இலங்கை செய்தி

சமையல் எரிவாயுவின் விலை குறைவடையும் என அறிவிப்பு!

  • May 1, 2023
  • 0 Comments

சமையல் எரிவாயுவின் விலை இன்னும் சில தினங்களில் குறையும் என ஜனாதிபதி அலுவலகத்தின் பிரதானியும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகருமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். பணவீக்கம் 70 சத வீதத்திலிருந்து 35 சத வீதமாக குறைந்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் அதை ஒற்றை இலக்கத்துக்கு கொண்டு வர முயற்சிக்கிறோம் என்றும் கூறினார். ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய சாகல ரத்நாயக்க ‘எண்ணெய் விலை குறைந்துள்ளதால் அடுத்த சில நாட்களில் எரிவாயுவின் விலையும் […]

இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

மனைவியை கொலை செய்ய இன்சுலின் ஊசியை பயன்படுத்திய வைத்தியர்!

  • May 1, 2023
  • 0 Comments

தனது இளம் மனைவிக்கு இன்சுலின் ஊசியைப் பலவந்தமாகச் செலுத்தி அவரைக் கொலை செய்ய முயன்றதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக திருகோணமலை மாவட்ட வைத்தியசாலை ஒன்றில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவரை பம்பலப்பிட்டி பொலிஸின் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் குழு கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகப்படியான இன்சுலின் ஊசி செலுத்தப்பட்டதால் மயக்கமடைந்த வைத்தியரின் மனைவி ஆபத்தான நிலையில் களுபோவில வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் அதிகாரி […]

வட அமெரிக்கா

கனடாவில் உள்ள சூடானியர்கள் தங்கள் விசாவை நீட்டித்துக் கொள்ள அனுமதி

  • May 1, 2023
  • 0 Comments

சூடானில் வன்முறை மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், கனடாவில் உள்ள சூடான் மக்கள் தங்கள் விசாவை நீட்டித்துக்கொள்ளலாம் என கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது. கனேடிய குடிவரவு அமைச்சர் ஷான் ஃப்ரேசர் சனிக்கிழமை குறித்த தகவலை அறிவித்ததுடன், இது ஏப்ரல் 30ம் திகதி முதல் அமுலுக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளார்.மேலும், சூடான் மக்கள் தங்கள் விசாவை நீட்டித்துக்கொள்ளலாம் அல்லது பார்வையாளர், மாணவர் அல்லது தற்காலிக பணியாளராக அவர்களின் நிலையை இலவசமாக மாற்றவும் அனுமதி அளிக்கப்படுகிறது என்றார். மட்டுமின்றி தற்காலிகமாக பணியாற்றும் […]

ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

உக்ரைனில் ஏவுகணைத் தாக்குதல்களை துரிதப்படுத்திய ரஷ்யா!

  • May 1, 2023
  • 0 Comments

உக்ரைனில் நேற்று ஒரே நாளில் 18 ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், அந்த தாக்குதல்களை  முறியடித்ததாகவும், ஆயுதப்படைகளின் தளபதி தெரிவித்துள்ளார். இதன்படி 18 ஏவுகணைத் தாக்குதல்களில் 15 தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். உள்ளூர் நேரப்படி அதிகாலை 2.30 மணியளவில் தாக்குதல்களை நடத்துவதற்கு “மூலோபாய விமானப் போக்குவரத்து விமானங்கள்” பயன்படுத்தப்பட்டதாகவும், வான்வழித் தாக்குதல் சைரன்கள் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக ஒலித்ததாகவும் ஆயுதப்படைகளின் தளபதியான Valeriy Zaluzhnyi கூறினார். ரஷ்யா கடந்த சில நாட்களாக உக்ரைன் மீது ஏவுகணை […]

தமிழ்நாடு பொழுதுபோக்கு

விளம்பரத்தால் சிறைக்கு செல்லவுள்ள லாஸ்லியா! பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தகவல்

  • May 1, 2023
  • 0 Comments

ஆன்லைன் சூதாட்டம் குறித்த விளம்பரங்களில் நடித்து வரும் நடிகைகள் ஷிவானி, லோஸ்லியாவுக்கு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக வழக்கறிஞர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் லட்சக்கணக்கான பணத்தை இழந்து வருகின்றனர் என்பதும் ஒரு சிலர் பணத்தை இழந்ததால் ஏற்பட்ட மன விரக்தியில் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்டது என்பதும் இந்த சட்டத்திற்கு […]

இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

யாழில் அதிகரித்து வரும் தற்கொலை சம்பவங்கள்!

  • May 1, 2023
  • 0 Comments

கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2023ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் வாரம் வரையில் யாழ்ப்பாணத்தில் 18 வயதிற்கு உட்பட்ட 11 பேர் தவறான முடிவினை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸாரின் புள்ளிவிபரம் ஊடாகவே இந்த விடயம் தெரிய வந்துள்ளது. இதன்படி, யாழ்ப்பாணத்தில் 175 பேர் தவறான முடிவை எடுத்துள்ளனர். இவர்களில் 9 பேர் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் ஆவர். அதேபோல்  இந்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் வாரம் வரையிலான […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் பாடசாலை கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து..!

  • May 1, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் நட்பு ரீதியான விளையாட்டு போட்டியின் போது பாடசாலை கட்டிடம் இடிந்து விழுந்ததில் 6 பள்ளி மாணவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேற்கு வர்ஜீனியாவில் உள்ள வெய்ன் உயர்நிலைப் பள்ளி சாப்ட்பால் மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த மரத்தாலான கட்டிடம் ஒன்றே மொத்தமாக சரிந்து விழுந்துள்ளது.சம்பவத்தின் போது 6 மாணவர்கள் அந்த மரத்தாலான கட்டிடத்தில் காணப்பட்டுள்ளனர். இதில், திடீரென்று அந்த கட்டிடம் சரிந்து விழுந்ததில், மாணவர்கள் உள்ளிட்ட சிலர் அதில் சிக்கிக்கொண்டனர். வெய்ன் உயர்நிலைப் பள்ளி நிர்வாகம் குறித்த சம்பவத்தை […]

ஆசியா

திருமணமாகாத பெண்களும் குழந்தை பெறலாம்; சீனாவின் அதிரடி அறிவிப்பு!

  • May 1, 2023
  • 0 Comments

சீனாவில் திருமணம் ஆகாத பெண்களும் இனி குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீன அரசு பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. அந்த வகையில் மகப்பேறு விடுப்புக்கான ஊதியம், புதுமண தம்பதிகளுக்கு சம்பளத்துடன் கூடிய 30 நாள் விடுப்பு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இளைஞர்கள் காதலிக்க நேரம் ஒதுக்கும் வகையில் கல்லூரிகள் விடுமுறையை அறிவித்துள்ளன.இருப்பினும், குழந்தை பராமரிப்பு செலவு, கல்வி செலவு, விலைவாசி ஏற்றம் உள்ளிட்ட காரணங்கள் சீனர்கள் குழந்தைப் […]

இலங்கை முக்கிய செய்திகள்

யாழில் ஒருவருடத்தில் 175 மரணம் – வெளியான அதிர்ச்சித் தகவல்

  • May 1, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2023ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் வாரம் வரையில் 18 வயதிற்கு உட்பட்ட 11 பேர் தவறான முடிவினை எடுத்து தமது உயிர்களை மாய்த்துள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸாரின் புள்ளிவிபரம் ஊடாகவே இந்த விடயம் தெரிய வந்துள்ளது. குறித்த தகவலின் பிரகாரம் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு 175 பேர் தவறான முடிவெடுத்து தமது உயிர்களை மாய்த்துள்ளனர். இவர்களில் 09 பேர் 18 வயதிற்குள் உட்பட்ட […]

ஆன்மிகம் செய்தி தமிழ்நாடு

மதுரை மீனாட்சிக்கு அரசியாக பட்டம் சூட்டப்பட்டது

  • May 1, 2023
  • 0 Comments

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலின் சித்திரைத் திருவிழா கடந்த 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. நாள்தோறும் மீனாட்சி அம்மனும், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை அம்மனுடன் அன்னவாகனம், பூத வாகனம், காமதேனு வாகம என பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். சித்திரைத் திருவிழாவின் எட்டாம் நாளான இன்று இரவு 7.05 மணி முதல் 7.29 மணிக்கு மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவிலில் அம்மன் […]