இலங்கை

தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து 15 இந்திய மீனவர்கள் கைது..

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 15 இந்திய மீனவர்கள் நேற்று சனிக்கிழமை (14) மாலை தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2 டோலர் படகுகளில் எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பில் நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் நேற்று சனிக்கிழமை (14) மாலை தலைமன்னார் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களும் தலைமன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்ட நிலையில் நேற்று சனிக்கிழமை இரவு தலைமன்னார் கடற்படை முகாமில் வைத்து குறித்த மீனவர்கள் அனைவரும் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.குறித்த 15 இந்திய மீனவர்களும் தற்போது தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

விசாரணைகளின் பின்னர் தலை மன்னார் பொலிஸார் குறித்த மீனவர்களை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

(Visited 2 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content