். உயிரிழந்தவர்களில் 10 பெண்களும் அடங்குவர். மேலும், உயிரிழந்த 18 பேரில் 12 பேர் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இறப்புகள் குறித்து விசாரிக்க ஒரு சுயாதீன விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது, அவர்கள் முதலில் மரணத்திற்கு வழிவகுத்த […]













