இலங்கை

ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவித்தல்

  • August 18, 2023
  • 0 Comments

இடமாற்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாத ஆசிரியர்களின் சம்பளம் இடைநிறுத்தப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போதுள்ள ஆசிரியர் வெற்றிடங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் அமுல்படுத்தப்படுவதாக அமைச்சு கூறியுள்ளது. இடமாற்ற உத்தரவுக்கு அமைய செயற்படுமாறு பல தடவைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அலட்சியத்துடன் பழையபடி அதே பாடசாலைகளில் பணிபுரிவதாக முறைப்பாடுகள் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், சேவையின் நிமித்தம் காரணமாக சில ஆசிரியர்களை தற்போதுள்ள பாடசாலைகளில் தக்கவைத்துக் கொள்ளுமாறு அதிபர்கள் கோரிக்கை விடுத்துள்ளதுடன், அத்தகைய ஆசிரியர்களுக்கு இந்தத் தீர்மானம் பொருந்தாது எனவும் அமைச்சு […]

ஐரோப்பா

லண்டன் அருங்காட்சியகத்தில் திருட்டு சம்பவம் – ஊழியர் ஒருவர் பணிநீக்கம்

  • August 18, 2023
  • 0 Comments

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உலகப்புகழ் பெற்ற பிரிட்டிஷ் அருங்காட்சியகம் செயல்படுகிறது. இங்கு கி.மு. 15ம் நூற்றாண்டு முதல் கி.பி.19ம் நூற்றாண்டு வரையிலான பழங்கால நகைகள், வைர கற்கள், கண்ணாடிகள் போன்ற பல்வேறு பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அவ்வப்போது இங்கு கண்காட்சிகள் நடத்தப்படுவதால் ஆண்டுக்கு சுமார் 60 லட்சம் பேர் இதனை பார்வையிடுகின்றனர். இந்தநிலையில் தற்போது அருங்காட்சியகத்தில் நடத்திய ஆய்வின்போது சில விலைமதிப்புமிக்க பொருட்கள் திருடப்பட்டு இருப்பது தெரிய வந்தது. ஆனால் சமீப காலமாக அங்கு கண்காட்சிகள் எதுவும் […]

ஐரோப்பா

மொஸ்கோவின் சிவில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டதாக அறிவிப்பு!

  • August 18, 2023
  • 0 Comments

உக்ரைன் மொஸ்கோவின் கட்டட தொகுதியை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா அறிவித்துள்ளது. குறித்த தாக்குதல் நடவடிக்கையை தொடர்ந்து சிவில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “மாஸ்கோ நேரப்படி அதிகாலை 4 மணியளவில், உக்ரைன்  ஆளில்லா வான்வழி விமானத்தைப் பயன்படுத்தி   பயங்கரவாத தாக்குதலை நடத்தியதாக மொஸ்கோவின் பாதுகாப்பு அமைச்சகம் விவரித்துள்ளது.

வாழ்வியல்

பெண்களை அதிகம் பாதிக்கும் புற்றுநோய்கள்! 5 அறிகுறிகள் தொடர்பில் அவதானம்

  • August 18, 2023
  • 0 Comments

உலகளவில் மொத்த இறப்புகளுக்கு புற்றுநோய் இரண்டாவது பெரிய காரணம். நாட்டில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. புற்றுநோய் ஒரு கொடிய நோய். பல வகையான புற்றுநோய்கள் உள்ளன, அவற்றில் சில மிகவும் ஆபத்தானவை. Web MD இன் அறிக்கையின்படி, புற்றுநோய் ஏற்படும் ஆபத்து பெண்களுக்கு அதிகமாக உள்ளது. பெண்கள் மற்றும் ஆண்களுக்கு வேகமாக வளரும் சில புற்றுநோய்கள் உள்ளன. இந்த கட்டுரையில் அவற்றைப் பற்றி தெரிந்துக் கொள்வோம். புற்றுநோய் என்றால் என்ன? நமது உடல் டிரில்லியன் […]

பொழுதுபோக்கு

லியோவில் களமிறங்கப்போகும் கமல்… 99.9% உறுதி ஆயிடுச்சு

  • August 18, 2023
  • 0 Comments

ஒட்டு மொத்த ரசிகர்களையும் லோகேஷ் தன் வசப்படுத்தி இருக்கிறார். அதிலும் லியோ படத்தில் ஒட்டுமொத்த திரையுலகமும் இணைந்திருக்கிறது. அந்த வகையில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின் உட்பட பல பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். அது மட்டுமல்லாமல் சீக்ரெட்டாக சில பிரபலங்களின் என்ட்ரியும் இருக்கிறது. அதிலும் கமல் இதில் வருவாரா என்ற எதிர்பார்ப்பு தான் அதிகமாக இருக்கிறது. ஏனென்றால் லியோ எல்.சி.யு பாணியில் தான் எடுக்கப்பட்டு வருகிறது. அதனால் விக்ரம் படத்திற்கும் இதற்கும் தொடர்பு இருக்கும் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் உள்ள இலங்கை பௌத்த விகாரை ஒன்றில் 3 சிறுவர்களுக்கு நடந்த கொடூரம்

  • August 18, 2023
  • 0 Comments

மெல்பேர்ணில் உள்ள இலங்கை பௌத்த விகாரை ஒன்றின் விஹாராதிபதிக்கு எதிராக 03 சிறார்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 68 வயதான அவர் இன்று மெல்பேர்ன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 1996ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை நடைபெற்றதாகக் கூறப்படும் இந்தச் சம்பவங்கள் தொடர்பாக மொத்தம் 13 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மெல்போர்னின் தென்கிழக்கில் அமைந்துள்ள இந்த ஆலயம் ஒரு தாம் பாசல் எனப்படும் பௌத்த மாணவர்களுக்கான வகுப்பறை நடத்தியதாகக் கூறப்படுகிறது. ஸ்பிரிங்வேல் […]

வட அமெரிக்கா

“டிக்டொக்” செயலியை தடை செய்த நியூயோர்க் அரசாங்கம்!

  • August 18, 2023
  • 0 Comments

நியூயோர்க் அரசாங்கம் ‘டிக்டொக்’ செயலியை அரசுடைமை சாதனங்களில் உபயோகிக்க தடை செய்துள்ளது. ஏற்கனவே சாதனங்களில் பதிவிறக்கம் செய்து வைத்திருந்தால் 30 நாள்களுக்குள் அதனை நீக்கிவிட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடை தொடர்பில் ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. நியூயோர்க் சைபர் கிரைம் பொலிஸ் தரப்பில், பாதுகாப்பு காரணங்களுக்காக ‘டிக்டொக்’ செயலியை அரசுடைமை சாதனங்களில் பயன்படுத்தத் தடை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. நியூயோர்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், “டிக்டொக், நகரின் தொழில்நுட்ப நெட்வொர்க்குகளுக்கு பாதுகாப்பு […]

இலங்கை

களுத்துறையில் கெஹலியவிற்கு எதிராக கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை!

  • August 18, 2023
  • 0 Comments

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (18.08) மக்கள் கையொப்ப சேகரிப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய மக்கள் சக்தி  களுத்துறை தொகுதி அமைப்பாளர் அஜித்.பி.பெரேரா இந்த கையெழுத்துப் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார். முறையான சுகாதார சேவையை ஏற்படுத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து, தற்போதைய சுகாதார சேவையில் இருந்தும் தற்போதைய சுகாதார அமைச்சரையும் இராஜினாமா செய்து பொருத்தமான ஒருவருக்கு சுகாதார அமைச்சர் பதவியை வழங்குமாறு அரசாங்கத்தை வற்புறுத்தி இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. களுத்துறை […]

ஆசியா

வட கொரியாவில் பட்டினி கிடக்கும் மக்கள் – வெளியான அதிர்ச்சி தகவல்

  • August 18, 2023
  • 0 Comments

வட கொரியாவின் பொருளாதாரம் மோசமடைந்துள்ள சூழலில், அங்குள்ள மக்கள் மிகுந்த விரக்தியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய நாட்டு நிறுவன மனித உரிமைப் பிரிவுத் தலைவர் வோல்கர் டர்க் (Volker Turk) இதனை கூறியுள்ளார். வட கொரியாவின் சில பகுதிகளில் மக்கள் பட்டினியால் வாடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாட்டு நிறுவனப் பாதுகாப்பு மன்றத்தில் “2017க்குப் பிறகு வட கொரியாவில் மனித உரிமைகள்” எனும் கூட்டத்தில் திரு. வோல்கர் பேசினார். ஐக்கிய நாட்டு நிறுவனத்துக்கான அமெரிக்கத் தூதர் லிண்டா […]

இலங்கை மத்திய கிழக்கு

இலங்கைக்கு வருடாந்தம் 05 மில்லியன் சுற்றுலா பயணிகளை அழைத்துவர திட்டம்!

  • August 18, 2023
  • 0 Comments

வருடாந்தம் 05 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான இலக்கு வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இலங்கையை பிரதான சுற்றுலா தலமாக கட்டியெழுப்புவதற்கு தேவையான பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் உறுப்பினர்களுடன் நேற்று (17.08) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இந்த பணிப்புரைகளை வழங்கியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்போது சுற்றுலாப் பயணிகளின் கவர்ச்சிகரமான மற்றும் வசதியான இடமாக இலங்கையை மாற்றுவதற்கான குறுகிய கால, நடுத்தர […]