ஐரோப்பா

நெடுஞ்சாலையில் நிர்வாணமாக துப்பாக்கிச்சூடு நடத்திய பெண்!

அமெரிக்கா, சான் பிரான்சிஸ்கோ- ஓக்லாண்டு விரிகுடா பாலத்தில் நெரிசலான நேரத்தில் காரில் இருந்து திடீரென இறங்கிய பெண் ஒருவர் நிர்வாண கோலத்தில் அந்த வழியாக சென்ற மற்ற கார்களை நோக்கி துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதலில் அந்த பெண் நெடுஞ்சாலையின் நடுவே கத்தியுடன் காரில் இருந்து இறங்கி கத்த ஆரம்பித்துள்ளார். பின்னர், அந்த பெண் மீண்டும் காரில் ஏறி சிறிது தூரம் சுங்கச்சாவடி அருகே நிர்வாணமாகி துப்பாக்கியுடன் மீண்டும் காரில் இருந்து இறங்கி […]

ஐரோப்பா

ரஷ்யாவில் விபத்தில் சிக்கிய Mi-8 ஹெலிகொப்டர் – 06 பேர் பலி!

  • July 27, 2023
  • 0 Comments

ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் 06 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஏழு பேர் காயமடைந்துள்ளதாக ரஷ்ய அவசரகால அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Mi-8 என்ற ஹெலிகாப்டர் தெற்கு சைபீரியாவில் அல்தாய் குடியரசில் உள்ள பகுதியில் தரையிறங்கும்போது மின்கம்பியுடன் மோதி தீபிடித்து எரிந்ததாக  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த ஹெலிகாப்டர் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமானது என்றும் சுற்றுலா பயணிகள் குழுவை ஏற்றிச் சென்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஹெலிகொப்டரில் 13  பேர் இருந்தாக கூறப்படுகிறது. அவர்களில் ஆறுபேர் உயிரிழந்துள்ளனர்.

ஐரோப்பா

ஹிஜாப் அணியாமல் தொடரில் பங்கேற்ற ஈரானிய செஸ் வீராங்கனை: குடியுரிமை வழங்கிய ஸ்பெயின்

  • July 27, 2023
  • 0 Comments

ஹிஜாப் அணியாமல் செஸ் போட்டியில் கலந்து கொண்ட ஈரானிய பெண்ணுக்கு ஸ்பெயின் குடியுரிமை வழங்கியுள்ளது. கடந்த டிசம்பரில் கஜகஸ்தானில் நடைபெற்ற FIDE உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் ஆகியவற்றில் சாரா காடெம் என்று அழைக்கப்படும் 26 வயதான சரசதத் கதேமல்ஷாரி என்ற இளம்பெண் ஹிஜாப் அணியாமல் செஸ் போட்டியில் கலந்து கொண்டு தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.இது ஈரானின் இஸ்லாமிய ஆடை விதிமுறைகளை மீறி விட்டதாக தெரிவித்து அந்நாட்டு செஸ் கூட்டமைப்பு கடுமையான கண்டனம் தெரிவித்தது. […]

இலங்கை

வசந்த முதலிகே உட்பட இருவர் கைது

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் இணைப்பாளர் வசந்த முதலிகேஉட்பட இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 2020 ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது குழப்பம் ஏற்படுத்தியமை தொடர்பில் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொரளை மயானத்திற்கு அருகில் வைத்து குருந்துவத்தை பொலிஸார், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் இணைப்பாளர் வசந்த முதலிகேயை இன்று (27) கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.  

இலங்கை

நாளைய பூரண முடக்கத்திற்கு யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் ஆதரவு

  • July 27, 2023
  • 0 Comments

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரத்தில் நீதி கோரியும், சர்வதேசத்தின் கண்காணிப்பை வலியுறுத்தியும் நாளை (28) வடக்கு – கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்படவுள்ள முழு அடைப்புப் போராட்டத்திற்கு யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் பூரண ஆதரவினை வழங்குவதாக அறிவித்துள்ளது. அதேவேளை இலங்கையின் தமிழர் பிரதேசங்களில் இதுகால வரையிலும் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகள் விவகாரங்கள் பூசி மெழுகப்பட்டு, காத்திரமான நடவடிக்கைகள் எதுவுமின்றி நீர்த்துப்போகச் செய்யப்பட்டமையே வரலாறு. இதேபோன்று மேற்படி கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்திலும் நடைபெறாது இருக்க வேண்டும் என்பதோடு, […]

இலங்கை

பாடசாலை மாணவர்களுக்கான காலணி மற்றும் பையின் விலை வீழ்ச்சி!

  • July 27, 2023
  • 0 Comments

பாடசாலை மாணவர்களின் காலணிகள் மற்றும் பைகளின் விலையை 10 சதவீதத்தால், குறைக்க  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாடசாலை காலணிகள் மற்றும் பைகள் உற்பத்தியாளர்களுடன் இன்று (27.07) நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நீண்ட நேரம் கலந்துரையாடியிருந்த நிலையில்,  இதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்போது மேலும் கருத்து தெரிவித்த தொழில் அதிபர்கள், தற்போது சந்தையில் உள்ள பங்குகளும் புதிய விலை திருத்தத்தின் கீழ் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.  

ஆசியா

வரலாறு காண வீழ்ச்சியில் சீன நுகர்வோர் சந்தை..ஆனால் ஆணுறை விற்பனை உயர்வு!

  • July 27, 2023
  • 0 Comments

சீனாவில் கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு உத்தரவு ஆகியவற்றால் அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டது. அதில் இருந்து மீண்டு வருவதற்கு அந்நாடு திணறி வருகிறது. இந்நிலையில், இங்கிலாந்து நாட்டின் நுகர்வோர் சரக்கு விற்பனையில் முன்னணி வகிக்கும் யுனிலீவர் நிறுவனம் வெளியிட்ட செய்தியில், சீனாவின் சொத்து வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றில் ஏற்பட்ட சரிவால், அந்நாட்டின் நுகர்வோர் வர்த்தக அடையாள அளவீடு வரலாறு காணாத வகையில் மிக குறைவாக காணப்படுகிறது என தெரிவித்து உள்ளது. எனினும், சீனாவின் […]

உலகம்

கம்போடியா பிரதமர் பதவியில் விரைவில் ஏற்படவுள்ள மாற்றம்?

தெற்காசிய நாடான கம்போடியாவில் நாடாளுமன்றத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. ஆளும் கட்சியான கம்போடிய மக்கள் கட்சியும் தேர்தலில் பங்கேற்றது.அதற்கு சாதகமாக தேர்தல் முடிவுகள் அமைந்தன. 125 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் கம்போடிய மக்கள் கட்சி 120 இடங்களைக் கைப்பற்றியது. இதன்படி மொத்த வாக்குகளில் 96 சதவீத வாக்குகளை அக்கட்சி பெற்றுள்ளது. இதன் பின்னர், ஆசிய நாடுகளில் நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்த ஹுன் சென் (வயது 70) மீண்டும் பிரதமராக பதவியேற்றார். இந்நிலையில் பிரதமர் […]

இலங்கை உலகம்

உலக சந்தையில் கோதுமை மாவின் விலை அதிகரிப்பு!

  • July 27, 2023
  • 0 Comments

உலக சந்தையில் கோதுமை மாவின் விலை 15 சதவீதத்தால் உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கருங்கடல் தானிய ஒப்பந்தத்தை நீட்டிக்க ரஷ்யா மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், கோதுமை ஏற்மதி தடைப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச ரீதியில் கோதுமை மாவிற்கான பற்றாக்குறை எழுந்துள்ளது. இதன்நிமித்தம் விலையும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இலங்கையிலும் கோதுமை மாவின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.

உலகம்

தடை செய்யப்பட்ட ஏவுகணைகள்! ரஷ்யாவிடம் வெளிப்படுத்திய வடகொரியா

வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன், கண்காட்சி ஒன்றில் தடை செய்யப்பட்ட ஏவுகணைகளை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சரிடம் பெருமையுடன் காட்டியுள்ளார். அண்டை நாடுகளான வடகொரியாவும் ரஷ்யாவும் வியாழக்கிழமை உறவை வலுப்படுத்த உறுதி தெரிவித்ததாகவும் வடகொரிய அரசாங்க ஊடகம் தெரிவித்தது. வடகொரியாவில் ‘வெற்றி நாளாக’ கொண்டாடப்படும் கொரியப் போரின் 70வது ஆண்டு நிறைவையொட்டி ரஷ்ய அமைச்சர் செர்கெய் ஷோய்குவும் சீனாவின் உச்ச ஆட்சி மன்ற உறுப்பினரும் இவ்வாரம் வடகொரியாவுக்கு வந்திருந்தனர். அப்போதுதான் தடை செய்யப்பட்ட ஏவுகணைகளை   கிம் ஜோங் […]