மட்டக்களப்பில் கடலில் மூழ்கி பாடசாலை மாணவர்கள் இருவர் பலி!
மட்டக்களப்பு, கொக்குவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சவுக்கடி கடற்கரை பகுதியில் கடலில் குளிக்கச் சென்ற, இம்முறை சாதாரண தர பரீட்சை எழுதவிருக்கும் மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். வகுப்புக்கு செல்வதாக சனிக்கிழமை மாலை கூறிச்சென்ற மாணவர்களே இவ்வாறு கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்தவர்கள் கறுப்பங்கேணி விபுலானந்தா கல்லூரியில் இருந்து இம்முறை சாதாரண தரப் பரீட்சை எழுதவிருக்கும் 16 வயதுடைய மாணவர்கள் என கொக்குவில் பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் கறுப்பங்கேணியை சேர்ந்த டானியல் றோகித் (16), இருதயபுரத்தினை சேர்ந்த […]













