மகளிர் தினத்தன்று ஆட்டம் போட்ட யுவதிகள்; அச்சத்தில் ஈரானிய பெண்கள்!
ஈரானில் பகிரங்கமாக நடனமாடிய யுவதிகளின் பாதுகாப்பு குறித்து கரிசனைகள் எழுந்துள்ளன. ஹிஜாப் அணியாமல் இப்பெண்கள் காணப்பட்டனர். தெஹ்ரானின் குடியிருப்புப் பகுதியான எக்பதானில், உயர்ந்த கட்டடங்கள் அருகிலிருந்து யுவதிகள் ஐவர் நடனமாடியுள்ளனர். நைஜீரிய பாடகர் ரேமாவின் காம் டவ்ன் எனும் பாடலுக்கு இவர்கள் நடனமாடினர்.இவர்கள் நடனமாடும் காட்சி அடங்கிய வீடியோ டெலிகிராம் மற்றும் ட்விட்டரில் வெளியாகின. சர்வதேச மகளிர் தினமான கடந்த 8ம் திகதி இந்த வீடியோ டிக்டொக் மற்றும் ஏனைய சமூக ஊடகங்களில் வைரலாக பரவிவருகிறது. ஈரானில் […]













