ஆசியா உலகம்

ஜப்பானில் இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் : ஒருவர் பலி!

  • May 7, 2023
  • 0 Comments

உலக நாடுகள் பலவும் சமீப காலமாக நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் ஜப்பான் நாட்டின் இஷிகாவா மாகாணத்தில் தற்போது ஒரே நாளில் அடுத்தடுத்து 2 முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதில் முதல் நிலநடுக்கமானது கடலுக்கு அடியில் சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.3 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. இதனை அடுத்து குறித்த பகுதியில், இரண்டாவது முறையும் நிலநடுக்கம் ஏற்பட்டது.  இந்த முறை […]

இலங்கை

புத்தரின் காலடியில் பச்சிளம் சிசுவை விட்டுச்சென்ற தாய்

  • May 7, 2023
  • 0 Comments

பிறந்து நான்கு நாட்களேயான சிசுவை, வத்தேகம- எல்கடுவ வீதியிலுள்ள விஹாரைக்கு அருகில் உள்ள சிறிய புத்தரின் கூண்டுக்குள் விட்டுச்சென்ற அந்த சிசுவின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.அவரை, தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, எதிர்வரும் 11ம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். அந்த பெண்ணை சிறைச்சாலையின் வைத்தியசாலையில் தடுத்து வைக்குமாறு உத்தரவிட்டுள்ள பொலிஸார், சிசுவுக்குத் தேவையான தாய்ப்பாலை பருக வேண்டுமென நீதவான் கட்டளையிட்டார். தாயின் கொடுமை எனும் குற்றச்சாட்டின் கீழ் அந்தப் பெண்ணுக்கு எதிராக […]

இலங்கை

நீர் கட்டணம் செலுத்தாத அரச நிறுவனங்களுக்கு எச்சரிக்கை!

  • May 7, 2023
  • 0 Comments

கட்டணம் செலுத்தாத அரச நிறுவனங்களுக்கு எதிர்காலத்தில் நீர் விநியோகத் துண்டிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. மேலும்இ 90 நாட்களுக்குப் பின்னர் அரச நிறுவனங்களுக்கும் தாமதக் கட்டணம் அறிமுகப்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பியல் பத்மநாத தெரிவித்துள்ளார். இலங்கையில் மொத்த நீர் நுகர்வோர் எண்ணிக்கை 29 இலட்சம் ஆகும். அந்த எண்ணிக்கையில் பெரும்பாலானோர் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக மாதாந்திர கட்டணத்தில் 50மூ […]

ஐரோப்பா

முடிசூட்டு விழாவில் ராணியார் கமிலா அணிந்திருந்த உடையில் ரகசிய பெயர்கள்

  • May 7, 2023
  • 0 Comments

முடிசூட்டு விழாவில் ராணியார் கமிலா அணிந்திருந்த வெள்ளை உடையில் சில ரகசிய பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்ததை தற்போது வெளியிட்டுள்ளனர். குறித்த உடையில், இன்னொரு முக்கிய நபராக ராணியார் கமிலாவின் வளர்ப்பு நாய்க்கும் மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. 75 வயதான ராணியார் கமிலா தமது வாழ்க்கையின் மிக முக்கிய தருணத்தில் அணிந்திருந்த வெள்ளை உடையின் சிறப்பு குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அந்த உடையில் தமக்கு மிக நெருக்கமான நபர்கள் சிலரின் பெயர்களை பொறித்திருந்ததாக தெரியவந்துள்ளது. அதாவது தமது பிள்ளைகள் மற்றும் […]

ஐரோப்பா

அவுஸ்திரேலியா குடியரசாகவேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது!

  • May 7, 2023
  • 0 Comments

மூன்றாவது சார்ல்ஸ் மன்னர் முடிசூட்டிக்கொண்டுள்ளதை தொடர்ந்து அவுஸ்திரேலியா குடியரசாகவேண்டும் என்ற வேண்டுகோள்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன. மன்னர் சார்ல்ஸிற்கு விசுவாசமாயிருப்பேன் என்ற உறுதிமொழி எடுத்துக்கொண்ட இறுதி அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிசாகத்தான் இருக்கவேண்டும் என தான் எதிர்பார்ப்பதாக அவுஸ்திரேலியாவின் குடியரசு இயக்கத்தின் தலைவர் கிரெயக்பொஸ்டர் தெரிவித்துள்ளார். எங்கள் தலைவர்கள் எங்களை பிரதிநிதித்துவம் செய்யவேண்டும் அவர்கள் எங்களிற்கு விசுவாசமாகயிருப்பதாக உறுதிமொழி எடுத்துக்கொள்ளவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவுஸ்திரேலியா குடியரசானால் நாட்டின் தலைவர் என்ற பதவியிலிருந்து மன்னர் சார்ல்ஸ் அகற்றப்படுவார் ஆனால் […]

இலங்கை

12 வயது மாணவிக்கு 55 வயது ஆசிரியரால் நேர்ந்த கொடூரம்!

  • May 7, 2023
  • 0 Comments

பாடசாலையில் 12 வயதான மாணவியை 55 வயதான ஆசிரியர் ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் 55 வயதுடைய ஆசிரியரை நேற்று (06) ஹல்துமுல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த மாணவி பாடசாலையின் கழிவறையில் வைத்து துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த ஆசிரியரால் ஏனைய மாணவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்களா என்பதை அறிய ஹல்துமுல்ல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஐரோப்பா

பிரித்தானியாவின் செவெனோக்ஸ் மாவட்ட சபைக்கு தெரிவான முதல் இலங்கை பெண்

  • May 7, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் செவெனோக்ஸ் மாவட்ட சபைக்கு இலங்கைப் பெண் தினுஷா மனம்பேரி தெரிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உள்ளூராட்சித் தேர்தலில் பிரித்தானிய பசுமைக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட அவர், செவெனோக்ஸ் மாவட்ட சபைக்குத் தெரிவான முதல் இலங்கைப் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதன்போது அவருடன் போட்டியிட்ட பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களான லாரா மாக்ஸ்டன், மார்க் லிண்டோக் ஆகியோரும் இந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும், இலங்கைப் பெண்ணான தினுஷா மணம்பேரி தேர்தல் பிரச்சாரத்தின் போது ஷானி என்ற பெயரை பயன்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா

இங்கிலாந்து உள்ளுராட்சி மன்ற தேர்தல் : தோல்வியை தழுவிய ஆளும் கட்சி!

  • May 7, 2023
  • 0 Comments

இங்கிலாந்தில் நடைபெற்ற உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களில் எதிர்க்கட்சியான தொழிற்கட்சி அதிக ஆசனங்களை  பெற்று வெற்றி பெற்றுள்ளது. பிரிட்டனின் ஆளும் பழைமைவாத (கன்சர்வேட்டிவ்) கட்சி பாரிய தோல்விளைத் தழுவியுள்ளது. இங்கிலாந்தின் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் வாக்களிப்பு கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. பிரித்தானிய பிரதமராக ரிஷி சுனாக் கடந்த வருடம் பதவியேற்ற பின்னர் அவரின் கட்சி எதிர்கொண்ட முக்கிய தேர்தல் இதுவாகும். வெள்ளிக்கிழமை முதல் வெளியான பெறுபேறுகளின்படி பிரதமர் ரிஷி சுனாக் தலைமையிலான ஆளும் பழைமைவாதக் கட்சி 40 இற்கும் அதிகமான […]

இலங்கை

12 மில்லின் ரூபாய் பெறுமதியான போதை பொருளை கடத்திய இருவர் கைது!

  • May 7, 2023
  • 0 Comments

மன்னார் – மதவாச்சி பிரதான வீதியில் உள்ள குஞ்சுக்குளம் பகுதியில் வைத்து 12 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் பயன்படுத்திய வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மன்னார்,  தள்ளாடி இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சந்தேகநபர் பயணித்த காரை இராணுவ புலனாய்வு பிரிவினர் பின்தொடர்ந்து சென்றுள்ளனர். இதன்போது வாகனத்தினுள் நூதனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் போதைப்பொருள் புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த போதைப்பொருள் 12 மில்லியன் […]

இலங்கை

விரைவில் எல்லை நிர்ணயம் குறித்த இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படும் – மஹிந்த தேசப்பிரிய

  • May 7, 2023
  • 0 Comments

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமிருந்து கிட்டத்தட்ட 400 முன்மொழிவுகள் கிடைத்துள்ளதாக அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். குறித்த பரிந்துரைகளை மதிப்பாய்வு செய்து வருவதாகவும்,  விரைவில் அவை குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பகிர்ந்து கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த மாதம் தேசிய எல்லை நிர்ணயக் குழுவின் இடைக்கால அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.  இதனை தொடர்ந்து,  தமது முன்மொழிவுகளைச் சமர்பிப்பதற்கு காலவகாசமும் வழங்கப்பட்டது. குறித்த முன்மொழிவுகளை தேசிய எல்லை நிர்ணயக் குழு பரிசீலித்து […]