ஐரோப்பா

ரஷ்யாவில் விபத்தில் சிக்கிய Mi-8 ஹெலிகொப்டர் – 06 பேர் பலி!

ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் 06 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஏழு பேர் காயமடைந்துள்ளதாக ரஷ்ய அவசரகால அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Mi-8 என்ற ஹெலிகாப்டர் தெற்கு சைபீரியாவில் அல்தாய் குடியரசில் உள்ள பகுதியில் தரையிறங்கும்போது மின்கம்பியுடன் மோதி தீபிடித்து எரிந்ததாக  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்த ஹெலிகாப்டர் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமானது என்றும் சுற்றுலா பயணிகள் குழுவை ஏற்றிச் சென்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஹெலிகொப்டரில் 13  பேர் இருந்தாக கூறப்படுகிறது. அவர்களில் ஆறுபேர் உயிரிழந்துள்ளனர்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்