விளையாட்டு

மெஸ்ஸியின் முதல் ஆட்டத்தைக் காண 110,000 டொலருக்கு விலைபோன நுழைவுச்சீட்டு

காற்பந்து நட்சத்திரம் லயனல் மெஸ்ஸி அமெரிக்காவின் Inter Miami காற்பந்து அணியில் தமது முதல் ஆட்டத்தில் களமிறங்கவுள்ளார்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை இந்த ஆட்டம் இடம்பெறவுள்றது.

அதற்கான நுழைவுச்சீட்டு விற்பனை சூடுபிடித்துள்ளது. சில இருக்கைகளுக்கான நுழைவுச்சீட்டின் விலை 110,000 டாலர் என்று Vivid Seats இணையத்தளத்தை மேற்கோள் காட்டி தகவல் வெளியிட்டுள்ளது. MLSஇல் பதிவான வரலாறு காணாத விலையாக அது கருதப்படுகிறது.

குறைந்த விலை நுழைவுச்சீட்டுகளும் உள்ளன. அவை சராசரியாக 487 டொலருக்கு விற்கப்படுகின்றன.

மெஸ்ஸி கடந்த சனிக்கிழமை Inter Miami அணியில் சேர அதிகாரபூர்வமாகக் கையெழுத்திட்டார். அவரது ஒப்பந்தத்தின் மதிப்பு ஆண்டுக்கு 50 முதல் 60 மில்லியன் டாலர் என்று கூறப்படுகிறது.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மெஸ்ஸி ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். மெஸ்ஸியின் வருகையை ரசிகர்கள் மட்டுமல்ல உணவகங்களும் ஹோட்டல்களும் கொண்டாடுகின்றன. Miamiயிலுள்ள Hard Rock Cafe உணவகம் “Messi Chicken Sandwich” என்ற உணவை அறிமுகப்படுத்தியுள்ளது.

(Visited 7 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ

You cannot copy content of this page

Skip to content